அமாவாசை பௌர்ணமி பித்ருலோகம்



சந்திர லோகத்தில் சூரியன் வசிக்கும் காலம் அமாவாசை. அமா என்றால் அருகே என்று பொருள். சந்திரன் சூரியன் அருகே வசிப்பதால் அமாவாஸ்யா என்று அழைக்கப்படுகிறது. சந்திரன், ரோகிணியிடம் மட்டும் அன்பு பாராட்டியதால் சாபம் பெற்று கலைகளை இழந்திருக்கும் போது சூரியன் அவரிடம் வசிக்கிறார். அவரது கலைகள் பூரணமாவதால் பௌர்ணமாஸ்யா என்கிற பொருள் பட பௌர்ணமியானது. சந்திரன் கலை வளரும் காலமே வளர்பிறையாகும்.

தேய்பிறையில் 14 நாட்கள் தேவர்களும், அமாவாசையில் பித்ருக்களும் அம்ருத கலையினைப் புஜிப்பதாக ஐதீகம்.நமது மூதாதையர்கள் முறையே தந்தை, தாய், தாத்தா, பாட்டி, கொள்ளு தாத்தா, கொள்ளுப்பாட்டி உருவமாக வர்ணிக்கப்படுகின்றனர். அவர்கள் முறையே தந்தை, தாய் மற்றும் முன்னோர்களிடம் வசிப்பதையே இது குறிக்கும்.

பத்து விஸ்வதேவர்கள், 12 ஸாத்யர்கள், 14 மனுக்கள், 14 இந்திரர்கள், சப்த ரிஷிகள், 7 மருந்துகள், பின்னர் 7 வர்க்கங்களாகப் பிரிந்து 3 அக்னிகள் உண்டாகி அவை 40 அக்னிகளாக உண்டானது என்றும் ஸம்வத்ஸரம் ருது ஆகியன உலக சிருஷ்டியில் சூரியனிடமிருந்து உண்டானதாகவும் புராணம் கூறுகிறது.

-சு.இசக்கி