வைகுண்ட ஏகாதசியின் மகிமை



காஞ்சி மஹா பெரியவர், நம் சம்பிரதாயங்கள் பலவற்றுக்கு மிக எளிமையாக, உதாரணங்களுடன் விளக்கங்கள் தந்திருக்கிறார். அந்த வகையில் ஏகாதசி பற்றியும், குறிப்பாக வைகுண்ட ஏகாதசி பற்றியும் அவர் அருளிய உரை இதோ:
ஏகாதச்யாம் து கர்த்தவ்யம் ஸர்வேஷாம்
போஜ நத்வயம்மிசுத்தோபவாஸ:
ப்ரதம: ஸத்கதாச்ரவணம்

 தத:மிமி‘‘ஹே ஜனங்களே! ஸகல பிராணிகளே! ஏகாதசி புண்ணிய காலத்தன்று ஸர்வ பிராணிகளும் செய்ய வேண்டி காரியங்கள் இரண்டு; முதலாவது  சுத்தோபவாஸம்; இரண்டாவது இரவும் பகலும் ஸத்கதா ச்ரவணம்; இந்த இரண்டைத் தவிர மற்றொரு காரியத்தில் அன்று, வேறு காரியத்தில் ஒரு பிராணியும் பிரவிருத்திக்கக் கூடாது. அன்று பகல் இரவு இரு வேளைகளிலும் அன்ன போஜனமும் செய்யக் கூடாது. அப்படிச் செய்தவனுக்கு, சாஸ்திரத்தில் மகாபாவம் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தச் சாஸ்திரத்தை அடியிற் கண்டபடி அறிக.

மாத்ருஹா பித்ருஹா சைவ ப்ராத்ருஹா ததா மி
ஏகாதச்யாம் து யோ புங்க்தே பக்ஷயோருப
யோரபி மிமி- என்ற மநு வசனமே பிரமாணமாகும்.

சுக்லபக்ஷமோ கிருஷ்ணபக்ஷமோ இரண்டு பக்ஷங்களிலும் ஏற்படும் ஏகாதசி தினத்தில் எந்தப் பிராணி புஜிக்கிறானோ, அவன் தாயைக் கொன்றவனாகவும், தகப்பனைக் கொன்றவனாகவும், சகோதரனைக் கொன்றவனாகவும், தத்துவோபதேசம் செய்த ஆசார்யனைக் கொன்றவனாகவும் ஆகிறான் என்பது மேற்கண்ட சாஸ்திரத்தின் தாத்பரியமாகும்.இவ்விதம் மஹா கோரமான பாவத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால் இரண்டு பஷங்களிலும் ஏகாதசி தினத்தில் உபவாச தினத்தை அநுஷ்டிக்க வேண்டும். உபவாஸம் என்ற சப்தத்தின் பொருளோ உப ஸமீபே வாஸயதி இதி உபவாஸ : என்ற ஸமாஸத்தை அநுசரித்து, விஷ்ணுவினுடைய ஸமீபத்தில் தன் மனத்தை வஸிக்கும்படி, அதாவது, இரவும் பகலுமாக விஷ்வினுடைய கதாச்ரவணமோ, விஷ்ணுவினுடைய நாம ஸங்கீர்த்தனமோ, விஷ்ணுவினுடைய ஸ்வரூப த்யானமோ செய்துகொண்டு அன்று காலத்தைக் கழிக்க வேண்டும்.

நாத்யச்நதஸ் து யோகோஸ்தி ந சைகாந்தமநச்நத : என்ற வாக்கியத்தை அநுசரித்து, அமிதமாக, அளவு கடந்து பூஜிப்பவனுக்கோ, ஸர்வ ப்ரகாரத்திலும் ஆஹாரம் செய்யாமலிருப்பவனுக்கோ தியானயோகம் ஸித்திக்காது என்று தெரிகிறபடியால், ஏகாதசி தினத்தன்று விருத்தர்களோ பாலர்களோ, அவர்கள் பழத்தையோ க்ஷீரத்தையோ அல்பமாக உட்கொள்வதனால் தோஷம் ஏற்படாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். ஏகாதசி விரதத்தின் மகிமை மிகவும் உயர்ந்ததாக ஸ்ரீமத் பாகவதாதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸுர்ய வம்சத்தில் அம்பரீஷன் என்ற அரசன் இருந்தான். அந்த ராஜன் விஷ்ணு பக்தர்களுக்குள் பெரிய பக்தனும் ஆவான். அந்த மகாநுபாவன் ஏகாதசி தினத்தன்று சுத்தோபவாஸம் இருந்து, ச்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம் இந்த உபாயங்களால் மகாவிஷ்ணுவை ஸ்வாதீனமாகச் செய்து கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான். பகவானான மகாவிஷ்ணு அவனுடைய மேலான பக்தியைப் பார்த்து, அவனுடைய ராஜாங்கத்தை ரக்ஷிப்பதற்காக,

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா:
பர்யுபாஸதேமி
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம்
வஹாம்யஹம்மிமி

- என்று தாம் செய்த பிரதிக்கினையை அநுஸரித்து, அந்த ராஜனுடைய அரண்மனை வாசலில், தம் ஸுதர்சன சக்ரத்தைப் பிரதிஷ்டை செய்து அந்த ராஜனை ரக்ஷித்து வந்தார். அதனால் அந்த ராஜனுக்கு ஸாமந்த ராஜாக்கள் மூலமாக ஒருவிதப் பீதியும் ஏற்பட நியாயமில்லாமல் ஆகிவிட்டது.இப்படி இருக்கும் பொழுது ஒரு ஏகாதசியன்று வழக்கம் போல் சுத்தமான உபவாசத்தை அநுஷ்டித்து பகவானான விஷ்ணுவைக் கிரமப்படி ஆராதித்துவிட்டு, மறு தினத்தில் துவாதசி காலபாரணையைச் செய்ய ஸித்தமாக இருந்தான். அன்றைத் துவாதசியோ, மூர்த்தார்தாவாசிஷ்டாயாம் த்வாதச்யாம் பாரணாம் வ்ரதீ என்ற வாக்கியத்தை அநுசரித்து, ஸூரியன் உதித்து ஒரே நாழிகை மட்டும் துவாதசி மீதியாக இருந்தது. ஏகாதசி வ்ரத பல ஸித்தி துவாதசியில் பாரணை செய்தால்தான் பூர்த்தியாகும். த்ரயோதசி திதி வந்தால் பகல்போஜனத்தைத் தர்மசாஸ்திரம் நிஷேதித்திருக்கிறது.

த்ரயோதஸ்யாம் திவாபுக்திர் ப்ரஹ்மஹத்யா
ஸமா ஸ்ம்ருதா மி
ப்ரதோஷ சிவமாராத்ய ராத்ரிபுக்திர்
விமுக்கிதா மிமி

- என்ற ஸ்ம்ருதி ப்ராகாரம் திரயோதசி திதியில் பகலில் போஜனம் செய்தால், ப்ரமஹத்தி தோஷமும், ஸாயங்காலத்தில் பரமேஸ்வரனைப் பூஜித்துவிட்டு ராத்திரியில் ப்ரதம ஜாமத்தில் போஜனம் செய்வது மோக்ஷம் என்ற பலனைக் கொடுக்கக் கூடியதென்றும் சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. இந்தச் சாஸ்திரத்தை அம்பரீஷ மகாராஜா அறிந்தவனாதலால் ஒரு நாழிகை மட்டும் புச்சம் இருக்கும் துவாதசிக்குள் பாரணை செய்யவேண்டுமென்ற ஆவலுடன், எல்லா அநுஷ்டானங்களையும் அதற்குள் முடித்துக்கொண்டு, பாரணை செய்ய ஸித்தனானான்.

அந்தத் தருணத்தில், துர்வாஸ மகரிஷி தம் சிஷ்யர்களுடன் ராஜனுடைய கிருஹத்தில் போஜனம் செய்ய வேண்டுமென்ற விருப்பமுள்ளவராக அதிதியாக வந்து சேர்ந்தார். ராஜன் பரம பக்தியுடன் துவாதசி புண்ணியகாலத்தில், சிவபக்த அக்ரேஸரரான துர்வாஸ மஹரிஷி போஜனத்தைக் கருதி வந்தது நமது பெரிய பாக்கியத்தை ஸூசிக்கிறது என்று ஆனந்தித்து, மஹரிஷியை வரவேற்று உபசரித்தான். மஹரிஷியோ, தாம் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்யவேண்டுமென்ற ஆவலுடன் ராஜனிடம் அதைத் தெரிவித்துவிட்டு தம் சிஷ்யர்களுடன் ஸரயூ நதிக்குச் சென்றார்.

ராஜன்,‘‘துவாதசி அல்பமாக இருப்பதானால், சீக்கிரம் தங்கள் ஆகமனத்தை எதிர்பார்க்கிறேன்‘‘என்று பிரார்த்தித்தான். மஹரிஷி, ‘‘ஒரு க்ஷணத்திற்குள் வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு நதிக்குச் சென்றார். சொன்னபடி மஹரிஷி துவாதசி முடிவதற்குள் வரவில்லை. ராஜனோ, துவாதசி போய்விடுமே என்று கவலையை அடைந்தான். துவாதசி பாரணை செய்யாமற் போனாலோ, ஏகாதசி வ்ரதபலன் ஸித்திக்காது என்று சொன்னோம்.

அதற்காக, அசிதம் ச அநசிதம் ச பவதி என்ற சாஸ்திரமானது, ஸாளக்ராம அபிஷேக தீர்த்தத்தை ஒரு உத்தரணி உட்கொண்டால், துவாதசி பாரணை செய்த பலனும் ஸித்திக்கும்; அதிதியை விட்டுப் போஜனம் செய்தான் என்ற தோஷமும் வராது என்ற தாத்பர்யத்தைக் கூறுகிறபடியால் அதை அநுசரித்து ஸாளக்ராம தீர்த்தத்தை ப்ராசனம் செய்து ஏகாதசி விரத பலன் ஸித்திக்கும்படியாகவும் செய்துகொண்டு, அன்ன போஜனத்திற்காகத் துர்வாஸ மஹரிஷியை எதிர்பார்த்துக்கொண்டு வந்தான்.

மஹரிஷி சிஷ்யர்களுடன் சற்று நேரம் கழித்து வந்து, ஸாளக்ராம தீர்த்தத்தை ராஜன் ப்ராசனம் செய்ததற்காக, ‘‘மகா தபஸ்வியான என்னை முதல்முதலில் பூஜிக்கச் செய்யாமல் நீ பாரணை செய்தது தவறு’’ என்று கோபித்துச் சபிக்க ஆரம்பித்தார்.

ராஜன் எவ்வளவோ அவருடைய காலில் விழுந்து மேற்காட்டிய சாஸ்திர வசனத்தையும் பிரமாணமாக அவரிடம் நிரூபணம் செய்து, ‘‘ஸாளக்ராம தீர்த்தத்தை மட்டும் நான் ப்ராசனம் செய்தேன்; அன்ன போஜனம் நான் செய்யவில்லை; க்ஷமித்துக்கொள்ள வேண்டும்’’ என்று கெஞ்சிக் கதறியும் துர்வாஸ மஹரிஷி கொஞ்சமேனும் பொறுமையை அடையாமல் பரம கோபத்தை அடைந்து தம்முடைய ஜடையைத் தட்டி அதிலிருந்து ஒரு பிசாசை (பூதத்தை) தபோமஹிமையினால் ஸ்ருஷ்டித்து, ராஜனைப் பக்ஷிக்கும்படி ஏவினார்.

உடனே ராஜனுடைய யோகக்ஷேமத்தை வஹிக்க, பகவானான விஷ்ணுவினால் அரண்மனை வாசலில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த சக்கரம், தான் ராஜனை ரக்ஷிப்பதற்காக ஆக்ரோஷத்தை அடைந்து, துர்வாஸரால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிசாசைத்தான் பக்ஷிப்பதற்கு சப்தித்துக்கொண்டு வெளிக்கிளம்பிற்று. பிசாசோ, துர்வாஸ மஹரிஷியினிடம் சென்று, ‘‘விஷ்ணு பக்தனான அம்பரீஷணிடம் நான் பிரவேசிக்கச் சக்தியற்றவனாகி விட்டேன்; ஸுதர்சன சக்ரம் என்னை விரட்டிக்கொண்டு வருகிறது. அந்தச் சக்கரத்துடன் எதிர்த்துப் போராட எனக்குச் சக்கி இல்லை. என் பசியையோ அடக்கவும் முடியவில்லை. எனக்கு ஆஹாரம் இப்பொழுது தேவையாக இருக்கிறது. உம்மையே நான் பக்ஷிக்கிறேன்’’ என்று செல்லி, துர்வாஸரையை பலாத்காரம் செய்து பக்ஷிக்க ஆரம்பித்தது.

துர்வாஸ மஹரிஷி தமது தபோமஹிமையால் விஷ்ணு பக்தனைக் கொல்லப் பிசாசை ஸ்ருஷ்டித்தாரே தவிர, அதை உபஸம்ஹாரம் செய்ய சக்தியற்றவராக ஆகிவிட்டார். தம் சிஷ்யர்களோடு
துர்வாஸ மஹரிஷி பிசாசுக்குப் பயந்து ஓட ஆரம்பித்துவிட்டார். பிசாசோ துர்வாஸரை விரட்டிக்கொண்டு ஓடுகிறது. பிசாசையோ ஸுதர்சன சக்ரம் பக்ஷிக்க விரட்டுகிறது. இவ்வித துர்வாஸ மஹரிஷி ஒரு லோகம் மீதியின்றி ஓடியும், தம் ஆத்மாவைத் தாம் ரக்ஷித்துக்கொள்ளக் கஷ்டப்பட்டும் முடியவில்லை. இந்திரலோகம், பிரம்மலோகம், கைலாஸம் முதலான ஸ்தலங்களுக்குச் சென்று, தம்மைக் காப்பாற்றத் தமக்கு யாராவது உதவி செய்வானோ என்று எதிர்பார்த்தும், ஒருவராலேயும் இவரை, இவர் ஸ்ருஷ்டித்த பிசாசினின்றும் ரக்ஷிக்க முடியாமல் ஸுதர்சன சக்ரத்திற்குப் பயந்து பின்வாங்கிவிட்டார்கள்.

கடைசியில் வைகுண்டம் சென்று மகாவிஷ்ணு வின் காலில் விழுந்தார். பகவானான விஷ்ணு, அஹம் பக்தபராதீந:என்றதனால், ‘‘ஹே பிராம்மணா!நான் பக்தனுக்கு உட்பட்டவன். உம்மை ரக்ஷிக்கும் விஷயத்தில் எனக்கு ஸ்வாதந்த்ரியம் இல்லை. சரணாகதி செய்தவனை நான் ரக்ஷிக்கிறேன் என்று சொன்னதும், எனக்கு நேரில் அபசாரம் செய்தவனைக் குறித்து மட்டுமே தவிர, என் பக்தனுக்கு அபசாரம் செய்தவனைக்கூட, என்னை சராணகதி செய்ததற்காக, நான் ரக்ஷிக்கிறேன் என்று அதற்கு அர்த்தமில்லை. ஆகையால், என்னால் ஒன்றும் ஸாத்தியமில்லை. அம்பரீஷனிடம் போம்’’ என்று துர்வாஸ மஹரிஷியை மஹாவிஷ்ணுவும் கைவிட்டுவிட்டார்.

துர்வாஸ மஹரிஷி கதியில்லாமல் அம்பரிஷி மகாராஜனிடத்தில் சிஷ்யர்களுடன் சரணாகதி செய்ய வந்தார். ராஜனோ, ‘‘பிராம்மணோத்தமர்கள் தாங்கள். என்னை தாங்கள் சரணாகதி செய்யக் கூடாது. நான் எந்த அபராதமும் செய்யவில்லையே; தங்களைப் போன்ற தபஸ்விகளுக்கு இவ்விதம் கோபம் வரலாமா?’’ என்று சொல்லி க்ஷமாபணம் செய்துவிட்டு, மஹரிஷியின் காலில் விழுந்து ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்த

திவ்ய போஜனாதிகளைச் செய்து வைத்து, துர்வாஸ மஹரிஷியினால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிசாசையும் தன் பக்திமகிமையினால் உபஸம்ஹாரம் செய்து, ஸுதர்சன சக்ரத்தையும் பொறுத்துக்கொள்ளும்படி பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டு, பிராம்மணோத்தமருடைய ஆசீர்வாதத்திற்கும் பாத்திரமானான்.இந்தக் கதை ஸ்ரீமத் பாகவதத்தில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஏகாதசி விரதத்தை அநுஷ்டித்தவனுக்கு மகாவிஷ்ணு ஸுலபமாகிறார் என்பதே இந்தக் கதையின் தாத்பர்யமாகும். விரதங்களுக்குள் ஏகாதசி விரதமே நித்ய விரதமாயும், உயர்ந்த விரதமாயும் ஆகும். ஸர்வ பிராணிகளும் அதை அநுஷ்டித்தே தீரவேண்டும். அந்த விரதத்தை அநுஷ்டிக்கிறவர்களுக்கு மோக்ஷம் கையிலுள்ள நெல்லிக்கனி போல் ஸுலபமாகக் கிடைக்கும்.

ஏகைவ தஸா அவஸ்தா யஸ்யாம் திதௌ வ்ரதாநுஷ்டாநதத்பராணாம் நரணாம் ஏகாதசீ என்ற ஸாமஸத்தை அநுசரித்து, எந்தத் திதியில் மேற்சொன்ன விரதத்தை அநுஷ்டிக்கிற மனிதர்களுக்கு முக்தி என்ற ஒரே நிலையைத் தவிர வேறு பிறப்பு இறப்பு என்ற அவஸ்தை இல்லாமல் ஆகுமோ அந்தத் திதிக்கு ஏகாதசி பெயர் ஏற்பட்டது என்று தெரிகிறபடியால், அந்தத் திதியில் உபவாஸம் என்ற விரதத்தை அநுஷ்டிப்பவர்களுக்கு மோக்ஷம் என்ற பரம புருஷார்த்தம் கைக்கு எட்டினதாகவே ஆகிறது என்பது ஸித்தமாகிறது.

அதிலும் வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமானது. மற்ற ஏகாதசிகளில் உபவாஸம் முதலான விரதத்தை அநுஷ்டானம் செய்யாமல் தவறினவர்கள், வைகுண்ட ஏகாதசியன்றாவது அந்த விரதத்தை அநுஷ்டித்தார்களேயானால், மற்ற ஏகாதசிகளிலும் விரதாநுஷ்டானம் செய்தவர்களாகவே அவர்களைக் கருதி வைகுண்டத்தில் நித்யஸூரிகளுடைய பதவியை அளிப்பதில் பகவான் நியதராக இருக்கிறார்.

ஒவ்வொரு வருஷத்திலும், தனுஸ்ஸில் ஸூரியன் இருக்கும்பொழுது சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசியன்று மகாவிஷ்ணு தம் சயனமான ஆதிசேஷ பகாவனிடமிருந்து யோகநித்தியிலிருந்து விழித்துக் கொண்டு, எவர் எவர் விரதாநுஷ்டானம் செய்தவர்கள், மோக்ஷத்தை யாருக்கு அளிக்க வேண்டும் என்று கவனிக்கும் தினமானதால், அன்றாவது இந்த விரதத்தை அநுஷ்டித்து, மகாவிஷ்ணுவினுடைய ப்ராஸத்திற்குப் பாத்திரராக வேண்டுமென்று கோருகிறோம்.

ஏகாதசிக்கு இரட்டை போஜனமா ?
ஏ காதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம்
போஜன த்வயம்

இது ஒரு ஸ்லோகத்தின் முதல் பாதி. இதற்கு என்ன அர்த்தம்? “ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம்’’ என்றால் “ஸகல ஜனங்களாலும் ஏகாதசியன்று இன்னவாறு செய்யப்பட வேண்டும்’’ என்று அர்த்தம்.
என்ன செய்யப்பட வேண்டும்?
“போஜன த்வயம்’’ என்று ‘ஆன்ஸர்’வருகிறது.

அர்த்தம் புரிகிறதோல்லியோ? ‘த்வயம்’என்றால் இரண்டு. ‘போஜன த்வயம்’ இரண்டு தரம் சாப்பாடு.
“எல்லாரும் ஏகாதசியன்று இரண்டு தடவை போஜனம் செய்ய வேண்டியது’’ என்று அர்த்தமாகிறது.

இதென்ன? ஏகாதசி என்றால் பட்டினி, தண்ணீர்கூட இல்லாமல் நிர்ஜலமாயிருக்க வேண்டும் என்பார்கள். இங்கேயானால் ஒரு தடவை மட்டுமில்லை, இரண்டு தடவை  போஜன த்வயமாக  சாப்பிட்டாக வேண்டுமென்று சொல்லியிருக்கிறது?இது விசித்ரமாக வார்த்தை விளையாட்டுபண்ணியிருக்கும் ஸ்லோகம். இதில் “போஜன’’ என்று வருகிறதே அதை “போ’’, “ஜன’’ என்று இரண்டு வார்த்தைகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஸரியான அர்த்தம் கிடைக்கும்.

“போ’’ என்றால் “ஓய்!’’ என்று கூப்பிடுவதாக அர்த்தம்.
“போ! ஜன! “என்றால்’’ ஓ, ஜனங்களே!’’என்று எல்லா மக்களையும் கூப்பிடுவது.
இப்போது நான் சொன்ன ச்லோகத்துக்கு
(பாதி ஸ்லோகத்துக்கு) என்ன அர்த்தமாகிறதென்றால்
“ஹே ஜனங்களே! ஏகாதசியில் எல்லாராலும் இரண்டு செய்யத் தக்கன  அதாவது இரண்டு கார்யம் செய்யத் தக்கன’’.
இரண்டு போஜனம் என்று அர்த்தம் இல்லை. இரண்டு காரியம் என்று ஆகிறது.
ஏகாதசியில் ஸகல ஜனங்களும் செய்ய
வேண்டிய தான அந்த இரண்டு காரியங்கள் என்ன?

அதைச் ச்லோகத்தின் பின் பாதி சொல்கிறது:
கத்தோபவாஸ : ப்ரதம : ஸக்கதா ச்ரவணம் தத :
முதல் காரியம் உபவாஸம். இரண்டாவது காரியம் பகவத் கதைகளைக் கேட்பது.
ஏகாதச்யாம் து காத்வ்யம் ஸர்வேஷாம்
போஜந த்வயம்

கத்தோபவாஸ : ப்ரதம : ஸக்கதா ச்ரவணம் தத :
சகல ஜனங்களும் ஏகாதசியன்று சுத்த உபவாஸமிருக்க வேண்டும்; ஈஸ்வர மஹிமைகளைக் கேட்க வேண்டும். 

பண்டிகை, வ்ரதம்; ஏகாதசிச் சிறப்புப கவத் பரமாகவே பண்டிகைகள் என்று சிலதை வைத்திருப்பதோடு வ்ரதங்கள் என்றும் சிலவற்றை வைத்திருக்கிறது. பண்டிகை என்பது நாம் ஆடை ஆபரணங்களுடன் அலங்காரம் பண்ணிக்கொண்டு, பகவானுக்கு அலங்காரம் பண்ணிப் பூஜை செய்து, அவன் ப்ரஸாதமாக அறுசுவை உணவு சாப்பிட்டு ஆனந்தமாயிருப்பது  போகிப்பண்டிகை, தீபாவளிப் பண்டிகை மாதிரி.

புது வஸ்த்ராதிகள், அலங்காரம், பஞ்சபக்ஷ்ய போஜனம் முதலியன இல்லாமல், வழக்கமாகச் சாப்பிடுகிற மாதிரிக்கூட இல்லாமல், நியமத்தோடு உபவாஸமிருந்து பூஜை பண்ணுவது வ்ரதம். க்ருத்திகை வ்ரதம், ஷஷ்டி வ்ரதம், சதுர்த்தி வ்ரதம், ரிஷிபஞ்சமி வ்ரதம், ப்ரதோஷ வ்ரதம், ஸோமவார வ்ரதம், ச்ரவண வ்ரதம், பயோவ்ரதம், இது எல்லாவற்றையும்விட ஸர்வஜன அநுஷ்டானமாக ஏகாதசி வ்ரதம் என்று பல ஏற்பட்டிருக்கின்றன. எல்லா மதங்களிலுமே யீமீணீstவீஸீரீ, யீணீstவீஸீரீ என்று இந்த இரண்டும் இருக்கின்றன.

மற்ற வ்ரத தினங்களிலோ பூஜைக்கு அப்புறம் ஒரு பொழுதாவது பலஹாரம் பண்ணலாமென்றிருக்கிறது. ஏகாதசியில்தான் பூர்ண உபவாஸம்.மற்ற வ்ரதங்களைப் புராண, ஆகமங்கள் சொல்கின்றன. அதில் சிவபரமான புராணாகமங்கள் சொல்பவைகளை வைஷ்ணவர்கள் அநுஷ்டிக்க மாட்டார்கள்;வைஷ்ணவ கிரந்தங்களில் சொல்லியுள்ளதை சைவர்கள் செய்ய மாட்டார்கள். ஏகாதசியோவென்றால் ஒவ்வொரு sமீநீt மட்டும் எடுத்துக்கொள்ளும் புராண ஆகமங்களில் மட்டுமின்றி ஹிந்து என்று பெயர் இருக்கிற அத்தனை பேருக்கும் பொதுவான தர்ம சாஸ்திரங்களிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் இதை ஸர்வஜன அநுஷ்டானமான வ்ரதம் என்று சொன்னேன்.

விஷ்ணு நித்ரை செய்து கொண்டிருந்தபோது லோகத்தை ஹிம்ஸை பண்ணிய ஒரு அஸுரனைக் கோல்வதற்காக அவருடைய சரீரத்திலிருந்தே ஸ்த்ரீ ரூபமாக ஒரு சக்தி வெளியே போய் ஸம்ஹாரம் செய்துவிட்டு வந்ததாகவும், விழித்துக் கொண்ட பகவான் அவளுக்கே ஏகாதசி என்று பேர் கொடுத்து இந்த ஏகாதசி வ்ரதத்தை ஏற்படுத்தினாரென்றும் பாத்ம புராணத்தில் கதை வருகிறது.

மஹாவிஷ்ணு கூர்மமாகவும், தன்வந்திரியாகவும், மோஹினியாகவும் அவதாரங்கள் எடுத்து, க்ஷீராப்தியில் அம்ருதம் கடையப் பண்ணி அதை எடுத்துக் கொடுத்த நாளே ஏகாதசி என்பதாலும் அதை பொதுவில் விஷ்ணு ஸம்பந்தமுள்ளதாக நினைக்கிறோம். ஆனால், இந்த அம்ருத மதன ஸமயத்தில் முதலில் உண்டான காலகூட விஷத்தைப் பரமேஸ்வரன் புஜித்ததை முன்னிட்டுத்தான் அன்று எவரும் சாப்பிடக் கூடாது என்று ஏற்பட்டிருப்பதாக சைவர்கள் சொல்வதுண்டு.

இப்படி சைவம், வைஷ்ணவம் இரண்டுக்கும் ஏற்கத் தக்கதாயிருப்பதோடு ஹிந்துவாகப் பிறந்தவனில் எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டவனாயினும், எந்த ஜாதியைச் சேர்ந்தவாயினும் ஸகலருக்குமான வாழ்க்கை விதிகளைப் போடுகின்ற தர்மசாஸ்த்ரமும் ஏகாதசி உபவாஸத்தை விதித்திருப்பது அதன் விசேஷத்தைக் காட்டுகிறது.தர்ம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் உபவாஸ நாட்களைச் சொல்கிறேன். ஒவ்வொரு பக்ஷத்திலும் வரும் ஏகாதசியன்று முழுப்பட்டினி கிடக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை, அமாவாஸ்யை, பௌணர்மி ஆகிய நாட்களில் பகலில் மட்டும் போஜனம் செய்து இரவில் உபவாஸமிருக்க வேண்டும்.

ஒவ்வொரு பக்ஷத்திலும் அஷ்டமியிலும் சதுர்த்தசியிலும் பகலில் சாப்பிடாமல், ராத்திரி மட்டும் ஆஹாரம் பண்ண வேண்டும்.ராமநவமி, கோகுலாஷ்டமி, சிவராத்திரி ஆகியனவும் பூர்ண உபவாஸ தினங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், சிவராத்திரியில்தான் இதை ஓரளவுக்கு விதிப்படிச் செய்வதாகவும் மற்ற இரண்டு தினங்களில் பூஜைக்கு அப்புறம் சாப்பிடுவதாகவும் (கிருஷ்ண ஜயந்தி பூஜை ராத்ரியில் செய்யப்படுவதால் பலஹாரம் செய்வதாகவும் இதில் ஏகப்பட்ட பக்ஷண தினுஸுகள் சேர்ந்துவிடும்) நடந்து விடுகிறது.

குருவார வ்ரதம் என்பது நடைமுறையில் பரவியிருக்கிறது.தக்ஷிணத்தில் எல்லாவற்றையும்விட அதிக வழக்கிலிருப்பது சனிக்கிழமை வ்ரதம்தான். ரொம்பப் பேர் அன்று ராத்ரி போஜனம் பண்ணுவதில்லையென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேங்கடரமண ஸ்வாமியை உத்தேசித்து இந்த வ்ரதம் ஏற்பட்டிருக்கிறது. “ கலௌ வேங்கடநாயக :“ (கலியுகக் கடவுள் ஏழுமலை யானே) என்பதற்கேற்க, அவரது வ்ரதமே வெகுவாக அநுஷ்டானத்திலிருக்கிறது  சாஸ்த்ரத்தில் அது இல்லாவிட்டாலும்.

இதேபோல ஸோமவார வ்ரதமும் இங்கே சைவர்களிடையேயும், ஸ்மார்த்தர்களிடையேயும் ஓரளவு நிறையவே வழக்கிலிருக்கிறது. வடக்கேயோ சைவ வைஷ்ணவ வித்யாஸமில்லாமல் எல்லோருமே ஸோமவார விரதமிருக்கிறார்கள். அதனால்தான் லால்பஹாதூர் சாஸ்திரிகூட ரொம்பவும் உணவு நெருக்கடி ஏற்பட்டபோது எல்லாரும் திங்கட்கிழமை உபவாஸமிருப்பது என்று வைத்துக்கொள்ள வேண்டுமென்று சொன்னார். திங்கட்கிழமை ராத்ரி ராஜாங்க விருந்துகள் நடத்துவதில்லை என்றேகூட நிறுத்தி வைக்கப்பட்டது.

இப்படி ராஜாங்க ரீதியிலேயே ஸோமவார ‘ஒரு பொழுது‘விதிக்கப்பட்டதிலிருந்து, உபவாஸங்களுக்கு சாஸ்த்ரத்தில் சொன்ன பலன்களோடு உணவுப் பிரச்னையை குறைப்பதில் பங்கு இருக்கிறதென்பதும் புதிதாகத் தெரிய வந்திருக்கிறது. சாஸ்த்ரப் பிரகாரம் எல்லோரும் உபவாஸாதிகளை அநுஷ்டித்தால் உணவிலே நமக்கு எப்போதும் ‘ஸர்ப்ளஸ்’, ஏற்பட்டு, ‘எக்ஸ்போர்ட்’ பண்ணி ‘எக்ஸ்சேஞ்ச்’ கூட நிறைய ஸம்பாதித்து விடலாம்!

சாந்த்ராயணம் என்னும் ஒரு வ்ரதம் உண்டு. உடம்பைப் போட்டு ரொம்ப வருத்திக் கொள்ளப்படாது தான் என்பது நம் மதக் கொள்கையானாலும், எத்தனை ஸாதனைகள் பண்ணியும் சித்த சுத்தி வராதவர்கள், தங்களுக்கு மற்றவர்களைவிட ஜாஸ்தியாயிருக்கிற பூர்வ பாப கர்மாதான் இப்படிப் பழி வாங்குகிறதென்று புரிந்து கொண்டு அதைக் கழிப்பதற்காக உடம்பை வருத்திக் கொண்டு சில அநுஷ்டானங்களைப் பண்ணும்படி சாஸ்த்ரம் விதிக்கிறது. இதற்கு ‘க்ருச்ரம்’ என்று பெயர்.

இப்படிப் பண்ணினால் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் அதற்குப் பதில் ‘க்ருச்ர ப்ரதிநிதி‘யாக இத்தனை ஆயிரம் காயத்ரி பண்ண வேண்டும் என்றும் இருக்கிறது. இப்படி ‘ஸ்ப்ஸ்டிட்யூட்’டைச் சொல்லிவிட்டதால்,  இந்த ‘ஸப்ஸ்டியூட்‘டுக்கும் ‘ஸப்ஸ்டிட்யூட்’, அதற்கும் ‘ஸப்ஸ்டியூட்’ என்று போய், ஒரு கோதானம் பண்ணிவிட்டால் அது க்ருச்ரத்துக்கு ஸமானம் என்று ஆகி பசுவுக்குப் பதில் அதன் விலையைத் தக்ஷிணையாகத் தருவதாக ஆரம்பித்து, இந்தத் தக்ஷிணையையும் குறைத்துக் கொண்டே போய், தற்போது பரிஹாஸத்துக்கு இடமாக, ஒரு பிராம்மணனுக்கு ஆறே காலணா தக்ஷிணை கொடுத்துவிட்டால் க்ருச்ரம் அநுஷ்டித்தாகி விட்டது என்று வைத்துக் கொண்டிருக்கிறோம்!

பாப பரிஹாரமாக உடம்பை வருத்திக் கொள்வதற்காகவே சாந்த்ராயண விரதம் ஏற்பட்டிருக்கிறது. சந்திரகலை வளர்வது தேய்வதைப் பொறுத்து போஜனம் செய்யும் அன்ன கவளத்தின் எண்ணிக்கையை அமைத்துக் கொள்வதுதான் சாந்த்ராயணம்.இதை ஆரம்பிக்கிற திதியையட்டி இரண்டு தினுஸுகள். ஒன்றை ‘கட்டெறும்பு சாந்த்ராயணம்’ என்றும், மற்றதை ‘கோதுமை சாந்த்ராயணம்’என்றும் வேடிக்கையாகச் சொல்லலாம். கட்டெறும்பு எப்படியிருக்கிறது? தலை பெருத்து ஆரம்பிக்கிறது; அப்புறம் நடுவில் சிறுத்துத் தேய்ந்துவிடுகிறது;

மறுபடி பின்பாதி பெருத்துக் கொண்டு போகிறது. இதே மாதிரி ஒரு தினுஸு சாந்த்ராயணத்தைப் பௌர்ணமியன்று ஆரம்பித்து, அன்று பதினைந்து கவளம் சாப்பிடவேண்டும். மறுநாளான க்ருஷ்ணபக்ஷப் பிரதமையன்று பதினாலு கவளம், அதற்கு மறுதினமான த்விதியை பதின்மூன்று கவளம் என்று இப்படியே குறைத்துக்கொண்டே போய் அமாவாஸ்யையன்று முழுப்பட்டினி கிடக்க வேண்டும்;

அப்புறம் மறுதினமான சுக்லபக்ஷப் பிரதமையன்று ஒரு கவளம், த்விதியைக்கு இரண்டு கவளம் என்று ஏற்றிக் கொண்டே போய் பௌர்ணமியில் பதினைந்து கவளம் என்று முடிக்க வேண்டும்.கோதுமை எப்படியிருக்கிறது?ஊகமுள் மாதிரி சிறுத்து ஆரம்பிக்கிறது. நடுவிலே பெருத்து மறுபடி சிறுத்து முடிகிறது. இதேபோல் சாந்த்ராயண நியமத்தை சுக்லபக்ஷப் பிரதமையில் ஆரம்பித்து, அன்றைக்கு ஒரே ஒரு கவளம் போஜனம் செய்யவேண்டும்.

அப்புறம் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு கவளம் கூட்டிக்கொண்டே போக வேண்டும்.பௌர்ணமியன்று பதினைந்து கவளமாகும். அதற்கு மறுநாளிலிருந்து கிருஷ்ணபக்ஷம் பூராவும் ஒவ்வொரு கவளமாகக் குறைத்துக் கொண்டே வந்து அமாவாஸ்யையன்று சுத்த உபவாஸத்துடன் முடிக்க வேண்டும்.சாந்த்ராயணத்தில் முழுப்பட்டினி கிடக்கும் நாள் தவிர மற்ற தினங்களில் ஒரே வேளைதான் சாப்பிட வேண்டும்  அன்றைக்கு எத்தனைக் கவளமோ
அந்தக் கணக்குப்படி.

விரதங்களைப் பொதுஜனங்கள் ‘ஒரு பொழுது’ என்பார்கள். அநேகமாக பகலில், அன்னம் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதையும் இரவில் இட்லி, தோசை போன்றவற்றைச் சாப்பிடுவதையும் வ்ரதாநுஷ்டானமாக நினைக்கிறார்கள். சாஸ்திரப் பிரகாரம், அன்னத்துக்கு பதில் இப்படி வயிறு நிறைய, நல்ல புஷ்டியுள்ள இட்லி, தோசை இத்யாதிகளைச் சாப்பிடுவது உபவாஸமாகாது. “பல (ஆ) ஹாரம்’’ என்று அதில் சொல்லியிருக்கிறபடி வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுவதுதான் நிஜமான உபவாஸம்.

ஏகாதசியின் ஏற்றம்
வ் ரதோபவாஸங்களில் உச்ச ஸ்தானத்தில் இருப்பது ஏகாதசி.
ந காயத்ர்யா : பரம் மந்த்ரம் ந மாது :
பர தைவதம் *
ந காச்யா : பரமம் தீர்த்தம் நைகாதச்யா :
ஸமம் வ்ரதம் **
‘காயத்ரிக்கு மேலே மந்தரமில்லை;

அம்மாவு க்கு மேலே தெய்வமில்லை (தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை); காசிக்கு மேலே தீர்த்தமில்லை’ என்று சொல்லிக் கடைசியில் ‘ஏகாதசிக்கு ஸமானமாக வ்ரதுமெதுவுமில்லை’ என்று முடிகிறது. மற்றதற்கெல்லாம் ‘மேலே’ ஒன்றுமில்லை என்பதால் அவற்றுக்கு ‘ஸமமாக’ ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்று ஆகிறது. ஆனால், வ்ரதங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஏகாதசிக்கு ‘மேலே’ மட்டுமில்லாமல், அதற்கு ‘ஸமமாக’க் கூட எதுவுமில்லையென்று ரொம்பவும் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறது.

அஷ்ட வர்ஷாதிக : மர்த்ய :
 அபூர்ணாசீதி வத்ஸர :*
ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ :
 உபயோ அபி **

என்று தர்ம சாஸ்த்ரம் கூறுகிறது. அதாவது, மநுஷ்யராகப் பிறந்தவர்களில் எட்டு வயஸுக்கு மேல் எண்பது வயகுக்கு உட்பட்ட எல்லோரும் இரு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருக்க வேண்டும் என்று அர்த்தம். எந்த ஸம்ப்ரதாயக்காரன், எந்த ஜாதிக்காரன், ஆணா பெண்ணா என்ற வித்யாஸமில்லாமல், ‘மர்த்ய’, அதாவது, மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் ஏகாதசி உபவாஸம் அநுஷ்டிக்க வேண்டும் என்று இது சொல்கிறது.

ரொம்பவும் கருணையோடு குழந்தைகளையும், தள்ளாத கிழவர்களையும் சிரமப்படுத்த வேண்டாமென்றுதான் எட்டு வயஸுக்குக் கீழே இருப்பவர்களுக்கும், எண்பது வயஸுக்கு மேலே போனவர்களுக்கும் விதிவிலக்குக் கொடுத்திருக்கிறது. அவர்கள் உபவாஸம் இருக்கக் கூடாது. என்று கண்டிப்புச் செய்ததாக அர்த்தமில்லை.

 முடிந்தால் அவர்களும் இருக்கலாம். முடியவில்லை என்பதால் இல்லாவிட்டாலும் பாதகமில்லை என்று அர்த்தம். மஹாராஷ்டிரம் முதலிய இடங்களில் ஏகாதசியன்று பச்சைக் குழந்தைக்குக்கூட பால் கொடுக்காத தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள்; அந்தக் குழந்தைகளும் அவர்களுடைய நம்பிக்கையிலேயே நன்றாக இருந்திருக்கின்றன என்று சொல்வார்கள். இத்தனை ‘எக்ஸ்ட்ரீம் டிஸிப்ளி’னை தர்ம சாஸ்திரகாரகர்களே எதிர்பார்க்கவுமில்லை; ரூலாகப் போடவுமில்லை.

பகவான் கை கொடுப்பான் என்று நம்பி தைர்யமாகப் பூர்ண நியமத்தோடுதான் ஆரம்பிக்க வேண்டும். அப்படியும் முடியாவிட்டால் வீம்பாகப் பட்டினி கிடந்து தேஹ ச்ரமத்தையும் மனஸ் கஷ்டங்களையும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏகாதசி தவிர மற்ற உபவாஸ தினங்களில் ஒரே பொழுது பலஹாரம் (சாஸ்த்ரீய பலஹாரத்தைச் சொல்லாமல், தோசைஇட்லி பலஹாரத்தைத்தான் சொல்கிறேன்) செய்யலாம். இன்னொரு பொழுது சாஸ்தீரிய பலஹாரமான பழம், பால் மட்டும் சாப்பிடலாம். முடியாதவர்கள் ஒருபொழுது அன்னம், ஒருபொழுது தோசை இட்லி மாதிரி பலஹாரம் பண்ணலாம். ஆனால், முழு நியமப்படி மாற்றிக் கொள்ள முயற்சி பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம். அது ரொம்பவும் கஷ்டமும். ஸாத்விகமான பானங்கள் மட்டும் பண்ணுவது அடுத்தபடி. அதற்கும் அடுத்தப்படி நிஜப் பலஹாரமாகப் பழத்தோடு பால் சாப்பிடுவது.

அப்புறம் ஒருவேளை மட்டும் பற்றுப்படாத ஸத்துமா, பூரி மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால் ஆஹாரம் செய்வது. இன்னம் ஒருபடி கீழே, ஒருவேளை பக்வமான, புஷ்டியான இட்லி, தோசை, பொங்கல், உப்புமா இத்யாதியும் இன்னொரு வேளை பால் பழமும் சாப்பிடுவது.

இதற்கும் கீழே போகப்படாது. அதாவது ஒரு வேளைகூட அன்னம் சாப்பிடுவதாக இருக்கப்படாது. மற்ற உபவாஸங்களில் அதமபக்ஷமாக ஒரு வேளை அன்னம், ஒரு வேளை இட்லி, தோசை என்று வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஏகாதசியைக் கொண்டு வந்துவிடக் கூடாது. ஏகாதசியில் அன்னத்தைச் சாப்பிட்டால் பிராயச்சித்தமே கிடையாது என்றிருக்கிறது. சிலவிதமான நோயாளிகள், பலஹீனர்கள், அன்னம் தவிர எதுவுமே ஜெரித்துக் கொள்ள முடியவில்லையென்று நிர்பந்தம் ஏற்பட்டால் சாதத்தைக் கஞ்சி வடிக்காமல் ஹவிஸ்ஸாகப் பண்ணி அதில் உப்பு, புளி, காரம் எதுவுமே சேர்க்காமல் ஒருவேளை மட்டும் ஸ்வல்பம் ஏகாதசியன்று சாப்பிடலாம்.

ரொம்பவும் அசக்தமானவர்களுக்குத்தான் இந்த relaxation. மற்றவர்களுக்கில்லை. அன்று ஒருவன் சாப்பிட்டால் அதில் ஒவ்வொரு பிடியிலும் நாயின் அமேத்யத்துக்கு ஸமமான பாவத்தைச் சாப்பிடுகிறான் என்று மிகவும் கடுமையாகவே சொல்லியிருக்கிறது: ப்ரதிக்ராஸம் அலௌ புங்க்தே கிஷ்பிஷம் ச்வாந விட் ஸமம் .

ஏகாதசிகளின் பெயர்கள் ஒரு வருஷத்துக்கு 365 நாளல்லவா? இதனால் இருபத்துநாலு பக்ஷத்துக்குமேல் சில நாட்கள் வருஷத்தில் எஞ்சி நிற்கும். இது காரணமாகச் சில வருஷங்களில் இருபத்தைந்து ஏகாதசிகள் வந்துவிடும். பாத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் இந்த இருபத்தைந்துக்கும் தனித்தனிப் பெயர் சொல்லி, அதை அநுஷ்டிக்க வேண்டிய முறை, அதனால் பயனடைந்தவர்களின் கதை, ஆகியவற்றை விவரமாகச் சொல்லியிருக்கிறது.

தநுர்மாஸ (மார்கழி மாத) க்ருஷ்ணபக்ஷ ஏகாதசியன்று ஆரம்பித்திருக்கிறது. இதற்கு ‘உத்பத்தி ஏகாதசி’ என்று பெயர். அடுத்ததுதான் அந்த மாஸ சுக்லபக்ஷத்தில் வரும் பிரஸித்தமான வைகுண்ட ஏகாதசி. ‘மோக் ஏகாதசி‘என்று இதற்குப் பாத்ம புராணத்தில் பேர் கொடுத்திருக்கிறது. அம்ருதம் கடைந்தெடுத்தது அன்றுதான். க்ருஷ்ண பரமாத்மா கீதோபதேசம் என்று உபநிஷத்துக்களைக் கடைந்தெடுத்து ஞானாம்ருதமாகக் கொடுத்ததும் அன்றுதான் என்பதாலேயே அன்றைக்கு ‘கீதா ஜயந்தி’ என்று கொண்டாடுகிறார்கள்.

மூன்றாவது ஏகாதசி தை க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஸபலா’. நாலாவது அம் மாஸ சுக்ல பக்ஷத்தில் வருகிற ‘புத்ரதா’. ஐந்தாவது மாசி க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஷட்திலா’. ஆறாவது அம்மாஸம் சுக்லபக்ஷத்தில் வரும் ‘ஜயா’.

இப்படியே வரிசையாக பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாஸங்களில் ‘விஜயா’, ‘ஆமலகீ’, ‘பாப மோசனிகா’, ‘காமதா’, ‘வரூதினீ’, ‘மோஹினி’, ‘அபரா’, ‘நிர்ஜலா’என்று எட்டு ஏகாதசிகள் வருகின்றன. பீமன் வருஷத்தில் ஒரே ஒரு தரம் சுத்தோபவாஸமிருந்தது ‘நிர்ஜலா’என்ற இந்த ஆனி மாஸ சுக்லபக் ஏகாதசியன்றுதான். இதோடு பதினாலு ஏகாதசிகள் ஆகிவிட்டன. பதினைந்தாவதாக ஆடி க்ருஷ்ண பக்ஷத்தில், ‘யோகினி’ என்பது.

அடுத்தது ஆடி சுக்ல பக்ஷத்தில் மஹாவிஷ்ணு சயனிக்க ஆரம்பிக்கிற சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் வருகிற ஏகாதசி அதற்கு ‘சாயினி’ என்று பெயர்.  (இதற்கு மறுநாளான த்வாசியன்றே சாதுர்மாஸ்ய விரதத் தொடக்கம்) அப்புறம் ஆவணி, புரட்டாசி. ஐப்பசி மாஸங்களில் வரும் ‘சாமிகா’ ‘புத்ரதா’ (முன்னையே தையில் ஒரு ‘புத்ரதா’ வந்து விட்டது.

 இங்கே மறுபடியும் அதே பெயர்தான் போட்டிருக்கிறது) , ‘அஜா’, ‘பத்மநாபா’, ‘இந்திரா’, ‘பாபாங்குசா’ என்ற ஆறு ஏகாதசிகளின் போதும், கார்த்திகையில் க்ருஷ்ண பக்ஷத்திலே வரும் ‘ரமா‘என்ற ஏகாதசியின் போதும் பகவான் நித்திரை பண்ணிக் கொண்டேயிருக்கிறார். இருபத்து நாலாவதாக வருகிற கார்த்திகை சுக்லபக் ஏகாதசியன்று அவர் விழித்துக் கொள்கிறார். அதனால் அதற்தகு ‘ப்ரபோதினி’ என்றே பெயர் மறுநாளோடு சாதுர்மாஸ்யம் பூர்த்தி.

அதிகப்படியாக வரும் இருபத்தைந்தாவது ஏகாதசிக்கு ‘கமலா’ என்று பெயர்.இப்படி நம் மதத்தில் சிறப்பித்துச் சொல்லியிருக்கும் ஏகாதசியில் எல்லாரும் வ்ரதாநுஷ்டானம் பண்ண வேண்டும். சாப்பிடாமல் இருப்பது வெறும் ‘அநாசக’ மாக இல்லாமல், பகவானோடு சேர்ந்து வாழும் ‘உபவாஸ’ மாக ஆகவேண்டும். இதற்கு ஏகாதசியன்று நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகவன் நாமத்தை ஜபமாகவோ, பஜனையாகவோ உச்சரிக்க வேண்டும்; எவ்வளவு அதிக நாழிகை பகவத் த்யானம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்யவேண்டும்;

அன்றைக்கு ஸத்கதா ச்ரவணமோ, பாராயணமோ, இரண்டுமோ அவசியம் செய்யவேண்டும். பகவான் அல்லது பாகவதோத்தமர்களின் புண்ய சரித்ராம்ருதம் அன்று காது வழியாகக் கொஞ்சமாவது உள்ளே இறங்க வேண்டும். இப்படிச் செய்து நல்லாரோக்யத்திலிருந்து பக்தி, ஞான, வைராக்யங்கள் வரையில் எல்லா நன்மைகளையும் அடைய வேண்டும்.