வீட்டினுள் ஆக்கபூர்வ சக்திகளை வளர்ப்போம்



வளம் தரும் வாஸ்து

கண்ணாடி. இன்றைய நாளில் பெரும்பாலான வீடுகளில் வாசற்படிக்கு மேலே அல்லது வாசற்படியை ஒட்டி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்திருப்பது சகஜமாக உள்ளது. இது முற்றிலும் தவறு. ஏனெனில் வெளியிலிருந்து, புற உலகிலிருந்து வரக்கூடிய ‘ச்சீ’ என்ற நற்சக்தியானது கண்ணாடியில் பிரதிபலித்து நற்சக்தியை வீட்டினுள் நுழைய விடாமல் எதிரொளித்து விடும்.

எனவே நிலைக் கண்ணாடியை வாசற்படிக்கு ஒட்டி அமைப்பது சரியல்ல.கோயில்களில் மூலவருக்கு நேர் எதிரே அமைத்து, மூலவரின் நற்சக்திகளை மூலவர்/கண்ணாடிக்கு எதிரிலுள்ள பக்தர்கள் மீது அருள்பாலிக்கிறது. மூலவரை சரியாக தரிசிக்க முடியாதவர்களும் நிலைக் கண்ணாடியில் பார்த்து தரிசனம் செய்து கொள்ள முடிகிறது. இது சரியானது.

அவ்வாறின்றி கண்டிப்பாக கண்ணாடி நிறுவ வேண்டுமென நினைப்பவர்கள், கண்ணாடியில் இயற்கை காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், மரங்கள், வீடுகள் போன்றவற்றை ஓவியமாகத் தீட்டி அலங்கரிக்கலாம். மீன், யானை, குதிரை, முயல், மயில் போன்றவற்றை வரைந்தும் ‘ச்சீ’ சக்தி வருவதை அதிகரிக்கலாம்.

மிருக உருவங்கள்பழங்காலங்களில் வேட்டை பிரியர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், யானை, சிங்கம், சிறுத்தை, எருமை போன்ற மிருகங்களின் தலையை பக்குவப்படுத்தி சுவர்களில் காட்சிப்படுத்துவார்கள். இது நற்சக்திகளை அழித்து தீய சக்திகளை உள்வாங்கும். அதேபோல இவற்றின் தோல்களை பாடம் செய்து சுவரில் மாட்டுவதும் தவறான சக்திகளை உள்வாங்கி குடும்ப ஒற்றுமையை கெடுத்து குடும்ப சீர்குலைவு ஏற்படும். எனவே இவற்றை காட்சிப்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.

ஆனாலும், சில பறவை, விலங்குகளின் படங்களை மாட்டலாம். அது குறித்து பின்னர் விரிவாக காணலாம்.ஆக்கல், அழித்தல், சக்தி பிரவாக நிலை தற்போது பெங்சூயின் மிக முக்கியமான தற்கால நடைமுறையிலுள்ள பரிகாரமாகவும் உள்ள சில கோட்பாடுகளை கண்டறிவோம். இவற்றை திரும்ப திரும்ப நம் வீட்டில்/கட்டிடத்தில் உள்ள பொருட்களை வைத்து கண்டுபிடிக்க ஏதுவாகும். பிறகு நற்சக்திகள் வரத் தகுந்தவாறு பொருட்களை மாற்றி அமைக்க வேண்டும்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூ ஹிசய் மற்றும் அவரின் சீடர்கள் இந்த யுக்தியை உறுதிபடுத்தினர்.

ஐன்ஸ்டீனின் விதியினை நோக்கும் போது இது புரியும். பொருண்மையும் சக்தி யும் ஒன்றுக்கொன்று மாறும் தன்மையுடையவை. படத்தில் குறிப்பிட்டுள்ள நெருப்பு-நிலம்-உலோகம்-நீர்-மரம் ஆகிய ஐந்தும் ஒன்றுக்கொன்று இயைந்து செயல்பட்டு உலகியல் நிலைகளை மாற்றி மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கின்றன.இவற்றின் மாறுபட்ட இயக்கங்கள் இரு சுழற்சிகளாக உள்ளன, ஒன்று ஆக்கல் மற்றொன்று அழித்தல்.

இயற்கையின் நியதிகளுக்கு உட்பட்டு இந்த 5 பொருட்களும் இயைந்து ஆக்கல் சக்தியை வெளிப்படுத்துகின்றன. ஆக்கல் சக்தியில் நெருப்பானது சாம்பலாகவோ நிலமாகவோ மாறுகிறது. நிலம் உலோகத்தை கெட்டியாக்குகிறது. உலோகம் உருகி நீரை உருவாக்குகிறது. நீரை மரம் உறிஞ்சுகிறது. மரமானது நெருப்பாகி எரிகிறது. இங்கே இவ்வைந்து பொருட்களும் மற்றொன்றை உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றன.

இதற்கு மாறுதலாக அழிவு சக்தியாக நிலை கொள்ளும்போது மரமானது நிலத்திலிருந்து சக்தியை பிரவாகமாக மாற்றி வளர்கிறது. நிலம் நீரை அழிக்கிறது. நெருப்பை நீர் உருமாற்றுகிறது. நெருப்பு உலோகத்தை உருக்குகிறது. உலோகம் மரங்களை துண்டாக்குகிறது. இவையே ஐந்து முக்கிய பொருட்களை தங்களுக்குள் இணைந்து வினை மாற்றம் செய்கின்றன.

இப்படி 5 முக்கிய காரணிகளும் செயல்படும் விதத்தை நம் வீட்டினுள் எப்படி உபயோகிப்பது என கேட்பது புரிகிறது. அதற்கு கீழ்காணும் உபாயத்தை கடைபிடிக்க வேண்டும்:நம் வீட்டை கீழ்க்காணும் முறைப்படி 9 பாகமாக்கிக் கொள்ள வேண்டும்.

மரம்    நெருப்பு    நிலம்   
மரம்    நிலம்    உலோகம்
நிலம்    நீர்    உலோகம்   
இப்படி 5 வித பொருட்களுக்கு ஏற்றவாறு வீடு, கட்டிடம், தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட ஐம்பூத பொருட்களை வைப்பதின் மூலம் ‘ச்சீ’ சக்தி பெருகி வளமை கூடும்.ஒன்றுக்கொன்று ஆக்க சக்தி உள்ளவாறு பொருட்களை பராமரிப்பதின் பேரில் ஆக்க சக்தி பெருகி மகிழ்ச்சி கூடும்.உதாரணமாக நீர் சக்தியின் அம்சங்களான மீன் தொட்டி நீர்வீழ்ச்சி, கடல், குளம் போன்றவற்றின் படங்களை மர சக்தியுள்ள இடங்களில் அமைப்பதால், மரசக்திக்குரிய பொருட்கள் மேன்மையுறும்.

அழிவு சக்தி காரணிகள் அருகருகே இருக்கும்போது ஒன்றுடன் ஒன்று மோதி அழிவை உண்டாக்கி அழிவு சக்தி பெருகிவிடும். உலோக பொருட்களை மரசக்தி பொருட்கள் உள்ள இடத்தில் அமைக்கும் போது நற்சக்தி அழிபட்டு தொல்லைகள் வந்து சேர்ந்துவிடும்.

மீன்தொட்டி வைக்க வேண்டிய இடத்தில் ஜ்வாலை போன்ற படங்கள் இருப்பின் குடும்ப பிரிவு ஏற்படும்.எனவே ஆக்க சக்தி மேலோங்கி அழிவு சக்தி குறையும் வகையில் பொருட்களை பராமரிக்கப்பட வேண்டும்.மேற்கூறியவாறு பாதிப்புகள் இருப்பின் வீட்டில் அவ்விடத்திலுள்ள மாறுபட்ட சக்தியுள்ள பொருட்களை மாற்றி நற்சக்தி தரும் பொருட்களை இடம் மாற்றம் செய்வதால், பாதிப்பு குறைந்து மகிழ்ச்சி பொங்கும்.

உதாரணமாக உடலில் கண்கள், கைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அது நெருப்பு பகுதியில் மாற்றமான பொருட்களை வைப்பதால் ஏற்படும், எனவே அங்கு நீர் பொருட்கள் வைக்கலாம். கவலை அதிகம் இருப்பின் நிலம் பகுதியினை மாறுபட்ட சக்தியுடைய பொருளை நிர்மாணிப்பதால் அதன் தன்மை குறைந்து சந்தோஷம் நிலவும்.

(தொடரும்)