தசாவதார ஸ்லோகம்



அபூர்வ ஸ்லோகம்

திருமால் எடுத்த மச்ச, கூர்ம. வராஹ. நரசிம்ம. வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, அவதாரங்களோடு இனி எடுக்கப்போகும் கல்கி அவதாரமும் சேர்த்து தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த அவதாரங்களின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அபூர்வ ஸ்லோகமாய் வழங்குகிறோம்.

1. மச்ச அவதாரம் :தியான ஸ்லோகம்
மத்ஸ்யாநநம் ஹரிம் தேவம் ஸங்கசக்ரதரம் விபும்
ஸர்வாபரண ஸம்யுக்தம் ஸ்ரீபூநீலாதிபம் பஜே

மூல மந்திரம்
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் மம் மத்ஸ்யநாதாய நமஹ
மந்திர ஜப பலன்
இந்த மந்திர ஜபத்தினால் சத்ரு பயம் நீங்கி வெற்றி கிடைக்கும். நீர்வளம், நிலவளம் பெருகி மனித வாழ்க்கையில் போக சம்பத்துக்கள் அதிகரிக்கும்.

2. கூர்ம அவதாரம்:தியான ஸ்லோகம்.
பீதாம்பரம் கூர்மப்ருஷ்டம் லஸல்லாங்கூல ஸோபிதம்‘
தீர்கக்ரீவம் மஹாக்ராஹமாஸ்ரயே ரக்தலோசநம்.
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே கும் கூர்மாய தராதர துரந்தராய நமஹ.
மந்திர ஜப பலன்
இந்த மந்திர ஜபத்தினால் மனிதர்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவார்கள். தொழிலில் வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும்.

3. வராஹ அவதாரம்:தியான ஸ்லோகம்
அபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந்
முக்தாபம் கண்டதேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம்
ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள் கட்ககேடே கதாக்யாம்
ஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே வராஹரூபாய பூர் புவஸ்ஸுவஹ பதயே
பூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா.
மந்திர ஜப பலன்
இந்த மந்திர ஜபத்தினால் அரசியல் துறையில் உயர்ந்த பதவிகள் கிட்டும். புகழ் ஏற்படும்.

4. நரசிம்ம அவதாரம்
தியான ஸ்லோகம்
வாமங்கஸ்த ஸ்ரியாயுக்தம் சக்ர ஸங்காப்ஜத்ருக்கரம்
பீதாம்பரம் ஸர்வபூஷம் ப்ரஸந்நம் ந்ருஹரிம் பஜே.
மூலமந்திரம்
ஓம் ம் ஹ்ரீம் ஜய ஜய லக்ஷ்மீப்ரியாய நித்யப்ரமுதீதசேதஸே
லக்ஷ்மீஸ்ரிதார்த தேஹாய க்ஷ்ரெளம் ஹ்ரீம் நமஹ.
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் பக்தர்கள் குறைவற்ற் செல்வத்தை அடைவர். எங்கும் எதிலும் வெற்ற பெறுவர். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை இனிதே
நடத்துவார்க்ள்.

5. வாமன அவதாரம்
தியான ஸ்லோகம்
முக்தாகெளரம் நவமணிலஸத் பூஷணம் சந்த்ரஸம்ஸ்தம்
ப்ருங்காகாரை ரலகநிகரை சோபிவக்த்ராரவிந்தம்
ஹஸ்தாப்ஜாப்யாம் கநககலஸம் ஸுத்த்தோயாபி பூர்ணம்
தத்தயந்நாட்யம் கநகசஷகம் தாரயந்த்ம் ப்ஜாமஹ.
மூல மந்திரம்
ஓம் க்லீம் ம் வம் நமோ விஷ்ணவே ஸுரபதயே மஹாபலாய ஸ்வாஹா.
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் தேஜஸ் கிட்டும். சகல செயல்களிலும் வெற்றி கிட்டும்.

6. பரசுராம அவதாரம்
தியான ஸ்லோகம்
க்ஷத்ரிய வம்ஸ வைரிம் ஸதா கோப முக ரூபிணம்
பரசுராம  க்ஷேத்ர ஸ்தாபினம் பஜே பரசுராம மூர்த்தினம்,
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே பரசுராமாய மம வைரி நாஸனம் குரு குரு ஸ்வாஹா,
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் நமக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்கள் அழிவர்.

7. ராம அவதாரம்
தியான ஸ்லோகம்
அயோத்யா நகரே ரம்யே ரத்நஸெளந்தர்ய மண்டபே
மந்தார புஷ்பைராபத்த விதாநே தோரணாங்கிதே
ஸிம்ஹாஸந ஸமாரூட்ம புஷ்பகோபரி ராகவம்
ரக்ஷோபிர் ஹரிபிர் தேவைர்திவ்ய யாநகதைஹி ஸுபைஹி
ஸம்ஸ்தூயமாநம் முநிபிஹி சர்வதஹ பரிஸேவிதம்
ஸீதாலங்க்ருத வாமாங்கம் லக்ஷ்மணேநோப ஸோபித்ம்
ஸ்யாமம் ப்ரஸந்ந வதநம் ஸர்வாபரண பூஷித்ம்

மூல மந்திரம்
ஓம் ஹும் ஜாநகீவல்லபாய ஸ்வாஹா,
மந்திர ஜப பலன்

இம்மந்திர ஜப பலனால் ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்வர். இம்மந்திரம் தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித புருஷார்த்தங்களும் இம்மந்திர ஜப பலனால் கிட்டும்,

8. பலராம அவதாரம்
தியான ஸ்லோகம்
ஹேம வர்ணம் கிருஷ்ண ஸோதரம் ஸர்வாலங்காரபூஷிதம்
ஏக கரே டங்க ஹஸ்தம் இதர கரே ஊரு ஹஸ்தம்  பலராமம் ஸதா பஜேஹம்.
மூலமந்திரம்
ஓம் நமோ பகவதே பலராமாய ரேவதி ப்ரியாய க்ருஷ்ண ஸோதராய ஸ்வாஹா,
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் சகோதர ஒற்றுமை பலப்படும். தாம்பத்ய வாழ்க்கை சிறக்கும்.

9. கிருஷ்ண அவதாரம்
தியான ஸ்லோகம்
உத்யத் பாஸ்வத் ஸஹஸ்ரத்யுதி மம்ருத கரவ்யூஹ காந்தி பரபாவம்
த்வாப்யாம் தோர்ப்யாம் ச வேணும் விததத முபரிஷ்டாஸ்திதாப்யாம் மநோஜ்ஞம்
வாமாங்கஸ்தாப்தி கந்யாஸ்தந கலஸ மதோ வாம தோஷ்ணா ஸ்ப்ருஸந்த்ம்
வந்தே வ்யாக்யாந முத்ரோல்ஸதிதரகரம் போதய்ந்தம் ஸவமீஸம்.
மூலமந்திரம்
ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா.
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் மணமாகாத பெண்களுக்கு குணம் ரூபம் சீலம் நிறைந்த கணவர் கிடைத்து இல்லற வாழ்க்கை
இனிமையாய் அமையும்.

10. கல்கி அவதாரம்
தியான ஸ்லோகம்
த்யாயாமி கல்கிம் விஷ்ணும் ஹரிம் அஷ்வ வாஹனம்
கட்க கேடக ஹஸ்தாப்யாம் பஜே கல்கி ரூபிணம்,
மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நமோ பகவதே கல்கி ரூபாய துஷ்டநிக்ரஹ சிஷ்டபரிபாலனாய ஸ்வாஹா,
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் தீய குணங்கள் அழிந்து நல்ல குணங்கள் வளரும்.

தொகுப்பு: ந.பரணிகுமார்.