உள்ள(த்)தைச் சொல்கிறோம்



சாம்பிராணி, தூபம் பூஜை புனஸ்காரங்களின் ஒரு அங்கம்தான் என்று இதுகாறும் நினைத்திருந்தவர்களுக்கு. கண் திருஷ்டி போக்கும் சாம்பிராணி என்ற தலைப்பிலான சாம்பிராணி பற்றிய கூடுதல் தகவல்கள் சற்று அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியைத் தந்திருந்தது.
 - இரா.வளையாபதி,தோட்டக்குறிச்சி.

‘நாக தோஷம்’ நீக்கும் கண்டேன். ஒரு மானிடப் பெண் பாம்பு குழந்தை பிறந்து அதை அந்த ஊர் மக்கள் சாகடித்து நாகம்மாள் தனக்கு நிபாயம் வழங்காத ஊர் மக்களை சாபமிட்டது குறித்த கட்டுரை மெய்சிலிர்க்க வைத்தது. கடைசியிலே கோயில் அமைத்து வழிபட்டதால் சாபம் நீங்கியதும் வியக்க வைத்தன. நாக வழிபாடு பக்தி ஸ்பெஷல் அட்டைப் படத்தில் சிவனுடன் நாகம் சுற்றி இருக்கும் அட்டைப்படம் காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சி. கண்களை ஒற்றிக் கொண்டு அப்படியே ஃபிரேம் போட்டு வீட்டில் மாட்டி விட்ேடன். நீரை ஆளும் நாக தேவதைகள் கண்டேன். பலராமன் இமயமலையை தன்னுடைய கலப்பையில் உழுது தண்ணீரை வடியவிட்டு உலரச் செய்தது மற்றும் பூமிக்கு அடியில் உள்ள குகையில் நாகராஜா வசிப்பதாக கூறுவது அதை இன்னும் காஷ்மீர் மக்கள் நம்புகிறார்கள் என்று கூறுவது வியப்பை தந்தன.
- வண்ணை கணேசன்,பொன்னியம்மன்மோடு.

வடக்கே காஷ்மீரில் அனந்த நாக் என்ற ஊரும், தட்சகன் வழிபாடும், அன்றைய நாக வழிபாட்டுக்கான சாட்சிகள் என்றால், தெற்கே நாகர்கோவில் என்ற ஊரும், நாகராஜா கோயிலும் பாரதம் தழுவிய நாக வழிபாட்டினை பறைசாற்றும். வங்கத்தில் நாகராணி மானஸா தேவி என்றால், தமிழகத்தில் நாகாத்தம்மன், நாகம்மன். இப்படியாக, நாக வழிபாடு, ஆதி வழிபாடு என்பதும் நிரூபணமாகின. நாக வழிபாட்டுக்குரிய சிலைகள், சிற்பங்களின் படங்கள் பிரமிப்பைக் கொடுத்தன. இந்த இதழ் ஒரு அரிய தொகுப்பு.
 - மல்லிகா அன்பழகன்,சென்னை - 600078.

இரா. இரகுநாதன் எழுதிய பாம்பு வழிபட்ட பாம்பணிநாதர் கட்டுரை பாமணிக்கு நேரில் சென்று பெருமானை தரிசித்து வந்த பாக்கியத்தை ஏற்படுத்தியது. படங்களும் தத்ரூபமாக அமைந்து கட்டுரைக்கு கூடுதல் வலிமை சேர்த்தது.
- S.நிக்கில் குமார்,இராமேஸ்வரம் - 623526.

மனிதர்கள் தன்னிடமிருந்து முதலில் அகற்ற வேண்டியது எதை ? எப்படி? (சோம்பலை) என்பதை காரண காரியங்களோடு விளக்கி பொறுப்பாசிரியர் விழிப்புணர்ச்சி ஏற்படுத்திவிட்டார்!
- கே.பிரபாவதி,மேலகிருஷ்ணன்புதூர்.