டஜன் டஜனாக அசத்தல்



Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazine ><br>   bsp;    <span style=



                   நம்மை நோக்கி வரும் ஸ்வாமி பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவைப் பற்றிய கட்டுரை வெகு அருமை. குருவின் சிறப்புத் தலங்கள் எங்கேயெல்லாம் உள்ளன என்பதைப் பற்றிய விவரங்கள் எல்லோருக்கும் உதவிகரமாக இருந்தது. ராகு&கேது பெயர்ச்சி பலன்கள் துல்லியமாக மிளிர்ந்தன.
 பகவதி பிரவீண்சங்கர்,
246 இரண்டாவது அவென்யூ, பானுநகர்,
அம்பத்தூர், சென்னை-53

எங்கள் ஊருக்கு அருகிலுள்ள அய்யாவாடி ப்ரத்யங்கிரா தேவி கோயில் பற்றி எங்களுக்கே தெரியாத பல விஷயங்களை ஆன்மிக பலன் இதழினால் தெரிந்து கொண்டோம். வாழ்க உங்கள் தொண்டு. பாராட்டுகள்.
 ஸ்ரீதேவிராஜன், 111, மேலசாலை,
திருவிடைமருதூர் -612 104.

மிதுனம் செல்வத்தின் ராகு&கேது தோஷம் பற்றிய தகவல்கள் வெகு சிறப்பு. ஆன்மிக பலன் இதழில் முன் அட்டை, உள் அட்டைகளில் பிரசுரமாகும் படங்கள் ஒவ்வொன்றும் தெய்வீக மணம் பரப்புகிறது. பயனுள்ள தகவல்களை இதழின் ஒவ்வொரு பக்கத்திலும் தரும் பலன் இதழ்கள் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.
 எஸ். சண்முகசுந்தரி,
எழில் நகர், 11ம் வீதி, அறந்தாங்கி,
புதுக்கோட்டை  - 614416.

சென்ற இதழ் அட்டையில் ர(£)சிக்கும்படியும், யோசிக்கும்படியும் நர்த்தன கோலத்தில் மேஷம் முதல் மீனம் வரை தன்னுள் அடக்கிய கணபதியின் திருவுருவம் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். குரு&ராகு&கேது கிரக பெயர்ச்சி நேரும் இந்த சமயத்தில் அரியதொரு படம். கணபதியில் அடங்கியுள்ள ராசி சின்னங்களை கண்டுபிடிக்க தனித்திறமையும், பொறுமையும், முயற்சியும் இருந்தால்தான் புலப்படும் என்பதும் உண்மைதான். பூஜையறையில் பிரேம் போட்டு மாட்டிவிட்டேன். வரைந்த ஓவியருக்கு நன்றிகள்.
 சுகந்தி நாராயணன்,
 83, வியாசர் நகர் 7வது தெரு, வியாசர்பாடி,
 சென்னை-600039.

பன்னிரெண்டு ராசிகளை தன்னுடன் அடக்கிய விநாயகர், பன்னிரெண்டு மாதங்களில் வரும் பௌர்ணமி பூஜையின் சிறப்பு, பன்னிரெண்டு ராசிகளுக்கும் த்ரீ இன் ஒன் குரு, ராகு, கேது பெயர்ச்சி பலன்கள், பன்னிரு ஆழ்வார்களில் எம்பார் செய்த கருணை, பன்னிரெண்டு ராசிக்காரர்களையும் ஆட்டிப்படைக்கும் ராகு, கேது தலம் என எல்லாவற்றையுமே டஜன் டஜனாக தந்து அசத்திவிட்டீர்கள்.
 விஜயாமுரளி,
எப்-14 3வது தளம், சின்டிகேட் ரெஸிடென்ஸி,
டாக்டர் தாமஸ் சாலை,
தி.நகர், சென்னை-17.

தர்மதேவதையே விதுரனாகப் பிறப்பெடுத்ததால்தான் நமக்கெல்லாம் விதுரநீதி கிடைத்தது என்ற தகவலை திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் புரிய வைத்தது. ஆன்மிக பலன், அற்புத பலன்.
 எஸ்.பாலாஜி, கடைத்தெரு,
திருநீலக்குடி போஸ்ட்,
கும்பகோணம் - 612 108

பத்தே ரூபாயில் குரு. ராகு&கேது பெயர்ச்சிப் பலன்களை ஆன்மிக பலனுடன் வாரி வழங்கி பாலும், பழமும்,தேனும் சேர்ந்து சாப்பிட்ட திருப்தியைத் தந்தீர்கள். நன்றி. கணித்துக் கொடுத்த ஆர்.சீதாராமன் வாழ்க வளமுடன்.
 டி.வசந்தா. 174-ஏ மெய்ன் ரோடு,
 திண்டுக்கல் &624 001.

ஒவ்வொரு மாத பவுர்ணமியின்போதும் அம்பிகையை எப்படியெல்லாம் வழி பட்டு, உலகாளும் நாயகியின் அருளுக்கு பாத்திரமாகலாம் என்ற வழிமுறைகளை பொருள்பட எடுத்துரைத்திருந்தது, பூரண வளம் தரும் பவுர்ணமி பூஜை கட்டுரை.

 வி.மோனிஷா பிரியங்கா,
டி-27/ஏ, 2வது மாடி, ஏழாவது குறுக்குத் தெரு,
தில்லைநகர், திருச்சி-620018.

அம்பலத்தடி நல்லூர் என வழங்கப்படும் செப்பறை அழகிய கூத்தர் ஆலயத்தின் சந்நதி விசேஷங்களையும், தலவரலாற்றின் மகிமைகளையும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் செப்பறையின் சிறப்பையும், நடராஜ பஞ்சதலங்கள் எனும் உயர் பொருளில் விளக்கி அருளியது சிறப்பு. வாழ்த்துகள்.
 இராம. கண்ணன்,
4, கே.கே.நிவாஸ் 30வது தெரு,
காந்திநகர், திருநெல்வேலி-2.


குரு பெயர்ச்சி சமயம் பார்த்து, வாசகர்கள் குருபகவானை பிரசித்தி பெற்ற குரு தலங்களுக்கு சென்று குரு ப்ரீதி செய்து நற்பலன் அடையும் வகையில், குரு பகவானிற்கு உகந்த திருத்தலங்களை ஆன்மிக பலன் அட்டவணைப்படுத்தியிருந்த விதம், பாராட்டத்தக்கது; வரவேற்கத்தக்கது. அதே போன்று த்ரீ இன் ஒன் குரு, ராகு&கேது பெயர்ச்சி பலன்கள் வாசகர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது.
 இரா.வளையாபதி,
51, தோட்டக்குறிச்சி போஸ்ட்,
கரூர் மாவட்டம் - 639 113.

வளைகாப்பு நாயகி வரலாறு
வண்ணமிகு குரு, ராகு&கேது பலன்
கலைநயம் மிக்க அடியார்கள்
கண்ணாகப் பிறந்த சிறப்புகள்
நலம்பலவே செய்த பாபாவை        
நன்கு படம் பிடித்த விதமருமை!
வளம் பலவே பெற்றே இதழுலகில்
வாழ்ந்திடுக ஆன்மிக பலனும்தான்.
  புலவர் இராம. வேதநாயகம்,
152, பழைய இயந்திரத் தெரு, வடபாதிமங்கலம்,
திருவண்ணாமலை -606 907.

பூரண வளம்தரும் பவுர்ணமி பூஜையின் மகத்துவத்தைப் படித்து வியந்தோம். ஒவ்வொரு பவுர்ணமி சிறப்பு பண்டிகையில் பங்கெடுத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளோம். முடிந்தால் எங்கள் செலவில் ஆலயங்களில் பவுர்ணமி பூஜை செய்ய தீர்மானித் திருக்கிறோம்.
 பிரபா லிங்கேஷ்,
மேலகிருஷ்ணன்புதூர்,
குமரி - 629 601.