ஆன்மிக அலமாரி
                    இங்கே, விமர்சனத்துக்கு பெறப்படும் புத்தகங்களிலிருந்து ஒரு பகுதி... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக...

கடவுள் கேட்கும் விலை

Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazine style=கடவுளைக் கும்பிட்டு, விரும்பிக் கேட்டது ஒவ்வொன்றுக்கும் விலையாக கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை, உடல் தூய்மை, உள்ளத் தூய்மை, செயல்பாடுகள் தூய்மையென அதற்குரிய விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்.

உதாரணத்துக்கு:

தேர்வு எழுதுவதற்கு முன், மாணவர்கள் கடவுளைக் கும்பிட்டு, விபூதி பூசி, குங்குமம் இட்டுக்கொண்டு, ‘கடவுளே தேர்வில் நான் நல்ல மதிப்பெண்கள் பெற்று பாஸாக வேண்டும். பாஸாகிவிட்டால் உன் சந்நதியில் 108 தேங்காய்கள் உடைக்கிறேன். மொட்டையடித்து முடி காணிக்கைச் செலுத்துகிறேன்’ என்று பலவாறாக வேண்டிக் கொள்வார்கள்.
அப்படிக் கடவுளிடம் வேண்டிக் கொண்ட அத்தனை மாணவர்களும் தேர்வில் வெற்றி அடைவதில்லை. ஆண்டு முழுவதும் ஒழுங்காக  பள்ளிக்குச் செல்லாமல், நண்பர்களுடன் அரட்டையடித்து, ஊர்சுற்றிவிட்டு, ஒழுங்காக படிக்காமல், ஆண்டுக் கடைசியில் தேர்வுக்கு முன்பு மட்டும் அவர்கள் கடவுளைத் தொழுது வேண்டிக் கொண்டால் இறைவன் எப்படி அவர்கள் குரலுக்குச் செவிசாய்ப்பார்?

நல்ல மதிப்பெண்கள் பெற்று, தேர்வில் தேர்ச்சி பெற ஆண்டு முழுவதும் ஒழுங்காக பள்ளிக்குச் சென்று நேரத்தை வீணாக்காமல் படிப்பில் முழுக் கவனம் செலுத்தி, கடினமாக உழைத்து, முறையாகப் படித்து, தேர்வு எழுத, முழுமையாக அந்த மாணவர்கள் தங்களை தயாராக்கிக் கொள்ள வேண்டும். இதுதான் கடவுள் அவர்களிடமும் கேட்கும் விலை. இதுதான் தேர்வில் நல்ல முறையில் வெற்றி கொள்ள அவர்கள் கொடுத்திருக்க வேண்டிய விலை.

(ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் ஆன்மீகம், பேராசிரியர்: என்.சி.ராமலிங்கம், பக்:324, ரூ. 125/&, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7/4, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை&600017. தொலைபேசி: 2434 2926, 2434 6082.

உவமையற்ற வடிவழகே போற்றி

Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazine style=உனது ஆயுதங்கள் கனல் கக்கிப் பறந்து அசுரரைத் தாக்கின. அப்போதாவது அவர்கள் கண்கள் அவிந்து போயிருக்க வேண்டும். அப்படி நடவாததன் காரணம் சந்திர பிம்பம் போன்ற உனது திருமுகத்திலிருந்து வீசும் கிரணங்களின் குளிர்ச்சி அவர்மேல் பட்டதுதான்.

கண்கள் போய்விட்டால் பின் உன்னை எப்படிப் பார்ப்பது? உன்னை பார்த்துக் கொண்டே அவர்கள் உயிர் பிரிய வேண்டும் என்ற எண்ணத்தாலேயே நீ இப்படி அருளியிருக்கிறாய்...
தேவீ, துர்குணம் உடையவர்களையும் அடக்கியாண்டு அவர்களை நல்வழிப் படுத்துவதுதான் உனது இயல்பு. வீரமும் அழகும் ஒருங்கே கூடிய உன் உவமையற்ற வடிவழகைப் பிறரால் சிந்திக்கக் கூட முடியாது. அதன் பெருமையை எப்படிச் சொல்வது?

உன் ஸ்வரூபத்தை பார்ப்பவர்கள் அடியவர்களானால் பக்தி பரவசத்துடன் வணங்கி மகிழ்கிறார்கள். அதே எதிரிகளானால் மனம் கலங்கி பயப்படுகிறார்கள். ஒரே சமயத்தில் இருவிதமாகவும் காட்சியருளும் இப்படியொரு விந்தையை வேறெங்கு காண முடியும்?

நீ அம்மாவாக இருப்பதால்தான் (இந்த பிள்ளையை திருத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு) உன் உள்ளத்தே கருணையிருந்தாலும், எதிரிகளிடம் கண்டிப்பு காட்டுகிறாய்.
அஸுரர்களை நீ அழித்து ஆட்கொண்டு விட்டாய்;எங்களை காத்து ஆட்கொண்டுவிட்டாய்;எங்கள் மனத்திலுள்ள பயமெல்லாம் அகன்று விட்டது.

(ஸ்ரீ சண்டிகையின் சரிதம், ஆசிரியர்: வி.அரவிந்த் ஸுப்ரமண்யம், பக்: 184, ரூ. 100/&, வெளியீடு: ஸ்ரீ மஹா சாஸ்த்ரு சேவா சங்கம், 94 ஙி, மூன்றாவது வீதி டாடாபாட், கோவை&641012. தொலைபேசி: 0422& 4371625; 9994641801.