ஸ்பீக்கரு...



ஆறு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி காதலர் தின கேக் கட் பண்றியே... நீ காதலிக்க ஆரம்பிச்சு ஆறு வருஷம் ஆகிடுச்சாடி?’’
‘‘ம்ஹும்! இப்ப நான் லவ் பண்றது ஆறாவது காதலர்...’’
கே.லட்சுமணன்,
திருநெல்வேலி.

காதலிகூட பைக்ல போயிட்டு இருக்கும்போது போலீஸ்காரங்க பிடிச்சு உனக்கு ஃபைன் போட்டுட்டாங்களா... ஏன்?’’
‘‘காதல் ‘போதை’யில நான் தாறுமாறா பைக் ஓட்டினேனாம்!’’

ஆறு மாசத்துக்கு முன்னால உன்னோட காதலை ஏத்துக்காதவ, இப்ப காதலை ஏத்துக்கிட்டதா சொல்றாளா... எப்படி?’’
‘‘வெயிட்டிங் லிஸ்ட் மூவ் ஆயிடுச்சுன்னு சொல்றாடா!’’

டாக்டரைக் காதலிக்கிறது பயமா இருக்குன்னு ஏன் சொல்றே..?’’
‘‘எல்லோரும் காதலியை ‘ஸ்வீட் ஹார்ட்’னுதானே கொஞ்சுவாங்க... இவர் என்னடான்னா ‘ஸ்வீட் கிட்னி’ன்னு என்னைக் கொஞ்சுறார்டி!’’

காதல் தோல்விக்கு போய் அந்த ஆள் ஏன் கலெக்டர்கிட்ட மனு கொடுக்க வந்திருக்கார்..?’’
‘‘அவரோட ‘உள்ளச் சேதங்களை’ ப் பார்வையிட்டு ‘உள்ள நிவாரணம்’ கொடுக்கணுமாம்!’’

‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், காதலர் தினத்தன்று பீச்சுக்கு வரும் காதலர்களுக்கு தலைவரின் படம் போட்ட ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய சுண்டல் பாக்கெட்டுகளை இலவசமாக வழங்குவோம் என்பதை...’’

பீச்ல சுண்டல் விக்கிற ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே..?’’
‘‘நம்ம தலைவர்தான்... காதலர்களோட ஓட்டுகளைக் கவரணும்ங்கிறதுக்காக ஒரு வாரத்துக்கு இந்த கெட்டப்லதான் பீச்ல சுத்தப் போறாராம்!’’