வலைப்பேச்சு



‘அந்நியன்’ கொடுக்கற தண்டனையெல்லாம் எவ்வளவோ பரவால்ல... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா! வண்டி சீட்ல உக்காந்துட்டனே...
- மோகன் குமார்

@aruntwitz  
கல்லால் அடிப்பதா, ஓடுவதா என நாம் முடிவு செய்யலாம்; ஆனால் கடிப்பதா, வேண்டாமா என்பதை நாய்தான் முடிவு செய்கிறது.

திருவிழா வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களை தினமும் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் உம்மன்சாண்டி : செய்தி
# ஒரு வாட்டிதான் போவணும், அதுவும் ஹெலிகாப்டர்லதான் போவணும்ங்கற அடிப்படை அறிவு கூட இல்ல... என்ன முதலமைச்சரோ?
- திப்புசுல்தான் கே



@Balakumaresa  
கோடை விடுமுறைக்கு பிள்ளைகளை எந்த கோர்ஸ் அனுப்பலாம் என யோசிக்கும் பெற்றோர்கள் தயவுசெய்து சொந்தங்கள் வீட்டுக்கு அனுப்புங்கள், உறவுகளைப் படிக்கட்டும்!

முடி கொட்டுதுன்னு கவலை வரும்போதெல்லாம் ஃபகத் பாசிலும் நஸ்ரியாவும் சேர்ந்திருக்க போட்டோ பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதா இருக்கு.
- அருள்மொழி வர்மன்

தம் சிறகுகளை மடித்துக்கொண்ட பறவைகள் ஆகாயத்தை இழந்தன!
- குட்டி ரேவதி

@Arvind_off 
வெங்காயம் வெட்டுறப்ப ‘உப்புமாவுக்குத்தான் வெட்றோம்’ங்குறத நினைச்சாதான் கண்ணீர் அதிகமா வருது...

ஜெயில் வாழ்க்கையை விட கொடுமையானது... வெயில் வாழ்க்கை!
- எழிலன் எம்

ஆபீஸ்ல வேலை பார்க்கலாம்னு உக்காரும்போது, ‘‘மீட்டிங் இருக்கு வா’’னு கூப்பிடறாங்க. மீட்டிங்ல உட்கார வச்சு, ‘‘என்ன வேலை பார்த்த?’’னு கேக்குறாய்ங்க..!

காதலிப்பதற்கு பதில் திருமணம் செய்துகொள்ளலாம்! எவன் மனைவிக்கோ செலவு செய்வதை விட நம் மனைவிக்கு செலவு செய்துவிட்டுப் போகலாம்!

@udanpirappe 
இதயம் பலவீனமானவர்கள் இந்தச் செய்தியை வாசிக்க வேண்டாம்... ‘மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது -ஜெ’

இனி புகார்களுக்கு ‘கம்ப்யூட்டரைஸ்டு எஃப்.ஐ.ஆர்’ - மதுரையில் துவக்கம்
‪#‎ அப்ப‬ இனி பேப்பர் வாங்குறதுக்கு பதிலா, நெட்பேக் டாப் அப் பண்ணி விடணுமா?
- விவிகா சுரேஷ்

அ.தி.மு.க.ல விருப்ப மனு கொடுத்தவங்களுக்கெல்லாம் PNR நம்பர் குடுத்துடலாம், மணிக்கு ஒரு தடவை போய்  செக் பண்ண ஒரு வெப்சைட்டும் ஆரம்பிச்சிட்டா போதும்.
PNR ஸ்டேட்டஸ் இப்படி இருக்கலாம்...
1. RAC
2, Chart Not Prepared
3. Seat Confirmed but Don’t get Happy
4. Removed from Chart
5. அம்மா உள்ளேயிருந்தபோது நீங்க மண் சோறு சாப்பிடல, அதனால Seat அம்பேல்...
6. etc...



கொஞ்சூண்டு மனசாட்சி இருந்திருந்தால் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் மக்களை வெயிலில் நிறுத்தி இருக்கத் தோன்றியிருக்காது. இன்னும் கொஞ்சம் மனிதத்தன்மை இருந்திருந்தால், ‘உடல்நலக்குறைவால் இறந்தார்கள்’ என கூசாமல் சொல்லத் தோன்றாது.
- பிரபல எழுத்தாளர்

@thoatta 
5 வருஷத்துக்கு ஒரு தடவைதானே தலை காட்டுற, உன் மண்டைய பொளக்கிறேன்னு அரசியல்வாதிகளை குறி வச்சே அடிக்குது வெயில்னு நினைக்கிறேன்!

மேலும் 8 அ.தி.மு.க வேட்பாளர்கள் மாற்றம் - செய்தி
# வேட்பாளர்களை மாற்றுவதைக் கணக்கெடுத்தபோது...

மோடிக்கு கூட டிரான்ஸ்லேட்டர் கிடைக்கலாம்... நம்ம கேப்டனுக்கு கிடைக்கறது ரொம்பக் கஷ்டம்!
- ஷர்மிளா ராஜசேகர்

@Kozhiyaar  
கைபேசி மட்டும் இல்லைனா உலகில் பொய்கள் குறைவாகவே உலவிக் கொண்டிருக்கும்... ‘‘அஞ்சு நிமிஷத்தில வர்றேன்’’னு சொல்லி அஞ்சு மணி நேரம் ஆகுதுடா!

ஜெயலலிதா கையில இருக்கற பேப்பர் திடீர்னு காத்துல பறந்துடுச்சுனா மேடையில என்ன பேசுவாங்க?
- அம்புஜா சிமி

கோர்ட்டில் ஒரு விவாகரத்து வழக்கு. கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக மனைவி வாதாடியதைத் தொடர்ந்து, அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்னை?”
“அடுப்படியில பிரச்னை எதுவும் இல்லைங்க...”
“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
“அடாடா... உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது!”
“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாதானே சங்கடம்!”
“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
“அவரு கறுப்புதாங்க. நானும் கறுப்புதானே... அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க!”
“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை? மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கு போயிடறாரு!”
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை. “எதுக்காக விவாகரத்து கேட்கிறார்?” என்று அலறிவிட்டு இருமினார்.
“ஓ... அதுவா? என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிக்கிட்டு இருக்கீங்க. உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே!’’

ஒவ்வொரு வருஷமும் அடிக்கற வெயிலோட நிலைமையை பார்த்தா, ஒருநாள் திடீர்னு எல்லாரும் பக்குன்னு பத்திக்கப் போறோம்!
- ஷர்மிளா ராஜசேகர்

@smoker82_555  
கரும்பு ஜூஸ்ல சுகர் கம்மியா போடுங்கனு சொன்னது குத்தமாய்யா? கடைக்காரன் இந்த மொற மொறைக்கறான்!

மம்மிய பாக்குறத விட உனக்கு வெயில் பெருசா தெரியுதா? உக்காரு... ரெண்டு லட்சம் பணம் தருவாங்க!
- திப்புசுல்தான் கே

அதிமுக ஆட்சியில் வசந்தம் வீசுகிறது: ஜெ. சித்திரை வெயிலுக்கு ஒரே அனல் காத்தா வீசுது, வசந்தம் வீசுதாம்ல வசந்தம்... ஏன், ஏற்கனவே பிரசாரத்துல ரெண்டு பேர் செத்தது போதலையா?
- இளையராஜா அனந்தராமன்

@meenammakayal 
கல்யாணம் ஆகாதபோது கல்யாணம் ஆகலன்ற ஒரே ஒரு பிரச்னைதான் இருந்தது என்பதை கல்யாணம் ஆனபின் தெரிந்துகொள்ள நேர்வதே வாழ்வின் கொடூர டிசைன்!

அதிமுக வேட்பாளர் பட்டியல் ஏழாவது முறையாக மாற்றம்-செய்தி
# தேர்தல் மட்டும் இன்னும் ஒரு மாசம் தள்ளி வந்துச்சுன்னா, சென்னை விமான நிலைய மேற்கூரை உடைந்து விழுந்த எண்ணிக்கையை ஓவர்டேக் பண்ணிரும் போல!
- மதன்

@MrMarmaYogi  
அம்மா எங்களை குழந்தைகள் போல் நடத்துகிறார்- சி.ஆர்.சரஸ்வதி
# அதான் எல்லாரும் இன்னும் மண்டி போட்டே நடந்துட்டு இருக்கீங்களா?

@Sirumi123 
காதலிக்கும்போது மணிரத்னம் பட வசனம் போல க்யூட்டா பேசிட்டு, கிருபானந்த வாரியார் போல சொற்பொழிவு ஆற்றுகிறார்கள் கல்யாணத்துக்குப் பிறகு!

ஒரு நாள் முதல்வர் மாதிரி, மம்மி ‘ஒரு நாள் மக்களா’ இருந்து பாக்கணும்!
- தேவி கமல்

எதற்கும் கலங்காதவள் கல்நெஞ்சக்காரி இல்லை... கண்ணீர் வற்றியிருக்கும்!
- குமார் எஸ்