தத்துவம் மச்சி தத்துவம்



‘‘தலைவர் தினமும் மாடியில ஒவ்வொரு படிக்கட்டுல உட்கார்ந்து குடிக்கறாரே... ஏன்?’’
‘‘படிப்படியா குடியை விடறாராம்!’’
- அஜித், சென்னை-126.

‘‘ஓட்டுக்கு பணம் குடுக்கும்போது தலைவரைக் கையும் களவுமா பிடிச்சிட்டாங்களா... அப்புறம்?’’
‘‘ஓட்டு வங்கியில பணத்தை டெபாசிட் பண்றோம்னு சொல்லிட்டாரு!’’
- எஸ்.எலிசபெத் ராணி, மதுரை.

‘‘தலைவர் வீட்டுக்கு பொண்ணு கேட்கப் போனீங்களே... என்ன சொன்னார்?’’
‘‘234 பொருத்தமும் இருந்தாதான் பொண்ணு தருவேன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்...’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.



‘‘தலைவர் வீட்டுக்கு பொண்ணு கேட்கப் போனீங்களே... என்ன சொன்னார்?’’
‘‘234 பொருத்தமும் இருந்தாதான் பொண்ணு தருவேன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்...’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

என்னதான் வெயிலுக்கு மோர் கொடுத்து உபசரித்து, வேட்பாளர் தேர்வு நடத்தினாலும், அதையும் ‘நேர்
காணல்’னுதான் சொல்வாங்க... ‘மோர் காணல்’னு சொல்ல மாட்டாங்க!
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘தலைவர் மேலே யாரும் அவதூறு வழக்கு போட முடியாது...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘அவர் பேசறதுதான் யாருக்கும் புரியாதே!’’
- தீ.அசோகன், சென்னை-19.

‘‘தனியாகத் தேர்தலைச் சந்திக்கிறோம் என அறிவித்துவிட்டு, தேர்தல் பயத்திலும், டெபாசிட் போய்விடுமோ எனும் கவலையிலும் இருக்கும்
தலைவர் அவர்களை அடுத்தபடியாக பேச அழைக்கிறேன்...’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.