ஜோக்ஸ்



‘‘தலைவர் எதுக்கு போய் நோட்டா சின்னத்தை அழுத்தினாரு?’’
‘‘அதை அழுத்தினா ஏ.டி.எம். மாதிரி ‘நோட்டா’ வரும்னு எவனோ வதந்திய கிளப்பி விட்டிருக்கான்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

ஸ்பீக்கரு...

‘‘வருஷம் நூறு நாள் வாட்ஸ்அப்பிலும் மீதி நாளெல்லாம் லாக்அப்பிலும் இருக்கும் தலைவர் அவர்களே!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி

‘‘அந்த ஆஸ்பத்திரில எந்த பேஷன்ட்டும் ராத்திரி தூங்கவே மாட்டாங்க...’’‘‘ஏன்..?’’
‘‘டாக்டருக்கு தூக்கத்துல ஆபரேஷன் பண்ற வியாதி இருக்குதாம்..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘இன்ஸ்பெக்டர் கிட்ட கபாலி என்ன சொல்லிட்டுப் போறான்..?’’
‘‘தேர்தலுக்கு அப்புறமும் நம்ம கூட்டணி தொடரும்னுதான்...’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘எதிரியிடம் இருந்து தப்பிக்க ஆயிரம் வழிகள் உண்டென்று எப்படிச் சொல்கிறீர் மந்திரி..?’’
‘‘இதோ கூகுள் மேப் மன்னா...’’
- அஜித், சென்னை-126.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் டிரைவிங் தெரிஞ்சவர்னாலும், அவர் பஸ்ஸை ஓட்டற மாதிரி, காரை ஓட்டற மாதிரி, காலத்தை ஓட்ட முடியாது!
- கோபக்கார மனைவியோடு காலம் ஓட்ட முடியாமல் தவிப்போர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘நாமஇப்போ எடுக்கறது குடும்பப் படம்...’’
‘‘அதுக்காக ஹோம் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணலாம்னு சொல்றது சரியா சார்..?’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.