facebook



 நமது நாடோடிப் பிரதமரின் பயணத்திற்கு இந்த வருடச் செலவு அதிகமில்லை ஜென்டில்மேன், ரூபாய் 110 கோடி. இது கடந்த வருடத்தின் அவரது பயணச் செலவை விட அதிகம் என்பது கூடுதல் தகவல். கடந்த ஆண்டுச் செலவு 102 கோடி...
‪#‎ ஆப்‬ கி மோடி சர்க்கார்!
- நறுமுகை தேவி

‘‘சரி... சரி... அந்த 570 கோடி என்னோட கறுப்புப் பணம்தான். தண்டனையா ஒரு வருஷம் ஜெயில்ல போடுங்க. வேணும்னா நாலு அடி கூட அடிச்சுக்கோங்க! பெனால்டி 200 கோடி கழிச்சிக்கிட்டு மிச்ச 370 கோடியை என் அக்கவுன்ட்ல போட்டுடுங்க’’ என யாரும் கிளம்பலையா?
- எழிலன் எம்

ஐநூத்தி எழுபது கோடிய மூணு ஓட்ட லாரில கொண்டு போறாங்கே... இந்தியா ஏழை நாடுதான் போல!
- திப்புசுல்தான் கே

@erode_kathir 
ஒரு முத்தம் Morphine வலி நீக்கியைவிட 10 மடங்கு ஆற்றல் கொண்டது. இயல்பான வலி அடக்கிகளைத் தூண்டுகிறது.
இதை அனுபவிக்கிறதா... ஆராய்ச்சி செய்றதா!?

@aruntwitz
பிடித்தமானவற்றை மனதில் சேமித்த காலம் அழிந்து, ‘போன் கேலரி’யில் மட்டுமே சேமிக்கும் காலமாகி விட்டது.

மொழி கூட ஒரு தொற்று நோய் போலத்தான்.... பேசப் பேச ஒட்டிக்கும்!
- ப்ரீதா ராஜேஷ்

நியாயமாக பேசத் தெரியாதவரிடம் வாக்குவாதம் செய்வது நம் கன்னத்துல இருக்குற கொசுவை நாமே அடிக்கிறா மாதிரி... கொசு பறந்திருக்கும், ஆனா கன்னம்தான் வீங்கி இருக்கும்!
- செல்லி சீனிவாசன்

‘‘எதுக்குண்ணே ஓட்டுக்கு போய் ஐந்தாயிரம் தர்றீங்க? வாங்கிட்டுப் போடலன்னா?’’‘‘அட விடுறா! வாங்குன பணத்தை வச்சு என்ன செய்வான்? குடிப்பான். அவன் குடிக்கிற பார் நம்மளுது. ஓவரா குடிச்சா குடல் வெந்து ஆஸ்பத்திரில சேர்வான். ஆஸ்பத்திரியும் நம்மளுது. அதுவும் இல்லாட்டி ஸ்கூல், காலேஜ் ஃபீஸ் கட்டுவான். இது ரெண்டுமே நம்மளுது. கவலப்படாதே! எங்க சுத்துனாலும், நம்ம பணம் நம்மகிட்ட வந்துரும். நடுவுல ஒரு ரெண்டு நாளு அவன் பாக்கெட்ல இருக்கும். அவ்வளவுதான்!’’

@itisprashanth 
தனியார் பள்ளிகளை வெட்கித் தலைகுனியச் செய்து அரசுப் பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைத்த அத்தனை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் சல்யூட்!

@WriterRavikumar 
ரமணன் இல்லாத மழைக்காலம். ஏமாற்றம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல!

 நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம் அப்பவே இருந்திருக்கு... நம்ம பிரதமரே பி.ஏ படிச்சிட்டு டீக்கடைதான் வெச்சிருந்திருக்கார்!
- திப்புசுல்தான் கே

@sudhanks 
5 வாட்டர் கேன், 20 மேகி பாக்கெட், 25 கேண்டில், 10 பாக்கெட் பிரட், 10 பால் பாக்கெட் நாளைக்கே வாங்கி வெச்சுக்கணும்...
# அனுபவமே சிறந்த ஆசான்!

ஷாஜகான் காலத்தில் எதிர்க்கட்சி இல்லை... இருந்திருந்தா அவருக்குப் பிறகு தாஜ்
மகால் மருத்துவமனை ஆகியிருக்கலாம்!
- ராஜ் கிருஷ்ணன்

@Kozhiyaar 
ஒண்ணு வியர்வைல நனைய வேண்டியதா இருக்கு; இல்ல, மழைல நனைய வேண்டியதா இருக்கு. சாதாரணமா எப்பதான் இருக்க முடியுமோ!?

அமைதியாக இருப்பதென்பது, மூன்றெழுத்தில் சொல்வது போல அத்தனை சுலபமானதல்ல!
- மஞ்சுபாஷினி ஜெகதானந்தன்

@Pgp1Ramesh 
குரங்கு பெடல்ல சைக்கிள் பழகும்போது, எதிர்ல தண்ணி லாரிய பாத்தா வருமே ஒரு நடுக்கம்... அதே நடுக்கத்தில் தற்போது சென்னைவாசிகள்.
# சென்னையில்_மழை

அதிகளவு பணப் பட்டு வாடா நடந்ததால தேர்தல் ஒத்திவைப்புன்னா... குடுத்த பணத்த வீடு வீடா போயி திருப்பி வாங்குறதுக்காகவா..?
- குமரேஷ் சுப்ரமணியம்

@ZhaGoD 
முதல்வர் வந்தா ஏன் எந்திரிச்சு நிக்கணும்னு தேர்தல் அலுவலர்களை திட்டிட்டு இருக்கானுக! நாளைக்கி ஆசிட் அடிச்சிட்டா நீயா காப்பாத்துவ?

@itisprashanth 
முதல் மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவி சரண்யாவின் கல்விச் செலவை அரசே ஏற்று அவரை கௌரவப்படுத்த வேண்டும்!

‪பணத்தை‬ ஏழைகளுக்குக் கடனாகவும், பணக்காரர்களுக்கு நன்கொடையாகவும் கொடுக்கும் இடத்திற்குப் பெயர்... ‪வங்கி‬!
- இளையராஜா அனந்தராமன்

@aruntwitz
எல்லாப் பிரச்னைக்கும் தீர்வு கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் அதைக் கண்டுபிடிப்பதே பெரும் பிரச்னையாக இருக்கிறது.

பழக்கடைல ஒரு அம்மா கேக்குது, ‘‘ஏம்பா, ஸ்லீவ்லெஸ் திராட்சை இருக்கா?’’
# ஏங்க்கா, கண்டிப்பா இங்கிலீஷ்ல பேசியே தீரணுமா?

அடிக்கிற குளிரில்...அட்டு ஃபிகரும் லட்டு ஃபிகர் மாதிரி தெரிகிறார்கள், வெளிநாட்டில்!
அடிக்கிற வெயிலில்...
லட்டு ஃபிகரும் அட்டு ஃபிகர் மாதிரி தெரிகிறார்கள், தமிழ்நாட்டில்!
மரம் வளர்ப்போம்... ஃபிகர்களைக் காப்போம்!

கையேந்தும் யானை  காசா கேட்கிறது? காட்டையல்லவா கேட்கிறது

- சூர்யா தாஸ்

@pshiva475
முதல்முறையா ஒரு பெண் என்னிடம் பேசினாள். பஸ்ல அமர்ந்திருந்தேன். அவள் நின்றுகொண்டிருந்தாள். என்னைப் பார்த்து, ‘‘இது லேடீஸ் சீட்டு, முதல்ல எந்திரி!’’ என்றாள்.

WhatsApp

செந்தில்: அப்போ அந்த 570 கோடி என்னாகும்ணே?!
கவுண்டர்: அடேய் தீச்சட்டி மண்டையா! மலேசியா விமானம் ஒண்ணு காணாமப் போச்சுல்ல?
செந்தில்: ஆமாண்ணே...
கவுண்டர்: அது உனக்கு இப்ப ஞாபகமிருக்கா?
செந்தில்: இல்லைண்ணே...
கவுண்டர்: அதேதாண்டா... கொஞ்ச நாள் ஆனா எல்லாரும் மறந்துடுவானுங்க. போய் பொழப்ப பாருடா!

- அன்பழகன் வீரப்பன்


‘‘சார், உங்க நாலு பசங்களும் என்ன பண்றாங்க?’’‘‘மூத்தவன் எம்.ஏ படிச்சிருக்கான். ரெண்டாவது பையன் எஞ்சினியரிங் முடிச்சிருக்கான். மூணாவது பையன் பி.காம் படிச்சிருக்கான். நாலாவது பையன் மட்டும் ஒண்ணும் படிக்காம பிக் பாக்கெட் அடிக்கிறான்!’’
‘‘அய்யோ, அப்படிப்பட்ட பையனை ஏன் சார் வீட்ல வச்சிருக்கீங்க?’’‘‘என்ன பண்றது? அவன் ஒருத்தன்தான் சம்பாதிக்கிறான்!’’

ஒரு மாசம் செக் பண்ணப்பவே ஐந்நூறு கோடில்லாம் கணக்கு இல்லாம சிக்குது. மத்த மாசம்லாம் எவ்ளோ கடத்துவாங்கே?
- திப்புசுல்தான் கே

@kattathora
மனைவி அமைவதெல்லாம் இறைவன் (கடுப்புல) கொடுத்த வரம்!