குங்குமம் டாக்கீஸ்



* இந்தியில் அக்‌ஷய்குமார், அனுபம் கெர்ருடன் காஜல் அகர்வால் நடித்த படம், ‘ஸ்பெஷல் 26’. மூன்று வருடம் கழித்து இப்போது மறுபடியும் அந்த டீம் சந்திக்க, நெகிழ்ந்திருக்கிறார் காஜல்.



* ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு ெவளிச்சம் கிடைத்துவிட்டது. முடியாமல் இருக்கிற 15 நாட்கள் ேவலையை அமெரிக்காவிலிருந்து வந்த உடனே முடித்துவிடுவார் கமல்.

* சிம்பு-கௌதம்மேனன் பனிப்போர் தீவிரமாகி இறுகி நிற்கிறது. கடைசி நான்கு நாட்கள் சிம்பு ஷூட்டிங்கிற்கு ஆப்சென்ட். படப்பிடிப்பை கேன்சல் செய்து கிளம்பிவிட்டார் கௌதம்.

* பரதன் படத்தை அடுத்து, எத்தனையோ இயக்குநர்கள் வரிசையில் நின்றார்கள். கதையும் சொன்னார்கள். விஜய் தேர்ந்தெடுத்திருப்பது மறுபடியும் ‘அட்லி’யை!

* சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா இப்போது நடித்து வரும் ‘துருவா’ ஷூட்டிங் காஷ்மீரில் பரபரக்கிறது. ‘தனி ஒருவ’னின் தெலுங்குப் பதிப்புதான் ‘துருவா’ என்பதால் படத்தில் அர்விந்த்சாமியும் உண்டு. ராம்சரணின் ராசி ஹீரோயின் ரகுல் ப்ரீத்சிங்கும் உண்டு!



* ‘‘அசைவ உணவுகள் பிடிக்கும். உடல் எடை அதிகரிச்சிடுமோன்னு சாப்பிடாமல் இருந்துட மாட்டேன். நான்-வெஜ்னா அதை ஒரு பிடி பிடிச்சிடுவேன். அப்புறம், ஜிம்முக்கு போய்டுவேன். அதனாலதான் எப்பவும் ஒரே வெயிட்டை பராமரிக்க முடியுது!’’ - என ஸ்லிம் சீக்ரெட் சொல்கிறார் திவ்யா. கவர்ச்சியில் மட்டும் வெஜ்தான் போல!

* ‘மோகினி’க்காக லண்டன் சென்றிருக்கும் த்ரிஷா, அங்கே ‘காஞ்சுரிங் 2’ பார்த்து உறைந்து போயிருக்கிறார். ‘‘படம் அவுட்ஸ்டாண்டிங்’’ என கூடவே பாராட்டியும் ட்வீட்டிவிட்டார்.

* சசிகுமாரின் அடுத்த படமான ‘கிடாரி’யில் மு.ராமசாமி, வேல.ராமமூர்த்தி, வசுமித்ர போன்ற இலக்கியவாதிகள் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

* பயணங்களின் காதலியான ‘குயின்’ கங்கனா ரணாவத், சமீபத்தில் ஜெர்மனிக்கு தனியாகப் பறந்து திரும்பியிருக்கிறார். ‘‘ஜெர்மனியில பத்து கிலோமீட்டருக்கு மேலே நடந்திருப்பேன். பஸ், ட்ரெயின்ல பயணிச்சேன்... சுற்றி எங்கும் சந்தோஷம்தான். தனியா சுத்தினேன் என்ற பயமே இல்லை!’’ என ஃபீல் ஆகிறார் கங்கனா.

* பவன் கல்யாண் படத்தை தெலுங்கில் இயக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியிருந்தார். திடீரென்று அவரை விலக்கிவிட்டார்கள். சோர்ந்திருந்த அவரை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ்பாவுவிற்கு வில்லனாகத் தேர்ந்தெடுத்துவிட்டார்.

* நாசர் குடும்பமும் சிவகுமார் குடும்பம் மாதிரி ஆகப் போகிறது. நாசரின் இளைய மகன் அபியும் நடிப்புப் பயிற்சி எடுக்கிறார். குறும்படங்களில் நடித்து வருகிறார்.

* ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு வரப் போகிறார் அஞ்சலி. அவருக்கு வேண்டிய முழுப் பாதுகாப்பையும் ஜெய் கொடுக்க முடிவு செய்துவிட்டார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் செட்டிலாகிறார் அஞ்சலி!

* மலையாளத்தில் நிவின் பாலி நடித்த ‘ஜேக்கப்பின்டே ஸ்வர்க ராஜ்ஜியம்’, 75 நாட்களைக் கடந்துவிட்டதால், நிவின் அவ்விடே ஹேப்பி. சமீபத்தில் ஐதராபாத் விமானப் பயணத்தின்போது அங்கே பக்கத்து சீட்டில் மம்மூட்டியைப் பார்த்ததில் நிவின் மறுபடியும் ஹேப்பியாம்!

* ‘விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார்’ என இணையத்தில் போகிற போக்கில் ஜி.வி சொல்லி வைக்க, ரஜினி, அஜித் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்துவிட்டார்கள். நொந்து போயிருக்கிறார் ஜி.வி!

* ‘அகிரா’ பட ரிலீஸ் வேலைகளில் பரபரப்பாகிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தில் பாலிவுட் இயக்குநர்
அனுராக் காஸ்யப் நடிக்கிறார். அவரது ஜோடி ராய்லட்சுமி.

* தெலுங்கில் பிஸியாக இருக்கும் ப்ரணிதா சுபாஷ் ‘மாஸ்’ படத்துக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார். ஜெய் நடிக்கும் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தில் இவர்தான் ஹீரோயின்.

* விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இப்போது பேசிக்கொள்வதில்லை. ஃபிலிம்ஃபேர் விழாவில் சந்தித்தபோது சும்மா புகைப்படத்திற்காக பேசிக்கொண்டார்கள். ஊடலா, பிரிவா என்பது முடிவாகவில்லை!