வலைப்பேச்சு



@aruntwitz 
சமூக அவலங்களை அட்ஜஸ்ட் செய்து கொள்பவர்களுக்கு ‘மிடில் கிளாஸ்’ என்று பெயர்.

@Dhrogi 
குழந்தைகளுக்கு மன்னிக்க வேண்டும் என்பதெல்லாம் தெரிவதில்லை. அவர்களுக்கு மறக்கத் தெரிகிறது... அவர்களாகவே மீண்டும் வந்து பேசத் தெரிந்திருக்கிறது!



ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம்தான்... நாயா அலைஞ்சா அவன் ஏழை; நாயோட அலஞ்சா அவன் பணக்காரன்!

@kanagu_v 
10 பைசா, 25 பைசாக்களோடே செல்லாமல் போய்விட்டன பாட்டிகளின் கதைகளும்!

@BoopatyMurugesh 
குடத்துல தண்ணி புடிச்ச காலம் வரை பெண்கள்தான் தூக்குனாங்க... இந்த தண்ணி கேன் வந்ததுல இருந்து ஆம்பளயதான் தூக்க விடுறாய்ங்க!

@BoopatyMurugesh 
குடத்துல தண்ணி புடிச்ச காலம் வரை பெண்கள்தான் தூக்குனாங்க... இந்த தண்ணி கேன் வந்ததுல இருந்து ஆம்பளயதான் தூக்க விடுறாய்ங்க!

ஒரு திரைப்படத்திற்காக 10 இணையதளங்களை ஒரே நாளில் முடக்கும் சைபர் க்ரைமைக் கொண்ட நாட்டில், ஒரு பெண்ணின் ஆபாசப் படம் பதிவேற்றப்பட்ட ஒரு இணைய பக்கத்தை 10 நாட்களாக முடக்க முடியாமல் அவள் தற்கொலை செய்துகொண்டாள்...
- பூபதி முருகேஷ்



@writernaayon 
சென்னை கொலைக்குப்பின் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சிசிடிவி கேமரா விற்பனை உயர்ந்து, முதலாளிகள் மகிழ்வதற்குப் பெயரே பட்டர்ஃப்ளை எஃபெக்ட்!

‘மகிழ்ச்சி’ என்ற வார்த்தையை இப்போதுதான் தமிழில் சேர்த்துள்ளார்கள் போல...
- நாஸிர் மொஹமத்

@kbruce19771 
‘பருப்பு விலை கி.200 ரூவாடா’ன்னு ஒப்பாரி பாடிட்டு இருந்த கூட்டம்தான் இப்போ ‘நெருப்புடா டிக்கெட் விலை 1000 ரூவாடா’ன்னு பெருமை பாடிட்டு இருக்கு!

காதலன் : செல்லம் எங்க இருக்க?
காதலி : அம்மாகூட ஷாப்பிங் மால்க்கு வந்தேன் டா!
காதலன் : எந்த ஷாப்பிங் மால்?
காதலி : ஃபீனிக்ஸ் மால்டா!
காதலன் : ஓகே... அப்படியே கொஞ்சம் பின்னாடி திரும்பிப் பாரு... ரேஷன் கடையில் நீ நிக்கிற க்யூலதான் நானும் லாஸ்ட்டா நிக்கறேன்..!

@Kannan_Twitz 
ஒருத்தன் ஒரு வீட்டுப்பக்கம் அடிக்கடி சுத்தறான்னா, அந்த வீட்டுல WiFi இருக்கணும், இல்லன்னா அவனோட வருங்கால WIFE இருக்கணும்னு ஆய்வு சொல்லுது.

பொறியியல் கல்லூரி ஒன்றின் பேராசிரியர்கள் அத்தனை பேரும் ஒரு விமானத்துக்குள் அமர்ந்திருந்தார்கள். டேக் ஆஃப் ஆவதற்கு முன்னால் அறிவிப்பு வந்தது... ‘இந்த விமானம் நமது கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டது.’ உடனே அத்தனை ஆசிரியர்களும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று வெளியே ஓடிவிட்டார்கள். கல்லூரி முதல்வர் மட்டும் விமானத்திலேயே அமர்ந்திருந்தார்.

‘‘உங்களுக்கு பயமா இல்லையா சார்?’’ என வெளியில் இருந்து ஒருவர் கேட்டார். அதற்கு அவர் கூலாக பதில் சொன்னார், ‘‘எனக்கு நம்ம மாணவர்கள் மேல நம்பிக்கை இருக்கு. இந்த விமானம் ஸ்டார்ட் ஆகாது!’’

காதல் வாழ்க்கை மோடி மாதிரி... சும்மா வானத்துல பறக்குறாப்ல தெரியும்! கல்யாண வாழ்க்கை மன்மோகன் சிங் மாதிரி... எதுவும் பேச முடியாது!

@HELLOME787 
ஆரம்பத்திலிருந்து சைக்கிள்ல போனா கேவலமாகத்தான் பார்ப்பாங்க. கொஞ்ச நாள் கார், இல்லன்னா பைக்ல போய்ட்டு சைக்கிள்ல போனா ‘‘இவன் ரொம்ப சிம்பிள்’’னு சொல்வாங்க!

@palanikannan04 
அம்மாக்களின் கைப்பக்குவம் மனைவிகளிடம் வருவதில்லைனு சொல்றாங்க. ஆனா, அதே மனைவி அம்மா ஆனதுக்கு அப்றம் எப்டி அவங்க பசங்களுக்கு டேஸ்ட்டா செய்றாங்க?

எனக்கு பேய்னா பயமே இல்ல, நாய்னாதான் பயம். ஏன்னா, நாய் நெஜமா இருக்கே!
- ரகு ஆர்

டக்குன்னு லாரிய க்ராஸ் பண்ணிட்டு போயிடலாம்னு போகும்போது முன்னாடி சைக்கிள்ல ரோட மறைச்சுட்டு  போறவர் மேலேயே இவ்ளோ கோவமா வருதே... திருடனைப் பிடிக்கறேன்னு மம்மி ஐடியா படி போலீஸ் சைக்கிள்ல போனா எவ்ளோ கொலைவெறி வரும்!
- ஷர்மிளா ராஜசேகர்

எவ்வளவு காலம்தான் ஆடி மாசம் ஆனா பொண்டாட்டிய அம்மா வீட்டுக்கு அனுப்புவீங்க? ஒரு சேஞ்சுக்கு புருஷன பாண்டிச்சேரி அனுப்புங்களேன்!
- தமிழக புது மாப்பிள்ளை நலச் சங்கம்

@Parimal16823196 
தொகுதிக்கு 20000 போலி வாக்காளர்கள் - தேர்தல் ஆணையம்
# சேர்த்ததே நீங்கதானே தேர்தல் ஆணையரே. இந்த லட்சணத்தில் தேர்தலையே நடத்தி முடிச்சாச்சு!

@nithya_shre 
கல்விக்கடனைக் கட்ட மிரட்டி பொறியியல் பட்ட சான்றிதழைப் பிடுங்கிச் சென்றதால் இளைஞர் தற்கொலை... மிரட்டிய தனியார் நிறுவனம் லட்சம் கோடி கடன் பாக்கி!

@vinothanaseeli 
மாநிலத்திற்கு போதுமான அதிகாரம் தேவை: முதல்வர்
தாயி, அப்போ இனிமே வெளி மாநில அமைச்சர் வந்தாலும் குனிஞ்சிட்டேதான் வரணும்னு சொல்றீங்க... சரிதானே!

வீட்டுல பொண்டாட்டி வச்ச சாம்பார் வாளிக்குள்ள விழுந்து பல்லி செத்துப் போச்சு... கேட்டா ‘பல்லிதான் விஷம்’பா!
- பிரவின் தேவராஜ்

@mofra2 
பணக்காரனா இருந்து ஏழையாகுறதும், 3G யூஸ் பண்ணிட்டு 2G யூஸ் பண்ணுறதும் ஒண்ணுதான்... ரொம்ப கஷ்டமான விஷயம்!

பொண்டாட்டி சமைக்கலேன்னா பரவாயில்லன்னுட்டுப் போறவன் ‘புருஷன்’; வேலைக்குப் போற பொண்டாட்டிக்கு சமையல்ல ஹெல்ப் பண்றவன் ‘மனுஷன்’; வேலைக்குப் போறதுக்கு முன்னாடி பொண்டாட்டிக்கு சமைச்சு வச்சுட்டுப் போறவன் ‘பெரிய மனுஷன்’!
- ஸ்ரீதேவி செல்வராஜன்

@karthiykj 
நம்ம ஆட்சிதான் சாதனை செஞ்சிருக்கு அம்மா -ஓபிஎஸ்
எப்படி சொல்ற பன்னீரு -ஜெ
ஒரே நாளில் பத்து கொலை நடந்திருக்கு -ஓபிஎஸ்

‘ஆசைக்கு ஒரு பொண்ணு, ஆஸ்திக்கு ஒரு பையன்’ மாதிரி ஆசைக்கு ஒரு ஆண்ட்ராய்டு போன், அவசரத்துக்கு ஒரு ஆர்டினரி போன் வெச்சிக்கணும் போல... சார்ஜ்ல இருக்குற நேரத்தை விட சார்ஜர்ல இருக்குற நேரம்தான் ஜாஸ்தி இந்த ஸ்மார்ட் போன்கள்!
- செல்லி சீனிவாசன்

கடலை சாகுபடிக்கு ஏற்ற மண்...
பீச் மண்!
‪- செந்தில்குமார் நல்லவன்

‘கபாலி’ படத்தை வெளியிடவிருந்த 200 இணையதளங்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - செய்தி
# அப்படியே பத்து ரூபாய் பெறாத பாப்கார்ன் பாக்கெட்டை 150 ரூபாய்க்கு விக்கிற அநியாயத்தையும் தட்டிக் கேட்டா... மகிழ்ச்சி‬!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

காலையில் எல்.ஆர்.ஈஸ்வரி வாய்ஸும், சாலையில் ஆடித் தள்ளுபடி நாய்ஸும் கேட்டே ஆகணும்!
#‎ ஆடி‬ டிசைன்...
- எழிலன் எம்

‘‘எனக்காக ரயில்ல ஒரு நாலு பேராவது காத்துட்டு இருப்பாங்க...’’
‘‘யாருங்க அவங்க... உங்க நலம் விரும்பிகளா?’’
‘‘இல்ல... லோயர் பர்த் விரும்பிங்க!’’
- பொம்மையா முருகன்

பேங்க் மேனேஜர்: வீடு கட்டும்போது இருந்த வேகம் அதற்கான லோன் கட்டும்போது இருப்பதில்லை...
கடன்காரர்: வீடு கட்டியது பலர்... லோன் கட்டுவது தனியொருவன்டா!