jokes



‘‘தனக்கு வந்த குற்றப் பத்திரிகையை தலைவர் ஆர்வமா படிக்கறாரே... எப்படி?’’
‘‘பக்கத்துக்குப் பக்கம் மகளிரணித் தலைவி படம் ஒட்டியிருக்காம்!’’

‘‘படத்துக்கு ஏன் வரிவிலக்கு
கிடைக்கலை..?’’
‘‘தெரியாம ‘கன்டெய்னர்’னு டைட்டில் வச்சு தொலைச்சுட்டேன்!’’

‘‘டாக்டர்! எனக்கான நர்ஸ் யாரு..?’’
‘‘அதையும் 24 மணி நேரம்
கழிச்சுத்தான் சொல்ல முடியும்!’’

‘நம்ம மகளிரணித் தலைவியை தலைவர் எதுக்காக டாக்டர்கிட்ட கூட்டிட்டிப் போறார்..?’’
‘‘தலைவரோட பார்வையைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களாம்!’’

- அம்பை தேவா, சென்னை-116.