வலைப்பேச்சு



@laksh_kgm 
ஒரு நூறு ரூபாய் நோட்டின் கதையைக் கேட்டுப் பாருங்கள்; அது, உலகத்தின் கதையையே சொல்லும்!

@BulletJackie 
‘தேவர் மகன்’ கமல் மாதிரி கம்பு சுத்தலாம்னு நினைக்கும்போெதல்லாம் வாழ்க்கை வாய்லயே குத்தி ‘குருதிப்புனல்’ கமல் மாதிரி உட்கார  வச்சிடுது!

@vinothanaseeli 
திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை-கோர்ட் அறிவுறுத்தல்
# அப்ப இனிமே ‘ஹீமோகுளோபின்-5.5 to 6, தைராய்டு- 9 to 10 கொண்ட மணமகள் தேவை’னு விளம்பரம் வரலாம்!

@archanabaluit 
கடைசியில் நம் ‘உயிர்’கூட நம்மை விட்டுப் பிரிந்துவிடுகிறது!

@twittornewton 
மிடில் கிளாஸ் இரண்டு வகைப்படும்:
1. upper மிடில் கிளாஸ், 2. ‘மிடில’ கிளாஸ்

@VenkysTwitts 
பூட்டு போட்டால் கூட உடைத்து எடுத்துவிடுவார்கள். ஆனால் கூகிள் சர்ச் ரிசல்ட்டில் இரண்டாவது பக்கத்துக்கு மேல் வைத்தால் யாரும்  எடுக்கமாட்டார்கள்!

@ThalayMagan 
கொஞ்சம் லேட் ஆனவுடனே மனைவி போன் பண்ணி, ‘‘இப்ப மணி என்ன?’’ன்னு கேட்டால், உனக்கு வீட்டுக்கு போனவுடனே கச்சேரின்னு  அர்த்தம்!

@kunnathurarumug 
நாலு வருஷத்துக்கு ஒரு தடவை இந்தியாவ கேவலப்படுத்துறதுக்குன்னே உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து செய்ற சதிதான்டா இந்த  ஒலிம்பிக்ஸ்!

@Krish_ofcl 
அட்சய திருதியை அன்னிக்கு ஒலிம்பிக் வச்சுருக்கணும், நம்மாளுக அத்தனை தங்கத்தையும் வாங்கிட்டு வந்துருப்பானுக.
இது தெரியாம...

@udaya_Jisnu 
ஒலிம்பிக்ல பேச்சுப் போட்டி  நடத்தி, அண்ணன் சீமான  கலந்துக்க வைக்கணும். எல்லா போட்டியையும் வாபஸ் வாங்கிட்டு, உசுர கைல   புடிச்சுட்டு ஓடுவானுக...

@Kannan_Twitz 
மழைநீரில் மூழ்கிய கப்பலை கவலையுடன்  பார்த்துக்கொண்டிருந்த குழந்தைக்கு சொன்னேன், ‘அது நீர்மூழ்கிக் கப்பல்’ என்று! மீண்டும்  அதன் முகம் மலர்ந்தது...

@Kannan_Twitz 
பசங்க குடிச்சுட்டு ‘‘மச்சி, ஸ்மெல் வருதா?’’னு ஊதிக் காட்டுறதும், பொண்ணுங்க ‘‘மேக்கப் கொஞ்சம் ஓவரா இருக்கா?’’னு கேக்குறதும்  ஒண்ணுதான்னு ஆய்வு சொல்லுது.

@Lorrykaran 
‘வரலட்சுமி நோன்பு, புருஷன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குனா நல்லதாம்’னு வூட்டம்மா சொல்லுச்சு! ‘டக்’குன்னு கால்ல  வுழுந்துட்டேன்!

@ThalayMagan 
வீட்டில் எவரேனும் விருந்தினர் இருக்கும்போது கணவன் மனைவியின் கண் ஜாடை பாஷைகள் உண்மையிலேயே புரிதலின் உச்சம்!

@SKSurya_offl 
ஸ்டைலா வண்டி வாங்குறானுங்க... சரி! பொண்டாட்டி, புள்ளயெல்லாம் ஏறி உக்கார கூடவே ஏணி வாங்குவானுங்களா,
மாட்டானுங்களா?

@vinodhkrs 
கடும் உழைப்பிற்கு அன்றே கிடைக்கும் பலன்களுள் ஒன்று, இரவு படுத்ததும் தூக்கம் வருவதுதான்!

@sathish_vss 
பிச்சைக்காரன் கூட நம்பி கேக்கறான், எங்கிட்ட ஏதோ இருக்குன்னு! நான்தான் நம்மகிட்ட ஒண்ணுமில்லையேன்னு வருத்தத்தோட  சுத்திக்கிட்டு இருக்கேன்!

முன்னாடி எல்லாம் பணத்த பேங்க்ல இருந்து எடுத்துட்டு வர்ற கஸ்டமர்கிட்ட இருந்து திருடுனானுங்க... அப்புறம் பேங்க்ல போய்  திருடுனானுங்க... இப்பல்லாம் பணம் ரிசர்வ் பேங்க்ல இருந்து பேங்குக்கு வர்றதுக்கு முன்னாடியே திருடிடுறானுங்க!
# வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியா!

குடிகார முனுசாமியை தொட்டியில் மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்து பாதிரியார் கூறினார்...
‘‘உன்னுடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டன. இன்று முதல் நீ பரிசுத்தமானவனாகிறாய். ‘மோசஸ்’ என்றழைக்கப்படுவாய். இனிமேல்  குடிக்கமாட்டேன் என சத்தியம் செய்துகொடு மோசஸ்!’’
‘‘சத்தியம் ஃபாதர்... இனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன். சர்பத் குடிக்கலாமா பாஸ்டர்?’’
‘‘தாராளமாக எத்தனை தடவை வேணும்னாலும் குடிக்கலாம்!’’
‘‘ஓகே பாஸ்டர்!’’
மோசஸ் ஆன குடிகார முனுசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு ஃபுல் பாட்டில் விஸ்கியை எடுத்து, தொட்டியில்  இருந்த தண்ணீருக்குள் மூன்று முறை முக்கி எடுத்துக் கூறினான்...
‘‘உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவப்பட்டன. நீ பரிசுத்தமானவனாகிவிட்டாய். இன்று முதல் நீ ‘சர்பத்’ என்றழைக்கப்படுவாய்!’’

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்... ஒலிம்பிக் தேர்வுக் குழுவைக் கண்டித்து. நம்ம விஜய்யை அவர்கள் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத்  தேர்ந்தெடுத்து அனுப்பாதது ஏன்?
‘குருவி’யில் லாங் ஜம்ப்
‘அழகிய தமிழ்மகனி’ல் ஓட்டம்
‘கில்லி’யில் கபடி
‘பத்ரி’யில் பாக்ஸிங்
‘போக்கிரி’யில் துப்பாக்கிச் சூடு எனப் பல உலக சாதனைகளைப் படைத்த அவரை அனுப்பாததன் மூலம் 5 தங்கப் பதக்கங்களை இந்தியா  இழந்துள்ளது!

யார், யார் எப்படிப் பேசுவார்கள்?
கிரிக்கெட் வீரர் - ‘ஓவரா’ பேசுவார்
போட்டோகிராபர் - ‘டெவலப் பண்ணி’ பேசுவார்
ரவுடி - ‘அடிச்சுப்’ பேசுவார்
ஹோட்டல் சர்வர் - ‘சூப்’பரா பேசுவார்
வக்கீல் - ‘பீஸ்ஃபுல்லா’  பேசுவார்
ஃபாஸ்ட் ஃபுட் ஓனர்- ‘காரசாரமா’ பேசுவார்
ஐஸ் விக்கிறவர் - ‘குளிரக் குளிரப்’ பேசுவார்
டெய்லர்- ‘கட் பண்ணிப்’ பேசுவார்
பூக்கடைக்காரர் - வார்த்தையை ‘அளந்து’ பேசுவார்
டயட்டீஷியன் - ‘உப்பு சப்பில்லாமல்’ பேசுவார்
பேங்க் மேனேஜர்- ‘இன்ட்ரஸ்ட்டா’ பேசுவார்
பியூட்டிஷியன்- ‘அழகாப்’ பேசுவார்
கசாப்புக் கடைக்காரர் - ‘வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு’ன்னு பேசுவார்
ஸ்வீட் கடைக்காரர்- ‘இனிக்க இனிக்கப்’ பேசுவார்

மதியம் வாங்கிய பிரியாணியில் முட்டை வைக்கத் தவறி விட்டனர். இதற்கும் சசிகலா புஷ்பாவே காரணம்; நடவடிக்கை எடுக்குமா தமிழக  அரசு?
- திலிப் குமார்

நாங்களெல்லாம் இருபது வருஷத்துக்கு முன்னாடியே ஒலிம்பிக் மூலமா தங்கம் வாங்குனவங்களாக்கும்... ஒலிம்பிக் வெட்டிங் கார்டு வாங்கி  இன்விடேஷன் அடிச்சி, அதுமூலமா மாமனார்ட்ட தங்கம் அள்ளுனதெல்லாம் யாரு... நாமதானே!
- பொம்மையா முருகன்

பாராளுமன்றத்தில் போரடித்தால் ஒரு
என்டர்டெயின்மென்ட்டுக்கு அ.தி.மு.க எம்பி ஒருவரை எழுப்பி பேச விட்டு மேசைக்கு அடியில் உருண்டு புரண்டு சிரித்துக் கொள்வார்கள்  போல...
- ஷான் கருப்பசாமி

லவ் பண்றவனும் இந்த கம்யூனிஸ்ட்டும் ஒண்ணு... யாரும் அவங்க பேச்சைக் கேக்காட்டியும் சும்மா அனத்திக்கிட்டே இருப்பாய்ங்க...
- வினோத் முருகதாஸ்

ரயில் கொள்ளை சென்னையில்தான் நடந்திருக்க வாய்ப்பிருக்கு - செய்தி
சேலத்தில் திருட்டு நடக்கவில்லைன்னு நான் பெருமைப்பட்டுக்கறேன்; சென்னையில் இருப்பவர்களால்தான் இவ்வளவு பெரிய திருட்டை  திறமையா செய்ய முடியும்னு சென்னையில் இருக்கறவங்க பெருமைப்பட்டுக்கங்க. எப்படியாவது அவங்கவங்க ஊருக்கு பெருமை சேர்ந்தா  சரி!
- சுந்தரம் சின்னுசாமி

ஆடின்னாலும், ஆவணி, புரட்டாசின்னாலும், வருஷம் முழுக்கவுமே நம்ம மக்கள் போற ஷாப்கள்... ஒண்ணு, ஒயின் ஷாப்;
இன்னொண்ணு, மெடிக்கல் ஷாப்.
- அனிதா என் ஜெயராம்

அன்பே... சென்னை வெள்ளத்தில் நிவாரணத் தொகை வழங்காமல் விடுபட்டோருக்கு நிவாரணம் கொடுக்கும் அறிவிப்பு ஏதாவது  வந்திருக்கிறதா? மாயமாய் போன விமானம் கிடைத்துவிட்டதா? அந்த 570 கோடி யாருடையது என்று கண்டுபிடித்துவிட்டார்களா? அல்லது நீ  என்னை மறந்ததுபோல இதையும் மறந்துவிட்டாயா?
- கார்ட்டூனிஸ்ட் முருகு

அடுப்புல பாலை வச்சுட்டு செத்த அங்கிட்டு இங்கிட்டு நகந்தாலும் பால் பொங்குற மாதிரி சத்தம் காதுல கேட்டுக்கிட்டே இருக்கும்!
- விஜயலக்ஷ்மி இளங்கோ

‘நெருப்புடா... நெருங்குடா’ என புறப்படும் வாழ்க்கையை, ‘மாய நதி இங்கு மார்பில் வழியுதே’ என அமைதிப்படுத்துவது, நாம் வாங்கும்  அடிகளும், அனுபவங்களுமே!
- ஆர் வேலுமணி திருப்பூர்
செல்லுல சார்ஜ் நிக்க மாட்டேங்குது, சசிகலா புஷ்பா மேல கம்ப்ளைன்ட் கொடுக்கணும்!
- பாலா சேலம்
சசிகலா புஷ்பா 3ம் வகுப்பு ஆ பிரிவு படிக்கும்போது சக மாணவி மலர்க்கொடியிடம் பல்ப்பம் வாங்கி ஏமாற்றியதும் வழக்காகுமா?
- சம்பத் இளங்கோவன்

எப்பவும் சமையலை மனைவி முடிவு பண்ணாலும், காலையில பழையதுக்கு ஊறுகாயா, துவையலா என்பதை தமிழக மின்சார வாரியமே  முடிவு பண்ண முடியும்!
- ரஜினி விஜய்

எதுடா அந்த நல்ல மருந்து???
பாரபட்சம் இல்லாம எல்லா பேஷன்ட்டும் கேக்குறது ‘ந‌ல்ல மருந்து’ குடுங்கன்னு! அது எப்படி இருக்கும், எங்க கிடைக்கும்னு  தெரிஞ்சிட்டா போதும்... எல்லோரையும் சரி பண்ணிடலாம்!
- சரவ் யுவர்ஸ்

ஒபாமாவோட மகள் ரெஸ்டாரன்ட்டில் வேலை பார்ப்பது அரசியல்வாதிகளுக்கான பாடம் இல்லை மக்களே, நமக்கான பாடம் அது! நம்மில்  எத்தனை பேர் கெளரவம் பார்த்து எத்தனை வருமான வாய்ப்புகளை இழந்திருப்போம்?
- அனந்த பிரகாஷ்

தன் புருஷன் எத்தனையாவது பீர் பாட்டில்ல மட்டையாவான்னு தெரிஞ்சி வச்சிருப்பவதான் சிறந்த பொண்டாட்டி.
- மோனிக்