jokes



‘‘அண்ணே.. தலைவர் உங்களை எதுக்காக கட்சியை விட்டு நீக்கினார்?’’
‘‘மேடையில அவர் சொல்லலாம்னு நினைச்சிருந்த குட்டிக்கதையை தெரியாத்தனமா நான் ஒரு மேடையில சொல்லிட்டேன்!’’

‘‘தலைவரே! மேடையில இனிமே கதையெல்லாம் சொல்லாதீங்க...’’
‘‘ஏன்யா..?’’
‘‘இங்க பாருங்க... போஸ்டர்ல ‘சிறப்புரை’னு போடாம, ‘சிறப்புக் கதை’ன்னு உங்க பேரை போட்டிருக்காங்க!’’

‘‘தலைவரே! கதை தன்னோடதுன்னு ஒருத்தர் உங்க மேல கேஸ் போட்டிருக்கார்...’’
‘‘நான் சினிமா எதுவும் எடுக்கலையே... பின்னே எப்படி?’’
‘‘மேடையில நீங்க சொன்ன கதையாம் தலைவரே!’’

‘‘என்னது... இதுதான் உங்க கட்சியோட கு.க. அலுவலகமா?’’
‘‘ஆமா... தலைவருக்கு ‘குட்டிக் கதைகள்’ தயாரிச்சுக் கொடுக்கற அலுவலகம்!’’
- கோவி.கோவன், சென்னை-107.