கமென்ட் கோயிந்து



-சக்திவேல் மருதமுத்து

சென்னை விமானநிலையத்தில் கழிவறை கூரை இடிந்து விழுந்தது: செய்தி
எல்லா சாமியும் சென்னை ஏர்போர்ட்லதான் இருக்கும் போல... ‘கொட்டுற தெய்வம் கூரைய பிச்சிக்கிட்டு கொட்டும்’னு சும்மாவா சொன்னாங்க!

காதலியை திருமணம் செய்வதாக போலீசில் ஒப்புக் கொண்டுவிட்டு தற்கொலை செய்த ஆட்டோ டிரைவர்: செய்தி
கல்யாணம் பண்ணி கொஞ்சம் கொஞ்சமா சாகறதை விட, ஒரே தடவையில சோலிய முடிச்சுக்குவோம்னு போய்ச் சேந்துட்டாரு போல!

உள்ளாட்சித் தேர்தலை தனித்தே சந்திக்க விரும்புகிறோம்: பா.ஜ.க
அப்படின்னா இந்த ஃபிரண்டு, அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர்லாம் பண்ண மாட்டிங்க? நடிச்சா ஹீரோதானோ!

3G சேவைக்காக தமிழகம் முழுதும் 600 டவர் நடப்படும்: பி.எஸ்.என்.எல். நிர்வாகம்
அப்டியே எங்க ஏரியாவுல ரெண்டு டவர் நட்டீங்கன்னா புண்ணியமா போவும்... துணி காயப் போடுறதுக்கு கம்பம் இல்லாம ரொம்ப சிரமமா இருக்குங்க ஆபீசர்!

பசு நெய் சாப்பிட்டால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லலாம்: ராம்தேவ்
அடுத்த ஒலிம்பிக் செலவுக் கணக்குல ‘வீரர்களுக்கு நெய் வாங்குன செலவு’ன்னு சில கோடி வருமோன்னு நெனைச்சாதான்...

‘ரேஷன் கார்டு அச்சடிக்க பணம் வேண்டும்’ - லஞ்சம் கேட்ட ஊழியர்: செய்தி
அந்தக் காசை வாங்கிட்டுப் போயிதான் அச்சடிக்க பேப்பரு, மை எல்லாம் வாங்கிட்டு வருவாரு போல!

-ஓவியங்கள்: கண்ணா