குங்குமம் டாக்கீஸ்



* தமன்னா தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டியிருப்பதால் சென்னையில் தங்கிவிடலாமா என யோசிக்கிறார். சந்திக்கிறவர்களிடம் எல்லாம் ‘‘எந்த ஏரியா அமைதியாக இருக்கும்?’’ என விசாரித்துக் கொண்டே இருக்கிறார்.

* 34 வயதில் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்தபடி மும்பை ஃபேஷன் ஷோவில் ரேம்ப் வாக் செய்து பரபரப்பு கிளப்பியிருக்கிறார் கரீனா கபூர். ‘‘ஒருவராக அல்ல, நானும் என் குழந்தையும் இணைந்து நடந்தது போல உணர்ந்தேன். ஒருவேளை குழந்தை வயிற்றில் உதைத்திருக்கலாம், படபடப்பில் இருந்ததால் நான் அதை கவனிக்கவில்லை’’ என்கிறார் கரீனா. ‘‘இப்படி கர்ப்பமாக இருப்பதை கேமராவுக்குக் காட்டாமல் மறைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை’’ என்பது கரீனாவின் போல்டு ஸ்டேட்மென்ட்.

* திடீர் திருப்பமாக விக்னேஷ் சிவனை அடுத்த இயக்குநராகத் தேர்வு செய்து விட்டார் சூர்யா. முதல் தடவையாக அனிருத், சூர்யா படத்திற்கு இசையமைக்கிறார். இதில் நயன்தாராவின் சிபாரிசே இல்லை என்கிறார்கள். இதனால் ‘காத்து வாக்கில இரண்டு காதல்’ படத்தை தள்ளி வைக்கிறார் சிவன்.

* ‘‘சந்தோஷமான எண்ணங்களே நமது உடலை ஆரோக்கியமாக வைக்கும்’’ என தத்துவம் உதிர்த்திருக்கிறார் பார்வதி நாயர். தமிழில் ரெண்டு படங்கள் கைவசம் வைத்திருக்குது பொண்ணு!

* குட்டி மயில் போல இடது கை ஆள்காட்டி விரலுக்கு அருகில் ‘டாட்டூ’ குத்தியிருக்கிறார் லட்சுமி மேனன். பாட்டு கேட்பதும், தனது டெடிபியருடன் கொஞ்சி விளையாடுவதும் லட்சுமியின் புது ஹாபி லிஸ்ட்டில் இணைந்
திருக்கின்றன.

* ‘பைரவா’ டைட்டிலை லாரன்ஸ் பதிவு செய்து வைத்திருந்தார். விஜய் கேட்டதும் மறுப்பு எதுவும் சொல்ல முடியாமல் கொடுத்துவிட்டார். முன்பு இதே மாதிரி ‘வேதாளம்’ டைட்டிலை அஜித்திற்கு அவர் கொடுத்தது நினைவிருக்கலாம்.

* ‘‘நான் தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என தனித்தனியாகப் பிரித்து பார்ப்பதில்லை. எல்லாருமே மக்களுக்காகத்தான் படம் எடுக்கறாங்க’’ என சொல்லும் எமி ஜாக்‌ஸன், ‘‘பாலிவுட் மேக்கிங்கில் பக்காவான வடிவமைப்பும், திட்டமிடுதலும்  பலம்’’ என்கிறார்.

* செளந்தர்யா ரஜினிகாந்த் அடுத்து ஒரு காமெடி படம் எடுக்கத் தயாராகி விட்டார். ஆனால் அப்பா அதை விரும்பவேயில்லையாம். இருந்தாலும் படத் தயாரிப்பில் ஈடுபடுகிறார் செளந்தர்யா.

* ‘‘நான் ப்ளஸ் ஆக நினைத்தது பலவும் பல நேரங்களில் மைனஸ் ஆகியிருக்கிறது. மைனஸ் கூட சில சமயம் ப்ளஸ் ஆகியிருக்கிறது. அதனால் நான் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை’’ என்கிறார் நிக்கி கல்ரானி.

* டைரக்டர் பாலா பெரிய நடிகர்களை வைத்து எடுக்க இருந்த படத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டார். அந்த இடைவெளியில் ஒரு படத்தை வேகமாக எடுக்கத் தீர்மானித்துவிட்டார். அதற்காக சில கதாசிரியர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

* முன்பு ரஜினி, கமல் படங்கள் வரும்போது வேறு படங்கள் வெளியாகாமல் பார்த்துக் கொள்வார்கள். இப்போது சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்திற்காக மற்றவர்கள் ரிலீஸ் தேதியைத் தள்ளி வைக்கிறார்கள்.

* அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளரும், ரஜினிகாந்தும் அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருக்கிறார்களாம். இதன் பின்னணி என்ன என அரசியல் நோக்கர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

* அஜித்துடன் ‘பில்லா2’வுக்குப் பிறகு தமிழில் காணாமல் போன பார்வதி ஓமனக்குட்டன், இப்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கே ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களில் ஓமனா செம பிஸி!

* ‘வை ராஜா வை’க்குப் பிறகு மீண்டும் அடுத்த படம் இயக்க ரெடியாகி விட்டார் ஐஸ்வர்யா தனுஷ். இப்போது கதை எழுதுவதில் கவனம் செலுத்தும் அவர், தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

* எப்ேபாதும் ஜி.வி.பிரகாஷ்தான் டைரக்டர் விஜய் படங்களுக்கு இசையமைப்பார். படம் ஒப்பந்தமானால் விஜய் போடுகிற முதல் கண்டிஷனே, ‘ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க வேண்டும்’ என்பதுதான். இப்போதுதான் விஜய் முதல் தடவையாக ஹாரிஸ் ஜெயராஜிடம் போயிருக்கிறார்.

* தனது பேரக் குழந்தைகளுக்கு  நெஞ்சை உருக்கும் விதத்தில் ‘கடிதம்’ ஒன்றை எழுதியிருக்கிறார் அமிதாப் பச்சன். அந்தக் கடிதத்தைப் படித்த பாலிவுட் வி.ஐ.பி.க்கள் பலரும் ரொம்பவே நெகிழ்ந்து அமிதாப்பை பாராட்டி இருக்கிறார்கள்.