வலைப்பேச்சு



@Railganesan 
நேர்மையாக சம்பாதிக்கும் பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை!

@Gethu_king 
ஆக்சிடென்ட் ஆன லாரிய கயிறு கட்டி இன்னொரு லாரி இழுத்துட்டு போகுது... அதைப் பாத்துட்டு ஒருத்தன், ‘‘ஒரு கயிறைக் கொண்டு போக ரெண்டு லாரியா’’னு கேட்குறான்.

@Aruns212
மிலிட்டரியில் நடத்தும் ஆபரேஷன்களை விட ரொம்ப கவனமாக நடத்த வேண்டியிருக்கிறது, குழந்தைக்குத் தெரியாமல் வெளியே கிளம்புவதை!

@ponram_  
நாகரிகம் என்பது... சொந்தக்காரங்க வீட்டில் காபியோ, டீயோ எவ்ளோ நல்லா இருந்தாலும் முழுசா குடிக்காம கால் டம்ளர் மீதி வைக்கறதுலதான் இருக்கு போல!

@kumarfaculty  
ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்ததை விட மணல் எடுத்ததே அதிகமாய் இருக்கும்..!

இந்த ஆண்டின்
‘சிறந்தவைகள்’ பட்டியல்...

சிறந்த புதுமுகம்: சரவணா ஸ்டோர்ஸ் சின்ன அண்ணாச்சி
சிறந்த கதாநாயகி: சிவகார்த்திகேயன் (ரெமோ)
அபாயகரமான ஆயுதம்: மின்சார ஒயர்
சிறந்த ஆலோசனை: ‘போட்டோ வெளியிட வேண்டும்’
சிறந்த பம்பர் பரிசு: திருநாவுக்கரசு
சிறந்த திருப்பம்: சசிகலா புஷ்பா
சிறந்த மர்மம்: கன்டெய்னர்ஸ்
சிறந்த கம் பேக்: டேபிள் மேட்
சிறந்த என்ஆர்ஐ: மோடி
சிறந்த குடிசைத்தொழில்: டிரெயினில் ஓட்டை போடுதல்
சிறந்த ரன்னர்: விஜய் மல்லையா

ஞானி: குடி முதலில் ஆத்மாவை அழிக்கும், பிறகு உடலையும்...
குடிகாரன்: பெரிய ஞானி மாதிரி பேசாதேள்... எல்லாம் எனக்கும் தெரியும்... தெரிஞ்சுதான் குடிக்கிறேன்.
- அபிலாஷ் சுப்ரமணியன்

@raman_  
ஏதோ ஒரு சிந்தனையில் உங்கள் மனம் தீவிரமடைந்துவிட்டால்... உங்களுக்கு ஏற்படும் முதல் நோய்க்குப் பெயர், ‘ஞாபகமறதி’.

பொண்ணு போஸ்ட் போட்டா வெள்ளிக்கிழமை நைட்டு கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் மாதிரி கூட்டமா போறாய்ங்க..
பசங்க போஸ்ட்னா திங்கள்கிழமை காலைல ஆபீஸுக்கு வர்ற மாதிரி வெறுப்பா கமென்ட் போடுறாய்ங்க..
- பூபதி முருகேஷ்

கடவுள்: உனக்கு ஒரு வரம் தர்றேன். என்ன வேணும் கேளு?
பக்தன்: பத்தாயிரம் கோடி பணம் வேணும்...
கடவுள்: இது பேராசை. வேற ஏதாவது கேளு...
பக்தன்: அப்பல்லோ செகண்ட் ஃப்ளோருக்குப் போய் ஜெயலலிதாவை பாக்கணும்...
கடவுள்: பணத்த டாலரா தரவா? ரூபாயா தரவா?
பக்தன்: ஹே ஹேய்... யார்கிட்ட!

‘‘அண்ணே, காவேரி தண்ணி எப்பவும் வரணும், கொலை - கொள்ளை இல்லாம தமிழ்நாட்டு மக்கள் சந்தோஷமா இருக்கணும்...’’
‘‘அதுக்கு நீ ‘ஜெயா நியூஸ்’தான் பாக்கணும்!’’

‘‘வாழ்க்கையில் மிகப் பெரிய சந்தர்ப்பம் எது..?’’
‘‘மனைவியின் கன்னத்தில் கொசு உட்காருவது...’’

நோயைக் குணப்படுத்த தமிழன் கண்டுபிடித்த நான்கு வழிமுறைகள்:
* அலோபதி
* ஹோமியோபதி
* சிம்பதி
* திருப்பதி

குடை ரிப்பேர் செய்பவர், கோல மாவு - அரப்புத்தூள் விற்பவர், அம்மிக்கல்லு கொத்துறவர், சாணை பிடிப்பவர், அடிக்காத - திட்டாத மனைவி...
# அழிந்து வரும் இனங்கள்

நமக்குப் பிடிக்காதவங்களோட நமக்கு பிடிச்சவங்க க்ளோஸா பேசுனா... பிடிக்காதவங்களையும் பிடிக்கறதுக்கு பதிலா பிடிச்சவங்களும் பிடிக்காம போயிடறாங்க.
- பனித்துளி

காதல் என்பது கார் மாதிரி. அது இருக்குறவனுக்கு செலவு... இல்லாதவனுக்கு கனவு..!
- கண்ணன் ஜீவா

‘‘நான் யாருக்கு போன் பண்ணினாலும் ஒரு பொண்ணுதான் போனை எடுக்கிறா நண்பா...’’
‘‘அப்படியா... என்ன சொல்றா?’’
‘‘ப்ளீஸ் ரீசார்ஜ் யுவர் அக்கவுன்ட்னு சொல்றா!
# த்தூ
- கல்யாண் ராமன்

சைக்கிள் பாலீஷ் குண்டு ஒண்ணை மரு போல் மேல் உதட்டில் ஒட்ட வெச்சிருக்கு ஒரு பொண்ணு... கேட்டா, ஃபேஷனாம்!
- சி பி செந்தில்குமார்

அடுத்தவர்கள் மீதான நம் விமர்சனங்கள் பெரும்பாலும் பொறாமையின் காரணத்தாலே எழுகின்றன!!
- கந்தன்

வலியுறுத்தி திணிக்கப் பார்க்காதீர்கள்... விரும்பி ஏற்றுக்கொண்டதற்கு இருக்கும் மதிப்பே வேறு!
- தீபா

@senthilcp  
‘‘இரட்டை வேடங்களில் அரசியல் படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது” - தனுஷ்
# அரசியல்வாதின்னாலே
ரெட்டை வேஷம்தானே!

அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும்
முன் கொலம்பஸுக்கு ஒரு இந்தியப்
பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்தால்...
ஏங்க, எங்கே போறீங்க?
யார்கூட போறீங்க?
ஏன் போறீங்க?
எப்படிப் போறீங்க?
என்ன கண்டுபிடிக்கப் போறீங்க?
ஏன் நீங்க மட்டும் போறீங்க?
நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?
நானும் உங்ககூட வரட்டுமா?
எப்ப திரும்ப வருவீங்க?
எங்கே சாப்பிடுவீங்க?
எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
இப்படி பண்ணணும்னு எனக்குத் தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டு இருந்தீங்க?
இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?
இதுக்கு முன்னாடியும் எனக்குத் தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?
நான் எங்க அம்மா வீட்டுக்குப் போகட்டுமா?
ஏன் பேசாம இருக்கீங்க?
எத்தனை கேள்வி கேட்குறேன்...
ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?
இதுக்கு அப்புறமும் அவரு
அமெரிக்காவைக் கண்டுபிடிக்க
கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க!

@urs_priya  
தீபாவளி டிரஸ் எடுக்கப் போற கடையில கூட்டம் அதிகமா இருந்தா... காற்று வாங்க ஜென்ட்ஸ் ஷர்ட் மெட்டீரியல், வேஷ்டி இருக்கும் தளத்துக்குப் போகலாம்!

மனைவி: ஏங்க அந்த நியூஸ் பேப்பரை எடுத்துட்டு வாங்க!
கணவன்: ஏண்டி, நீ இன்னமும் அந்தக் காலத்துலேயே இருக்க! உலகம் எவ்வளவோ மாறிடுச்சுடி! இந்தா என்னோட ஐபேட்
(என்று நீட்டுகிறான். மனைவி அந்த ஐபேடை வாங்கி சுவர் மூலையில் ஒட்டிக்கொண்டிருந்த கரப்பான் பூச்சியைக் குறி பார்த்து ஓங்கி அடிக்கிறாள். பார்த்துக்கொண்டிருந்த கணவன் மயக்கமாகிறான்.)
நீதி: மனைவி என்ன கேக்குறாங்களோ, அதை மட்டும் கொடுக்கணும். நம்ம புத்திசாலித்தனத்தை எல்லாம் அலுவலகத்தோடு நிறுத்திக்கணும்.

சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?
புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.
புலியுடனேயே தூங்குபவர் சம்சாரி.

@umakrishh 
முன்ன சாதா பாத்திரத்தில் வேக வைச்சா லேட் ஆகுதுன்னு குக்கர் வாங்கச் சொன்னாங்க... இப்ப ‘லேட்டா வேகறது நல்லது’ன்னு ஸ்லோ குக்கராம்!
# சமையல் ஒரு வட்டம்...

 @iam_Yobu  
மனைவி என்ற ஒற்றைச் சொல்லுக்கு எல்லாவற்றையும் இழக்கும் ஒரு ஆண் கிடைத்தால் போதும்... அது அவள் பெற்ற வரம் இவ்வுலகில்!
 ‏
@ponkulanthai 
பீரோ என்பது வசதியுள்ளவர்கள் வீட்டில் பணப்பெட்டியாகவும், வசதியற்றவர்கள் வீட்டில் துணிப்பெட்டியாகவும் உருவெடுக்கிறது!

@pgovi1
பாட்டு கட்டியவருக்கு நோபல் பரிசு கொடுத்துவிட்டார்களாமே... நம்மூர்க்காரர் யாரோதான் போய் அவர்களையும் குழப்பிவிட்டிருக்க வேண்டும்.

இந்த பேர் கிரில்ஸ் தமிழ்நாட்டுக்கு வந்து புரோக்ராம் செய்தா....
எவ்ளோ அடர்ந்த காட்டுக்குள்ள போனாலும் அங்கே 4 பேர் உக்காந்து குடிச்சிட்டிருப்பான்!