குங்குமம் talkies



* ‘கஹானி 2’ ரிலீஸ் ஹேப்பியில் இருக்கிறார் வித்யா பாலன். ‘‘வித்யா பாலனை ரொம்ப பிடிக்கும். என்னைக் கவர்ந்த பெண்களில் வித்யாவும் ஒருவர். ‘கஹானி 2’வை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்’’ என்கிறார் பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி.

* ஷங்கர் இயக்கும் ‘2.0’வில் ஒரு டூயட் பாடலை உக்ரைனில் ஷூட் பண்ண முடிவு செய்திருந்தனர். ஆனால் ரஜினியால் உக்ரைன் போக முடியாத சூழல். தவிர ரஜினியும் வெளிநாட்டுப் பயணத்தை விரும்பவில்லை. எனவே சென்னையில் உக்ரைன் செட் போட்டு அந்தப் பாடலை படமாக்கியும் விட்டார் ஷங்கர்.

* பிரசாந்தின் அப்பா தியாகராஜன் படத் தயாரிப்பில் இறங்கிவிட்டார். நான்கைந்து இந்திப் படங்களின் ரீமேக் உரிமையை வரிசையாக வாங்கியிருக்கிறார்.

* ‘நடிக்கும்போதுதான் என் உயிர் போக வேண்டும்’ என்று மனோரமா எப்போதும் சொல்வார். இப்போது த்ரிஷாவும் அதுமாதிரியே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

* ‘விஷால் - வரலட்சுமி’ பிரிவு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதனால் இப்போது அவர் ஸ்லிம் லட்சுமி ஆகி நிறைய படங்களில் நடிக்கப் போகிறார்.

* தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் அமலா பால். சமந்தா நடிப்புக்கு ‘டாட்டா’ சொல்வதால் அமலாவுக்கு மவுசு கூடியிருக்கிறது. கிளாமருக்கும் அவர் மறுப்பு சொல்வதில்லை. சம்பளத்தையும் அனுசரிக்கிறார். அதனால் அமலா காட்டில் மழை.

* மலையாளத்தில் மம்மூட்டி, சினேகா, ஆர்யா நடிக்கும் ‘த கிரேட் ஃபாதர்’, டிசம்பரில் கிறிஸ்துமஸ் விருந்தாக திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை நடிகர்கள் பிருத்விராஜ், ஆர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உள்பட பலரும் இணைந்து தயாரித்துள்னர்.

* பிசினஸ் மேனேஜ்மென்ட் ஃபைனல் இயர் படித்து வரும் ஆனந்தி, தேர்வு நெருங்குவதால் நடிப்பும் படிப்புமாக பரபரக்கிறார். ‘‘எக்ஸாம் முடிந்த பிறகு சினிமாவில் இன்னும் கவனம் செலுத்துவேன்’’ என்கிறது பொண்ணு!

* நடிகை பியாவின் வித்தியாசமான புகையிலை எதிர்ப்புப் பிரசாரம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ‘நீங்கள் எதை நேசிக்கிறீர்களோ, அது உங்களைக் கொல்லக்கூடும்’ என்ற வாசகத்தோடு, ஒரு வெள்ளை டவலை மட்டும் சுற்றிக்கொண்டு புகைபிடிப்பது போன்ற ஒரு போட்டோவை ட்விட்டரில் அவர் பதிவிட்டிருக்கிறார். சில குறும்புக்கார இளசுகள் ‘புகையிலை மட்டுமல்ல... உங்கள் உடையும் கூட உயிரைக் குடிக்கும்’ என கமென்ட்டுகளை அள்ளி விட்டிருக்கிறார்கள்.

* திருமணத்துக்கு முன்பு திலீப், காவ்யா மாதவனுடன் நெருங்கிப் பழகியதை நேரில் பார்த்த நடிகை பாவனா என்றும்... அவர்களின் நெருக்கத்தை அப்போதைய மனைவியான மஞ்சு வாரியரிடம் போட்டுக் கொடுத்தார் என்றும்... மல்லுவுட்டில் கிசுகிசுக்கள் கிளம்பின. இதனால்தான் திலீப் தனது 2வது திருமணத்துக்கு பாவனாவை அழைக்கவில்லையாம்!

* மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிக்கும் ‘காற்று வெளியிடை’ அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகிறது.

* அஜித், காஜல் அகர்வாலோடு இணையும் படத்தின் ஷூட்டிங் பல்கேரியாவில் பரபரக்கிறது. இதில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பல்கேரியா படப்பிடிப்பிற்கு காஜல் செல்லவில்லை. அஜித், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் போர்ஷனும் படமாக்கப்பட்டு வருகிறது.

* கங்கனா ரணாவத்தின் ‘குயின்’ தமிழ் ரீமேக்கில் தமன்னா நடிக்கிறார். ‘‘அது எனக்கு ரொம்ப பிடிச்ச படம். கங்கனா கேரக்டரில் நடிக்கப் போறேன். சந்தோஷமா இருக்கு’’ என ஃபீலாகிறார் தமன்னா.

* இப்போது மினி கோடம்பாக்கம் ஆகி வருகிறது எழும்பூர். அங்கே சொகுசு அபார்ட்மென்ட் ஒன்றில் நயன்தாரா, ராகவா லாரன்ஸ், அட்லி என பலரும் வீடு வாங்கியுள்ளனர்.

* ‘‘என்னுடைய பழைய படமான ‘ஏ இஷ்க்’ படத்தில் ‘ஏ பிங்க்.. பிங்க்..பிங்க்’ என்ற பாடல் வருகிறது. இந்த பிங்க் ஆட்டோ அதை நினைவூட்டியிருக்கிறது’’ என்கிறார் அமிதாப் பச்சன்.