நட்பு மொழி



அறிவுமதி

டொரன்டோவிலிருந்து
வந்திருந்த நண்பனோடு
நயாகராவை
நாள் முழுக்க ரசித்துவிட்டு
அமெரிக்காவிற்குள்
போய்க் கொண்டிருக்கிறேன்
நினைவில் வருகிற
வெண்மை
நீர்வீழ்ச்சியின் நிறமா
நட்பின் நிறமா

காமம் வரும்
மூடி வை
திறந்து வை
நட்பு வரும்

அலுவலகத்திற்கு வந்து போனான்
நண்பன்
மேலதிகாரி
மேன்மையானார்

அலுவலக
மதிய உணவு இடைவேளை
சாப்பிடத் திறந்தால்
அவனுக்குப்
பிடித்ததை
அழுத்தி அனுப்பியிருக்கிறாள்
என்
அம்மா
எனக்குப்
பிடித்ததை
அழுத்தி அனுப்பியிருக்கிறாள்
அவன்
அம்மா

நட்பைக் காமம் ஆக்குபவன்
நண்பன் இல்லை
நட்பைக் காதல் ஆக்குபவன்
மனிதனே இல்லை

ஓவியம்: ப்ரத்யூஷ்