jokes



‘‘பிச்சைக்காரனா மாறுவேடம் போட்டு மன்னர் நகர்வலம் போறாரே... ஏன்?’’
‘‘புதிய 2000 ரூபாய் பணத்தை மாற்ற முடியாம அவருக்கும் பணத்தட்டுப்பாடு வந்துடுச்சாம்...!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்...’’
‘‘நான் கள்ள நோட்டா அடிச்ச 500, 1000-த்தை தான் செல்லாதுன்னு சொல்லிட்டாங்களே... என்னை நிரபராதின்னு அறிவிப்பீங்களா... யுவர் ஆனர்...?’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘பிறந்தநாள் விழாவுல, தலைவர் கோபமா இருக்காரே, ஏன்?’’
‘‘அவரோட எடைக்கு எடை பழைய 500, 1000 ரூபா நோட்டுக்களா குடுத்துட்டாங்களாம்...’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.