வலைப்பேச்சு



பயங்கர அழகுக்கும் அழகே பயங்கரமாக ஆவதற்கும் இருக்கும் சின்ன வித்தியாசம் இதுதான்...
டெடி பியர் பொம்மையை நீங்கள் கட்டிப் பிடித்தபடி தூங்குவது பயங்கர அழகு; அந்த பொம்மையும் திரும்பி உங்களைக் கட்டிப் பிடித்தால் அது அழகான பயங்கரம்!

@iam_vaalu
ஒவ்வொரு நேர்மையாளனுக்கும் சமூகம் வைத்திருக்கும் பெயர், ‘பிழைக்கத் தெரியாதவன்’!

@krajesh4u
‘இதுவும் கடந்து போகும்’னு நம்பர் பிளேட்ல எழுதியிருக்கிற ஒருத்தனையாவது புடிச்சு ‘நீ எங்க போற? மொதல்ல ஓரமா போடா’ன்னு சொல்லப் போறேன்.

@lakschumi
எல்லா பெண்களையும் ஒரே தராசில் நிற்க வைப்பதுதான் ஆண்கள் செய்யும் முதல் தவறு!

@karthekarna
‘கொசு பேட்’ சமயங்களில் மெஷின் கன் போல பொரிந்தால், நீங்கள் அடித்தது கொசு அல்ல, சிலந்தி என அறிக!

உரிமையை ‘சலுகை’ என்ற பெயரில் பெறுவதில் எந்தப் பெருமையும் இல்லை!
- வெ. பூபதி

ஆறுதல் தேவைப்படுபவர்களிடம் அட்வைஸ் பண்ணாதீர்கள். அதுவே பெரும் ஆறுதலாக இருக்கும்...
- வசந்த மலர்

நம் ரகசியத்தை அடுத்தவர் மனதில் புதைத்தால், பல கிளைகளோடு அது முளைக்கும்...
- நாஸிர் மொஹமத்

வங்கியில் ஒரு உரையாடல்:
‘‘வணக்கம் சாமி... என் பேரு மாரியம்மா... இந்த ஐந்நூறு ரூவா நோட்டை மாத்திக் கொடுங்க.’’
‘‘இந்தப் பணம் எப்படி வந்திச்சு? சோர்ஸ் ஆஃப் இன்கம்..?’’
‘‘சோறுல்லாம் இல்லைங்க... காலையில, ராவுல இட்லிக்கடை மட்டும்தாங்க!’’
‘‘ஓ... டிபன் கடையா? சரி! டின் நம்பர், பேன் நம்பர் சொல்லு...’’
‘‘பேனுல்லாம் மாட்டலைங்க! மரத்தடியில நாலு கீத்தைக் கட்டி மறைச்சிருக்கேன். டின்னுல கை கழுவ தண்ணி வச்சிருக்கேன்.’’
‘‘மரத்தடியா? ‘PWD என்.ஓ.சி’ வேணும். ‘பொல்யூஷன் கன்ட்ரோல் போர்டு’ அப்ரூவல் வேணுமே..’’
‘‘என் வீட்டுக்காரரை கேட்கறீங்களா? அவரு போய்ட்டாருங்க அய்யா... வேணுகோவாலு முழு பேரு..!’’
‘‘அய்யய்யே... பணத்தைக் கொடுத்துட்டுப் போம்மா. நான் கேட்டதெல்லாம் எடுத்துட்டு வா. அப்புறம் பாத்துக்கலாம். வீட்டு நம்பர் சொல்லு!’’
‘‘கதவு இல்லைங்க. சாக்கு மறைப்புதான். அதில நம்பர் ஏதுங்க!’’
‘‘தெரு பேரு?’’
‘‘ரோட்ல ஒரு ஓரமா குடிசை போட்டிருக்கேன்... அது தெரு இல்லைங்க!’’
‘‘சரி, பின்கோடு?’’
‘‘மண் ரோடுதாங்க!’’
‘‘இ-மெயில் இருக்கா?’’
‘‘சாணியக் கரைச்சு வெளக்கமாத்தால சுத்தமா அடிச்சு வச்சிருக்கேன். ஈ, எறும்பு ஒண்ணும் அண்டாது!’’
‘‘பேங்கு அக்கவுன்ட் நம்பரைக் கொடு...’’
‘‘பேங்கு எங்கயிருக்கு சாமீ..!’’
‘‘வாட்ச்மேன்ன்ன்...’’

‘‘பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் கவலையில்லை...’’
‘‘நிஜமாவா?’’
‘‘ஆமா! செக்கிங் ஏறினால்தான் கவலை...’’

‘‘படிப்புக்கும் உனக்கும் ரொம்ப தூரம்னு பையன்கிட்ட சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான்!’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘அமெரிக்கா போய்தான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறான்.’’

கணவன்: உன் பேரு என்ன?
மனைவி: தெரியாத மாதிரி கேட்கறீங்க!
கணவன்: சொல்லு...
மனைவி: தங்கம்!
கணவன்: இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது...
மனைவி: ஏங்க திடீர்னு இப்படிச் சொல்றீங்க?
கணவன்: மோடி அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்திருக்கார். நீ 68 கிலோ இருக்க...
# இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது, எஸ்கேப்!
- மினி மீன்ஸ்

கர்ணனுக்குப் பின் கொடையில்லை...
ரமணனுக்குப் பின் மழையில்லை...
# ஓ ரமணா
- சுரேஷ் ஆதித்யா

இந்தியாவில் இருக்கும் நான்கு முக்கிய மருத்துவமுறைகள்... அலோபதி, ஹோமியோபதி, சிம்ப்பதி, திருப்பதி!
- ஷோபனா ரவி

‘‘நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்...’’
‘‘அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க!’’

@CreativeTwitz
‘வரலாமா? வேணாமா’ன்னு வெயிலும், மழையும் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்கு இங்கே..!

@tparavai
உலக வரலாற்றிலேயே கறுப்புப்பணம் ஒழிஞ்சு, திரும்ப 15 நாள்லயே கறுப்புப்பணம் பிடிக்கிறதெல்லாம் வேற லெவல்!

‏@Kozhiyaar
வேகமா போனா சில பெண்கள்தான் உன்னைப் பார்ப்பார்கள். மெதுவா போனா எல்லா பொண்ணுங்களையும் நீ பார்க்கலாம்!
# மாத்தி யோசி... வேகம் தவிர்

@idumbaikarthi
சொந்த நாட்டு மக்கள் 30,000க்கும் மேற்பட்டோரை போபாலில் கொன்ற அமெரிக்கன் ஆண்டர்சனுக்கு ஆதரவாக வாதாடிய அருண் ஜெட்லி ‘தேசப் பற்றாளர்’ ஆகிவிட்டார்!

ஒரே வித ஸ்மைலிகள்தான்... ஆனால், அதில் ஒளிந்திருக்கும் உணர்வுகளை யூகித்து விடுபவன் தோழன் மட்டுமே!
- அமுதா முருகேசன்

கறுப்புப் பணத்தை அழிப்பது எப்படி?
மோடி: முதலில் நட்ராஜ் அழி ரப்பர் வாங்கவும். முதலில் ‘க’வின் மீது அழுத்தித் தேய்க்கவும். அப்புறம் ‘று’வின் மீது அழுத்தித் தேய்க்கவும். அப்புறம் ‘ப்’பின் மீது அழுத்தி... இப்படியாக 50 நாட்களில் கறுப்புப் பணம் ஒழிக்கப்படும். ஒழியவில்லை என்றால் கேமல் அழிரப்பர் வாங்கவும்!
- அல்டாப்பு வினோத்

@kumarfaculty
டீன் ஏஜ் என்பது குழந்தைகளுக்கு தைரியத்தையும் பெற்றோர்களுக்கு பயத்தையும் தரக் கூடியது!

@altaappu 
தனிமையில் நாம் எந்த செயலை அதிகம் செய்கிறோமோ, அந்த ஒரு செயலுக்குத்தான் நாம் விரைவில் அடிமையாகிப் போகிறோம்.

 @chevazhagan1
கௌரவக்கொலைகள் செய்வதை விட்டுவிட்டு நயா பைசா பிரயோஜனமில்லாத உங்கள் கௌரவத்தை முதலில் கொலை செய்யுங்கள்!

சலூன்ல ‘விராட் கோலி மாதிரி முடிவெட்டி விடுங்க’னு சொல்லி தூங்கி எழுந்து பார்த்தா பிராய்லர் கோழி மாதிரி வெட்டி விட்டிருக்காங்க..!
-  பூபதி முருகேஷ்

வீட்டு வசல்ல எப்போதும் சுத்திட்டு இருக்கிற தெரு நாய்கள்ல ஒண்ணைக்கூட காணோம்...
# எங்க வீட்ல முள்ளங்கி சாம்பார்னு நெனைக்கிறேன்!
- பொம்மையா முருகன்

முதலாளியிடம் நேரடியாகவும், தொழிலாளியிடம் மறைமுகமாகவும் திட்டு வாங்கும் ஜீவனுக்கு ‘மேனேஜர்’ என்று பெயர்!
- சுபாஷ் சந்திர போஸ்

பெட்டுக்கு பக்கத்துல பவர் பாயின்ட் இல்லாதவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். போனை நோண்டிட்டே இருக்காம சட்டுனு தூங்கிடுறாய்ங்க...
- விவிகா சுரேஷ்

@minimeens 
பிரதமர் மோடி படத்தை விளம்பரத்தில் உபயோகித்ததால் ‘ஜியோ’ நிறுவனத்துக்கு 500 ரூபாய் அபராதம்!
# எதுங்க எசமான்... இப்ப செல்லாதுன்னு சொன்னீங்களே... அந்த ஐந்நூறுங்களா?

‏@manipmp 
‘முடிக்காத வீட்டுப்பாடங்களும், செய்ய மறந்த அலுவல் வேலைகளும்’ நினைவுக்கு வரும் நேரமே திங்கள் காலை.

@Aruns212
நமது தேசப் பற்றினைச் சோதிப்பதில் முக்கியமானது, தேசிய கீதம் பாடும்போது வரும் கொட்டாவி!

‏@teakkadai
மனைவியிடம் காதலும், குழந்தைகளிடம் அன்புமாய் இருக்க வேண்டிய வாழ்க்கை, மனைவியிடம் கணக்கும், குழந்தைகளிடம் எதிர்பார்ப்புமாய் மாறிவிட்டது!

@Piramachari
பெண் தனக்கு பாதுகாப்பான தூரத்தில் ஆணை நிறுத்தி விடுகிறாள். ஆணின் துரதிர்ஷ்டம், அது நடுத்தெருவாக அமைந்துவிடுகிறது!

‏@amuduarattai
ஒரு பேங்கிலிருந்து, ‘கடன் வேணுமா’ன்னு கேட்டு போன் பண்ணிட்டே இருக்காங்க. கடனைக் கொடுத்து, என்னையும் இங்கிலாந்து பிரஜை ஆக்காமல் விடமாட்டாங்க போல!

‘‘அப்பல்லாம் நான் செம கோவக்காரன்யா...’’
‘‘கல்யாணத்துக்கு முன்னாடிதானே சார்?’’
# சில ஆட்கள் ஒத்தையே ஒத்த வாசகத்துல நம்மள கவுத்திடறாங்க!
- அமுதன் சாந்தி

என்னிக்கு, லோக்கல் தெருநாயை கூட்டிட்டு மக்கள் வாக்கிங் போறாங்களோ, அன்றுதான் நாடு சமத்துவம் பெறும்...
- குமரன் கருப்பையா