பல்ஸ் எகிறுது!
ஃபிடல் காஸ்ட்ரோவிடம் மட்டுமல்ல... அவரது திட்டங்களை இதயபூர்வமாக ஏற்ற கியூப மக்களிடம்கூட நாம் கற்க நிறையவே இருக்கிறது. வளர்ச்சிக்கான முன்மாதிரியாக உலகம் எடுத்துக்கொள்ள வேண்டியது கியூபாவையா, அமெரிக்காவையா என்ற கேள்வி நிறையவே யோசிக்க வைத்தது. - டி.சீனிவாசன், வேலூர்.
 ‘பைரவா’ படத்தின் ஸ்டில்களில் விஜய், பக்கா மேன்லி ஷோ என்றால், கீர்த்தியின் பச்சரிசி சிரிப்பில் எங்கள் பல்ஸ் எகிறுது பாஸ்! ‘பைரவா’ படத்தின் படமாக்கத்தில் செய்த பிரமாண்டங்கள், தனித்துவங்கள் பற்றி இயக்குனர் பரதன் பேட்டி நச். வெயிட்டிங் ஃபார் ட்ரீட்! - கே.மணிகண்டன், சென்னை-78.
தமிழகத்திற்காக விளையாட முயற்சித்து முடியாதபோதும், தன் திறமையை உலகிற்கே பன்ச் செய்து நிரூபித்த துளசி ஹெலனுக்கு செம தில். - ஆர்.சுகந்திபாரதி, திருவள்ளூர்.
கடத்தல் குழந்தைகளுக்கும், பிளாக் மணிக்குமான லிங்க் பகீர் அதிர்ச்சி. அரசின் கச்சித சட்டமே இதற்குகிடுக்குப்பிடி தீர்வு. - பெ.வி.மணிமொழி, தஞ்சாவூர்.
‘பெட்டிக்குள் காம்பேக்ட் வாழ்க்கை’ வாழும் ராஜாவின் வாழ்க்கை அரிது, புதிது. கடைசி கான்ஃபிடன்ட் வரிகள் லைஃபின் தீராத வசீகர கவர்ச்சி. - ச.குமார் சண்முகம், கோவை.
மாஜிலித் தீவின் மோகினி நடன கமென்ட்ரி, நேரலையின் சுவாரசியமாக ஜெயமோகனின் எழுத்தில் கலாரசனை கூட்டியது. - எம்.வேணுகேசவன், திருப்பூர்.
ஹெர்னியா இவ்வளவு டிராஜடி தருமா? ‘செகண்ட் ஒப்பீனியன்’ தந்தது டைமிங் உஷார் ரிப்போர்ட். - எம்.டி.ஜானகிராமன், சென்னை-4.
ஸ்யாமின் தத்ரூப ஓவியங்களில், கே.என்.சிவராமனின் சஸ்பென்ஸ் எழுத்தில் பைபாஸ் ஆக்ஷன் திகுதிகு தீ! - கி.நா.சௌந்தரராஜன், திருவண்ணாமலை.
தூக்கத்தை நாடி எனர்ஜி பெற வழிகாட்டிய ‘உயிரமுது’ தமிழ் மரபின் திகட்டாத சுவை. - என்.பனிமலர், மதுரை.
பொதுவுடமை இயக்கங்களுக்கு வாதாடியது, இலவச சட்ட உதவி மையங்களைத் தொடங்கியது என கோமல் அன்பரசனின் எழுத்தில் வழக்குரைஞர் என்.டி. வானமாமலையின் பணி வைர ஒளி. - சு.விஜயபிரகாஷ், புதுச்சேரி.
‘ஊஞ்சல் தேநீரி’ல் உயிரும் உணர்வுமாக எழுந்த சுவரொட்டி சுப்பையாவைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனோம். யுகபாரதியுடன் உரையாடக் காத்திருக்கிறோம். - கே.எஸ்.கதிரவன், சேலம்.
|