கமென்ட் கோயிந்து



சக்திவேல் மருதமுத்து

பெங்களூருவில் கான்ட்ராக்டரிடமிருந்து  ரூ. 5.7 கோடிக்கு புதிய இரண்டாயிரம் நோட்டுகள் பறிமுதல்: செய்தி
நாம ஒரு ரெண்டாயிரத்தை மாத்தவே நாலு நாள் பேங்க் வாசல்ல கதியா கெடந்தோம், இந்தாளு இவ்ளோ நோட்டு மாத்திருக்காருன்னா பேங்க் கல்லாவுலயே கதியா கெடந்துருப்பான் போல!

நாசிக்கில் ஸ்வைப் இயந்திரங்கள் மூலம் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூல்: செய்தி
நோட்டு அடிக்கிற ஊருலயே இன்னும் ஸ்வைப் மெஷின்தான் யூஸ் பண்றீங்களா யுவர் ஆனர்? வெளங்கிடும்!

‘ஜியோ’ விளம்பரங்களில் பிரதமரின் படத்தைப் பயன்படுத்தியதால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 500 ரூபாய் அபராதம்: நீதிமன்றம்
இவ்ளோ பெரிய தொகையை எடுக்க அம்பானி குடும்பம் எத்தனை ஏ.டி.எம் ஏறி இறங்கப் போவுதோ தெரியல!

பிச்சைக்காரர்கள் கூட ஸ்வைப் மெஷினுக்கு மாறிவிட்டார்கள்: மோடி
தலைவரே! நல்லா பாருங்க, அது நம்ம கட்சிக்காரய்ங்கதான். உள்ளாட்சித் தேர்தலுக்காக ஸ்வைப் மெஷின் வச்சி நிதி வசூல் பண்றாங்க...

முதலிரவில் மாப்பிள்ளைக்கு தூக்க மாத்திரை கொடுத்து பணம், நகையுடன் எஸ்கேப் ஆன புதுப்பெண்: செய்தி
படுபாவிப் பய! ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போறப்போ பாக்கெட்டுல புது ரெண்டாயிரம் ரூவா நோட்டை வச்சிக்கிட்டு போயிருப்பான் போல...

மதுக்கடை சுவரில் துளை போட்டு மது பாட்டில்கள் திருட்டு: செய்தி
‘‘டேய், ஏன்டா திருடினீங்க?’’ ‘‘கடை சேல்ஸ்மேன் பழைய ஐந்நூறு, ஆயிரம் ரூவா நோட்டை வாங்குனாருன்னா நாங்க ஏன் ஏட்டய்யா திருடப் போறோம்?’’

ஓவியங்கள்: கண்ணா