மாஃபியா குடும்பம்!



-கே.என். சிவராமன்

‘‘இப்ப செகண்ட் ஆஃப் ஓபன் பண்றோம் சார்... வேற ஸ்டேட்ல இருக்கிற ஜெயிலுக்கு போயிட்டாங்க. ஆனா, சிறப்பு வசதி எதுவும் கிடைக்கலை. அதனால தன்னோட ஆட்களை வைச்சு ஜெயில் இருக்கிற மாவட்டத்துல கலவரத்தை உண்டாக்கறாங்க. அந்த மாநில போலீஸ் தடியடி நடத்துது. இதையே காரணமா வைச்சு, ‘இந்த மாநிலத்துல எங்க உயிருக்கு பாதுகாப்பில்லை. எங்க மாநில சிறைலயே அடைங்க...’னு கோர்ட்டுல மனு தாக்கல் செய்யறாங்க. அதுக்குள்ள அவங்க ஆட்கள் அவங்க மாநிலத்துல ஆட்சியை பிடிச்சிடறாங்க. நீதிபதியை சரிக்கட்டி சொந்த மாநில ஜெயிலுக்கு மாற்றலாகி வர்றாங்க.

ஆட்சி அவங்களுது. அதிகாரம் அவங்க கைப்பிடிக்குள்ள. அதனால டம்மியா ஒரு ஆளை செட் பண்ணி தன் பேர்ல ஜெயில்ல இருக்கச் சொல்லிட்டு ஹாயா தன்னோட ‘மறைந்த அக்கா’ வசிச்ச அரண்மனைக்கு போய் தங்கறாங்க. வெளில தலையைக் காட்டினாதானே பிரச்னை? கமுக்கமா அரண்மனைல வசிச்சுகிட்டே... அந்த அரண்மனையையே செயின்ட் ஜார்ஜ் கோட்டையா மாத்திடறாங்க. முதல்வரா இல்லாமயே CMமா ஆட்சி செய்யறாங்க...’’

- ‘மாஃபியா குடும்பம்’ படத்துக்கான ஸ்டோரி டிஸ்கஷன் சூடு பிடிக்க ஆரம்பித்தது...