அழகு அசினு!



Untitled Document



மறக்காமல் அந்தக்காலத்து ஹாலிவுட் அழகி எலிசபெத் டெய்லருக்கும் அஞ்சலிக் கட்டுரை வெளியிட்டு விட்டீரே! உங்க தாராள மனசு யாருக்கு வரும்!
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.


'சுட்ட கதை சுடாத நீதி' வாரா வாரம் ஆரவாரமாக வருகிறது. சிறிய கதை, நகைச்சுவை உணர்வுடன் நல்ல நீதியை கூறி விடுகிறது.
- ஜி.பிரேமா, தருமபுரி.


 
தமிழர்களின் அழிந்து வரும் இசைக்கருவிகளைப் பற்றி வாரந்தோறும் வெளிவரும் செய்திக் கட்டுரை, இசைக் கருவிகளின் பெருமைகளை அறிய வைப்பதோடு மட்டுமின்றி வியக்கவும் மலைக்கவும் வைக்கிறது!
 
- கோலதாசன், வேலூர்-1.


'நல்லதம்பி'யாக வார்த்தைக்கு வார்த்தை அண்ணன், அண்ணன் என்கிறாரே... யார்யா அந்த அண்ணன்னு பார்த்தா நம்ப ஆர்யா. அடங்கொக்கமக்கா!
-  எம்.சுரேந்தர், திண்டுக்கல்-1.


சாந்தகுமாரி சிவகடாட்சத்தின் 'கோவா கார்னிவல் கொண்டாட்டம்' வாசகர்களின் இதயத்தை வருடிச் சென்றது!
-டி.வளர்மதி, புதுச்சேரி.


சும்மா சொல்லக் கூடாது... 'மாத்தி யோசி' செம சூப்பர். எங்க சிந்தனைக்கு விருந்து... சோம்பலுக்கு மருந்து!
- ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.


'அரண்மனை பார்க்க ஆசையா?' - கட்டுரையும் படங்களும் சூப்பர்! அமீர் மஹாலை நேரில் பார்த்த உணர்வு!
- அ.முரளிதரன், மதுரை-3.


வீடு கட்ட நினைப்பவர்களும் சரி... வீட்டைக் கட்டியவர்களும் சரி... அவசியம் படித்து பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் 'வீடு' தொடர்.
- எஸ்.சுமதி சண்முகசுந்தரம், தேவனாங்குறிச்சி.


'நீச்சல் உடையில் இருப்பது தான் இல்லை... டெக்னிக்கல் வேலை' என்று அழகான அசினே சொல்லிவிட்டார். நீர் வேறு அந்தப்படத்தை இப்படி பப்ளிக்கா போட்டுட்டீர். ஒளிஞ்சிருந்துல்ல பார்த்து ரசிக்க வேண்டியிருக்கு!
 
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.


'என்னது, காபி குடிச்சாக்கூட புற்றுநோய் ஆபத்து இருக்கா?' அப்போ இனி காபி பாக்கெட்டிலும் 'காபி அருந்துவது உடல்நலத்துக்குக் கேடானது'ங்கிற வாசகத்தை அச்சடிச்சிடுவாங்களா... என்னதான் நடக்குது உலகத்துல?!
 
-பழ.கவிதா சிவமணி, ஈரோடு.


'தேர்தல் காமெடி' செம கலகலப்புதான் போங்க... எத்தனை வித்தியாச மனிதர்களை தேர்தல் களம் சந்திக்கப் போகிறதோ? படித்துப் படித்து சிரிப்பு தாங்கலை சார்!
- ம.கிரிஜா, புதுச்சத்திரம்.


சிறை 'எனப்படுவது' தெளிவு. கம்பியை எண்ணி எண்ணி பொழுதுபோக்கும் கைதியாக எங்களை சிறையில் தள்ளிவிட்டீர்!
 
-என்.கிருஷ்ணன், கோவை.