நியூஸ் வே!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

மகன் அபிஷேக்கும் மருமகள் ஐஸ்வர்யா ராயும் சேர்ந்து நடித்த சோப்பு விளம்பரம் ஹிட்டானதால், அப்பா அமிதாப்புக்கும் அதே ஆசை. நகைக்கடை விளம்பரம் ஒன்றில் தம்பதியாக வரப்போகிறார்கள் அமிதாப்பும் ஜெயா பச்சனும்.

‘வானம்’ படத்தில் தன் கேரக்டர் நன்றாக அமைந்திருப்பதில் உற்சாகமாக இருக்கிறார் சோனியா அகர்வால். கடைசி ஷெட்யூலை ஹைதராபாத்தில் முடித்த சோனியா, ஈசிஆர் ரிசார்ட்டில் நெருக்கமானவர்களோடு பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறார்.

‘பேட்டி தராவிட்டால் கிசுகிசு எழுதுகிறார்கள்’ என பத்திரிகைகளை சாடிய திவ்யா ஸ்பந்தனா, தன் பிறந்தநாளை சமீபத்தில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கொண்டாடியிருக்கிறார்.

ரம்யா நம்பீசனின் அப்பா ஒரு கோயிலில் பணியாற்றுகிறார். அதனால் மேடம் அதிகாலையிலேயே எழுந்து விடுகிறார். கோயில் தரிசனம் செய்யாமல் பணிகளைத் தொடங்கக்கூடாதே!