வெயிட் ஜாஸ்தி இறங்குங்க!



இப்படிச் சொன்னது பஸ்ஸில் என்றால் பரவாயில்லை. ஆனால், விமானத்தில் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல, 40 பேர்களை இறங்கச் சொல்லியிருக்கிறார்கள்! ஆஸ்திரேலியாவின் சிட்னி டூ பெர்த் செல்லும் க்வாண்டாஸ் விமானத்தில்தான் இந்த வெயிட் ஜாஸ்தி வெளியேற்றல் விவகாரம்.

2 மாதங்களுக்கு முன்பு, யுனைடெட் ஏர்லைன்ஸ் தன் பயணி ஒருவரை விமானத்தை விட்டு பலாத்காரமாகக் கீழிறக்கியதன் பிறகு நடந்துள்ள இரண்டாவது நிகழ்விது. நம்மூரின் வொயிட்போர்டு பஸ் கணக்காக காசு வாங்கிக் கொ்ண்டு பயணிகளை சரக்கு வண்டிபோல ஏற்றியபின்தான், அடித்த பெட்ரோலுக்கு இது ஓவர்லோடாச்சே!

என க்வாண்டாஸ் விமானிக்கு மூளையில் அலாரம் அடித்திருக்கிறது. உடனே, பயணிகளை பண்போடு அழைத்து ஓவர்லோடு மேட்டரை காதில் சொல்லி இறக்கிவிட்டு, அடுத்த வண்டியைப் பிடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். நல்லவேளையாக யாரும் போராட்டம் நடத்தவில்லை!