பெண்ணின் கண்ணுக்குள் புழு!



-ரோனி

சாதாரண பிரச்னை என்று ஹாஸ்பிடல் வருபவர்கள், தம்முடைய பிரச்னையை டாக்டரின் வாயால் தெரிந்துகொண்டே உலகளவு புகழ்பெறுவார்கள். இந்த கேரளா பெண்மணியும் அப்படித்தான். ‘கண்ணைச்சுற்றி அடிக்கடி அரிக்குது...’ என டாக்டரிடம் கம்ப்ளைண்ட் கொடுத்த பெண்மணியை கண்ணில் டார்ச் அடித்து சோதித்த மருத்துவர் ஷாக்கானார். பின்னே, கண்ணுக்குள் 70 மி.மீ நீளத்தில் புழு நெளிந்து கொண்டிருந்தால் திக்கென்றுதானே இருக்கும்?

கேரளாவில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 56 வயது லலிதா கண்ணில்யானைக்கால் நோய் ஏற்படுத்தும் டைரோபிலேரியாஜெனஸ் என்ற புழு நெளிந்துகொண்டிருந்தது. அனஸ்தீஸியாவை ஏற்றி பத்தே பத்து நிமிடங்களில் ஆபரேஷனை முடித்துவிட்டனர் அரசு மருத்துவமனை டாக்டர்கள். இப்போது அந்த ஆபரேஷன் வீடியோ ஆன்லைனில் செம ஹாட்!