சுதேசி ஜிபிஎஸ்!



- ரோணி

இந்தியா விரைவில் தனித்துவமான சுதேசி ஜிபிஎஸ் சாட்டிலைட் நாடு எனும் பெருமையை நெஞ்சில் தாங்கப்போகிறது.  இஸ்‌ரோ IRNSS1H எனும் புதிய சாட்டிலைட்டை விண்வெளியில் நிலை நிறுத்துவதற்கான கவுண்டிங்கை தொடங்கிவிட்டது.  ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட உள்ள இந்த செயற்கைக்கோள், முன்னர் ஏவி செயலிழந்த IRNSS1A எனும் செயற்கைக்கோளுக்கு மாற்று. இதில் மூன்று துல்லிய அணுக்கடிகாரங்களும் உள்ளன.

பிஎஸ்எல்விசி39 ராக்கெட் மூலம் 1,425 கி.கி எடையுள்ள செயற்கைக்கோள் செலுத்தப்படவிருக்கிறது. சரி, எதற்கு இந்த சாட்டிலைட்? ரயில்வே, ஆய்வுப்பணிகளுக்கும், இடம் சார்ந்த பணிகளுக்கும் இவை மிகவும் பயன்படும். அதோடு பேரழிவு மேலாண்மை, வாகனங்களை கண்டறிவது உள்ளிட்ட ராணுவ பணிகளுக்கும் அவசியமான சாட்டிலைட் இது. இந்த சீரிஸில் 2018ம் ஆண்டு ஏப்ரலில் அடுத்த சாட்டிலைட் ரிலீஸ்.