Woodடாலங்கடி ரோஜாக்கள்!



‘எப்பவுமே கோலிவுட் கொலுதானா? அக்கம் பக்கத்து அப்டேட் ஏதும் கிடையாதா?’ என நீங்கள் கேட்பதற்குள் இதோ ரிப்போர்ட் ரெடி. டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட்களைக் கலக்கி வரும் தென் இந்திய நியூ க்யூட் ஏஞ்சல்களின் ஸ்வீட் அப்டேட்ஸ்... மேக்ஸிமம் நியூயார்க். மினிமம் பெங்களூரூ என இன்டர்நேஷனல் மிக்ஸிங் பொண்ணு ‘சோலோ’ ஆர்த்தி வெங்கடேஷ். நம்பர் ஒன் மாடலான ஆர்த்திக்கு அக்கட தேசத்தில் வெல்கம் பொக்கே கொத்து கொத்தாக குவிய... ஆர்த்தி இப்போ ஹேப்பி.

பள்ளியில் படிக்கும் போதே, நடிக்க வந்தவர் நமீதா பிரமோத். அறிமுகமான படம் ‘டிராஃபிக்’ என்றாலும் நமீக்கு கிடைத்த படங்கள் எல்லாமே க்ரீன் சிக்னல். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தின் மூலம் இப்போது தமிழுக்கும் வருகிறார் இந்த குமரகத்து குமரி. ஆர்த்தி ரவி அறிமுகமான படம் ‘ஆங்க்ரி பேபிஸ்’. ‘இட்ஸ் எ பிளஸன்ட் பிகினிங்’ என மகிழ்கிறார் ஆர்த்தி. மாடலிங், மியூசிக் வீடியோ என செம கலக்கலோடு களம் இறங்கியவர், ‘ஆலமரா’வில் கிடைத்த பாராட்டுக்குப் பின் அங்கே பிசியாகி விட்டார்.

கோல்டன் ஸ்டார் கணேஷின் ஜோடியாக ‘முகுலு நாகே’ ஹீரோயின்களில் ஒருவர் தில்லி ரசகுல்லா அபூர்வா அரோரா. தன் 13 வயதிலேயே பாலிவுட் பக்கம் வந்த அபூர்வ, மராத்தியிலும், குஜராத்தியிலும் நன்கு தெரிந்த முகம். அபூர்வாவின் அடுத்த டார்கெட் கோலிவுட். தமிழில் சில படங்களில் நடித்த மதுரிமாவின் கன்னடப் பெயர் நைரா பானர்ஜி. அங்கே ‘சுபாரி சூர்யா’, ‘டைகர்’ என இரண்டு படங்கள் நடித்ததில் இப்போது கன்னடம் கொஞ்சம் பேசவும் வருகிறது என சிலிர்க்கிறார் நைரா.

கன்னடம் ஃபர்ஸ்ட், மலையாளம் நெக்ஸ்ட் என ரவுண்ட் கட்டி அடித்து வரும் மேக்னா ராஜ், (இங்கேயும் சில படங்களில் திறமை காட்டியவர்தான்) இப்போது கிக் பாக்ஸிங் சாம்பியன் கிரிஷ் கௌடாவின் டிரெயினிங்கில் பாக்ஸிங் கற்று வருகிறார். ஸோ, உஷாரு! ‘மாடலிங் சும்மா ஹாபியா பண்ணினது. நான் நடிகையாவேன்னு நினைச்சதில்லை...’ என தன் நடிப்பு முன்னோர்களின் வழியில் ஸ்டேட்மென்ட் விடுக்கும் நிவின்பாலியின் ‘நண்டுகளுடைய நாட்டில் ஒரிடைவேளா’ ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி, இப்போது டோலிவுட்டில் கல்யாண்ராமின் ஜோடியாகவும் கமிட் ஆகியிருக்கிறார்.

ஷர்மிளா மான்ட்ரே, சாண்டல் வுட்டிற்கு வந்து பத்து ஆண்டுகளாகிவிட்டது. நம்ம ஊர் த்ரிஷா போல அங்கே ஷர்மிளாவும்! தமிழில் எப்போதோ வெளிவந்த ‘மிரட்டல்’ கை கொடுக்காததால் மறுபடியும் பெங்களூரு வாசம். ஷிவ்ராஜ்குமாருடன் நடித்த ‘மாஸ் லீடர்’ பார்த்து இந்தியிலும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறார் ஷர்மிளா. கன்னட ஹீரோயின்களின் நம்பர் ஒன் ரேஸில் டாப் பொண்ணு ‘நிபுணன்’ ஸ்ருதி ஹரிஹரன். அரை டஜன் படங்களில் அங்கே ஸ்ருதி ரொம்ப பிஸி. ‘Create your own style... let it be unique for yourself... and identifiable for others’ - என்ற அன்னா வின்டோரின் பாலிஸிதான் ஸ்ருதியின் பாலிஸியும்.

ஷாலினி பாண்டே... செம ஹிட் கொடுத்த ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோயின். மத்தியபிரதேசத்தில் உள்ள ஜபல் பூரில் பிறந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே, தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். இன்னொரு ஹேப்பி நியூஸ். ஷாலினி, இப்போது ஜி.வி.பிரகாஷின் ‘100% காதல்’ மூலம் தமிழுக்கு வருகிறார்வாங்க ஷாலுமா! மும்பை முந்திரி ஹெபா படேலின் அதிர்ஷ்டக் காத்து டோலிவுட்டில்தான் சிலுசிலுக்குது. அங்கே மினிமம் பட்ஜெட் படமென்றாலே ஹெபாதான் ஃபர்ஸ்ட் சாய்ஸ். ‘அது சரி யார் அந்த பொண்ணு?’ என கேட்பவர்களுக்கு... தமிழில் ‘திருமணம் என்னும் நிக்ஹா’வில் நடித்தவர் இவர்! ‘கொடி’ அனுபமா பரமேஸ்வரனுக்கு தெலுங்கில் கை நிறைய படங்கள்.

ஹோம்லியை நம்பும் அனுபமா இப்போது ‘வேட்டகாடு’ படத்தின் மூலம் கன்னடத்திலும் கதவைத்தட்டியிருக்கிறார். சில்லுனு ஒரு க்ளாமர். ஜல்லுனு ஒரு ஹோம்லி லுக். இதுதான் லாவண்யா திரிபாதி. இங்கே ‘பிரம்மன்’ பட ஹீரோயின் என்றால் உங்களுக்கு புரிந்து விடும். வகைவகையான சாப்பாட்டை ரசித்து ருசிப்பது லாவண்யாவுக்கு பிடித்தது. ‘ஷூட்டிங் போற இடத்துல ஃபுட் ஸ்டால் கண்ணுல தென்பட்டால், மொதல்ல அங்கே விசிட் அடிச்சிடணும்னுதான் தோணும்’ என சப்புக் கொட்டுகிறார் லாவண்யா. கொஞ்சம் க்ளாமர், கொஞ்சம் ஸ்கோப் உள்ள கேரக்டரையே விரும்புகிறார் ‘துப்பறிவாளன்’ அனு இமானுவேல். ‘‘தெலுங்கு, மலையாளம், தமிழ் என மூன்று இண்டஸ்ட்ரீலயும் ஒரே மாதிரிதான் ஒர்க்கிங் ஸ்டைல் இருக்கிறது’’ என ஆச்சரியப்படுகிறார் அனு.

தொகுப்பு: மை.பாரதிராஜா