விழித்திரு



ஓரிரவு... நான்கு சம்பவங்கள்... பரபர கணங்களாய் நெஞ்சம் பதற வைப்பதே ‘விழித்திரு’. பர்ஸ் பறிபோகும் கிருஷ்ணா; அவரது காரில் பயணமாகும் எஸ்.பி.பி.சரண்; சில்லறைத் திருடர்கள் விதார்த் - தன்ஷிகா;

 கண் தெரியாத அப்பா வெங்கட் பிரபு -  மகள் சாரா; கோடீஸ்வர இளைஞன் - எரிக்கா... இவர்களை ஒரே புள்ளியில் கொண்டு போய் நிறுத்தும் திரைக்கதையின் துல்லியமே ‘விழித்திரு’.‘வன்முறை’ வசூலாகிக் கொண்டிருக்கும் வேளையில் கதையை அன்பிற்காகவும், கருணை வேண்டியும் பயன்படுத்தியது ஆறுதல். மிக எளிமையான ட்ரீட்மென்ட்டில் பரிணமிக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.

பதட்டப்படும் டிரைவராக கிருஷ்ணா பொருத்தம். தன்ஷிகா அவசர கதியிலும் தனித்து தெரியும் குரலே அழகு. விதார்த் கனகச்சிதம். வெங்கட்பிரபு, சாரா என இளகிய இதயங்களுக்கான இடமும் இருக்கிறது. சத்யன் மகாலிங்கத்தின் பின்னணி இசை  பேசுகிறது. ராத்திரி முழுவதும் ராஜாங்கம் செய்கிறது விஜய் மில்டனின் கேமரா. பரபரக்கும் சேஸிங் இரவு!

- குங்குமம் விமர்சனக்குழு