நேரத்தைக் குறைங்க சார்!



ஹைதராபாத்தில் மாணவர்கள் திடீர் போராட்டம். ஏன்? ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பதற்கா? டாய்லெட் வசதிகள் இல்லை என்பதற்காகவா? ம்ஹூம்! பள்ளி நேரத்தை கம்மி பண்ணச் சொல்லித்தான் போராட்டமே!தனியார் பள்ளி மாணவர்கள் போராட்டக்குரல் எழுப்பியதற்கு காரணம், பள்ளி டைமிங் காலை 6.30லிருந்து மாலை 6.30 வரை இருப்பதுதான்.

‘‘மற்ற பள்ளிகளின் டைமிங் 8am - 4.30pmதான். நாங்கள் பள்ளி முடிந்ததும் ட்யூஷன், ஹோம்வொர்க் செய்து முடித்து தூங்க இரவு 11 மணியாகிறது...’’ என கதறியிருக்கிறார்கள் மாணவர்கள். இவர்களுக்கு ஆதரவாக குழந்தைகள் அமைப்பான பலாலா ஹக்குல சங்கம் களமிறங்கியதால், விஷயம் கலெக்டர் ஆபீஸ் வரை சென்றுவிட்டது. ‘ஹோம்வொர்க்கை செக் பண்ண 30 நிமிஷம் எடுத்துக்கிட்டோம்’  என்பது பள்ளியின் செம கூல் பதில்.