பணக்காரர்களை வெளியேற்றும் இந்தியா!



சீனாவுக்கு அடுத்து இந்தியா, பணக்காரர்களை சொந்த நாட்டை விட்டு வெளியேற்றுவதில் இரண்டாமிடம் இடம்பிடித்துள்ளது. கடந்தாண்டில் மட்டும் சீனாவில் 10 ஆயிரம் ரிச்மேன்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக நியூவேர்ல்ட் வெல்த் அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் 7 ஆயிரம் பிசினஸ் புள்ளிகள் அமெரிக்கா, அரபு நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என கண்டம் விட்டு கண்டம் சொத்துக்களோடு ஜம்ப் ஆகியுள்ளனர்.

துருக்கி (1000), இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் (4000), ரஷ்யா (3000) என பல பசை பார்ட்டிகள் தேசத்தை மாற்றிக் கொண்டுவிட்டனர். ஆஸ்திரேலியா ஒப்பீட்டளவில் 10 ஆயிரம் பசை பார்ட்டிகளை ஈர்த்து கடந்த பத்து ஆண்டுகளில் தனது சொத்து மதிப்பை 20% உயர்த்தியுள்ளது. இப்படி அதிகரித்துக் கொண்டதில் ட்ரம்ப்பின் கழுகு தேசமான அமெரிக்காவுக்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது..

- ரோனி