இந்தியாவின் பெருமை!



ஸ்பெயினைச் சேர்ந்த ஹாரி அத்வால் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு ‘பிரைடு ஆஃப் பிர்மிங்காம்’ விருது வழங்கப்படவுள்ளது. எதற்காக என்பதுதான் மேட்டர். ஸ்பெயினின் வடமேற்கு பிர்மிங்காமில் திட்டமேலாளராக பணிபுரிந்து வரும் ஹாரி, தன் குடும்பத்துடன் லாஸ் ராம்பிளாஸ் அருகிலுள்ள ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றார். அப்போது பாதசாரிகள் மீது வேனை ஏற்றி தீவிரவாதிகள் திடீரென கொலைவெறித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

பாய்ந்து சென்ற ஹாரி, தாக்குதலில் காயம்பட்ட ஜூலியன் அலசாண்ட்ரோ காட்மன் என்ற ஏழு வயது சிறுவனைக் காப்பாற்ற முயற்சித்தார். ஆனாலும் சம்பவ இடத்திலேயே ஜூலியன் பரிதாபமாக இறந்து போனார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஹாரி செய்த இந்த காரியத்துக்காகத்தான் அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

- ரோனி