தேர்வு தற்கொலைகள் உச்சம்!



இந்தியாவில் மாணவர்களின் தற்கொலை அளவு 2014 - 2016க்குள் 26 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது என தேசிய  குற்ற ஆணையத்தின் அறிக்கை (NCRB) தெரிவிக்கிறது.

‘‘2016ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் 1,350, மேற்கு வங்காளம் 1,147, தமிழ்நாடு 981, மத்தியப்பிரதேசம் 838  என்ற எண்ணிக்கையில் மாணவர்களின் தற்கொலை நிகழ்ந்துள்ளது...’’ என உள்துறை அமைச்சர் ஹன்ஸ்‌ராஜ்  கங்காராம் அஹீர் இதை உறுதி செய்துள்ளார்.

இந்தளவு தற்கொலை நிகழக் காரணம், தேர்வுகள்தான். குறிப்பாக மேல்படிப்புகளுக்கான தேர்வுகள், ஐஐடி போன்ற  படிப்புகளுக்கான பெற்றோர்களின் ஆசை ஆகியவை மாணவர்களை தினசரி 18 மணிநேரம் பிழிந்தெடுக்கின்றன. இதனால் உடல்நலம், மனநலம் தடம் புரள தற்கொலை நிகழ்கிறது. இந்நிலை மாற உடனடி கவுன்சிலிங் தேவை,  மாணவர்களுக்கு மட்டுமல்ல; பெற்றோருக்கும்.  l

- ரோனி