பலான படம் பார்த்தவருக்கு கத்திவெட்டு!தெலுங்கானாவைச் சேர்ந்த முகமது க்வாயம் குரேஷி, மகன் காலித்திடம் கடமை தவறாமல் நடக்கும் கறார் கண்டிஷன் அப்பா. கேபிள் கம்பெனியில்  வேலை செய்யும் காலித், அவ்வப்போது ஜிலுஜிலு படங்களைப் பார்த்து பரவசமாவார்.

மகனை குரேஷி கடுமையாக எச்சரித்தும் பயனில்லை. பொறுத்துப் பார்த்த குரேஷி இரவில் காலித் தூங்கும்போது கறிக்கடை கத்தியை உயரே தூக்கி  மேலிருந்து கீழாக இறக்கினார். மகனின் மணிக்கட்டை வெட்டியேவிட்டார். இப்போது தந்தை ஜெயிலில். மகன் மருத்துவமனையில்.

-ரோனி