‘குறி’க்கோள்!



ரீடர்ஸ் வாய்ஸ்

வக்கீல் தொழில், படத்தயாரிப்பு என இறங்கி துப்பாக்கி சுடுதலிலும் பதக்கம் வெல்லும் ராஜசேகரின் ‘குறி’க்கோள் ஜெயிக்கட்டும்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; முருகேசன், கங்களாஞ்சேரி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

ஃபேஸ்புக்கில் நடந்த தகவல் கொள்ளையை விளக்கி, தகவல்களைப் பாதுகாக்க அறிவுறுத்திய கட்டுரை அமேஸிங்.
- முத்தமிழ்ச்செல்வி, புதுக்குடி; தேவதாஸ், பண்ணவயல்; கைவல்லியம், மானகிரி; ராமகண்ணன், திருநெல்வேலி; சிவக்குமார், திருச்சி; வளையாபதி,  தோட்டக்குறிச்சி; மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

‘கலெக்டர்ஸ்’ பகுதியில் கேமரா களஞ்சியமாகத் திகழும் சேகரின் கேமரா வீடு, ஆச்சரியப்
படுத்தியது.
- யோகானந்தம், ஈரோடு; பிரதீபா ஈஸ்வரன், சேலம்; சண்முகராஜ், திருவொற்றியூர்; மயிலைகோபி, அசோக்நகர்; பூதலிங்கம், நாகர்கோவில்;  நவீன்சுந்தர், திருச்சி; முருகேசன், கங்களாஞ்சேரி; முத்துவேல், கருப்பூர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; மதுபாக்யா, மும்பை; ராணி, கோவை;  வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘லன்ச்மேப்’ உபயத்தில், புத்தகத்தை கையில் வாங்கியதும் சேலம் மங்கள விலாசின் நான்வெஜ் அயிட்டங்களின் வாசம் ஜம்மென ஆளைத்தூக்கியது  போங்க!
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை; பூதலிங்கம், நாகர்கோவில்; நவாப், திருச்சி; ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; முத்துவேல், கருப்பூர்;  சண்முகராஜ், திருவொற்றியூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

போலிச் செய்திகளைப் பற்றிய அலசல் நிஜம். உண்மைக்கு உலை வைத்து பதற்றத்தை அரசியல் லாபத்தை ஏற்படுத்தும் ஃபேக் நியூஸ் பற்றி கவனம்  தேவைதான்.
- எஸ்.நாகராஜன், திருச்சி.

‘கவிதை வன’த்தின் மகள் வரைந்த வீட்டில் மரம் இல்லாதது குறித்த வரிகள் சூழலை கச்சிதமாக சொன்ன கவி வரிகள்.
- விஜயநிர்மலன், சென்னை; முத்துவேல், கருப்பூர்; தேவா, கதிர்வேடு; நவீன்சுந்தர், திருச்சி; நவாப், திருச்சி; இந்திரன், திருமுல்லைவாயில்; ராஜ்குமார்,
குன்னூர்.

பி.ஆர்.பந்துலுவின் மகள் விஜயலட்சுமியின் உழைப்பை பேசிய பேட்டி சூப்பருங்க!
- இசக்கிபாண்டியன், சென்னை; யோகானந்தம், ஈரோடு.

சென்னிமலை கவிவேந்தர் தமிழன்பனின் ஹைக்கூ கவிதைகள், தமிழுக்கு அவரின் மகத்தான பங்களிப்பு என்றே கூறவேண்டும்.
- மனோகர், கோவை; மதுபாக்யா, மும்பை.

தாயின் மனதைக் குழப்பும் தவறான செய்திகளை அடையாளம் காட்டியது அருமை.
- கோ.தியாகராஜன், நாகப்பட்டினம்.

வயதானாலும் தங்கமாய் மெருகேறும் அழகி நயன்தாராவின் ஸ்டில்கள் கொள்ளை அழகு!
- முருகேசன், கங்களாஞ்சேரி; சைமன்தேவா, விநாயகபுரம்; யோகானந்தம், ஈரோடு; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.
 
தேசப்பிதாவின் வார்தா கழிவறையை நினைவூட்டும் சூழல் மேம்பாட்டு கழிவறை இன்றைய சூழலுக்கு மிக அவசியமானது.
- மனோகர், கோவை; முத்துவேல், கருப்பூர்; சித்ரா, திருவாரூர்; மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி.

திருப்பரங்குன்றத்தின் பதிமூன்று வயது சிறுமி ரெப்லின் புகைப்படத்திறமை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தது.
- கைவல்லியம், மானகிரி; நவீனாதாமு, திருவள்ளூர்; பாக்கியவதி, மேக்காமண்டபம்; சைமன்தேவா, விநாயகபுரம்.