ஜீன்ஸ் அணிந்தால் திருநங்கை குழந்தை பிறக்கும்!



ஜீன்ஸ் அணிந்தால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பது வரை டாக்டர்கள் டிப்ஸ் சொல்லிவிட்டார்கள். ஆனால், கேரளாவைச் சேர்ந்த பேராசிரியர் ரஜீத்குமார் பேசியது போல உலகில் யாரும் யோசிக்கவே முடியாது! காசர்கோட்டில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர், ‘ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு திருநங்கை குழந்தைகள் பிறக்கும்’ என்று பேசியதோடு, ‘நடத்தை சரியில்லாத பெற்றோர்களுக்கு ஆட்டிசம் மற்றும் செரிபெரல் பால்சி பாதிப்பு கொண்ட குழந்தைகள் பிறக்கும்’ என வெடிகுண்டை வீசியிருக்கிறார். மக்களுக்கு மட்டுமே இது அதிர்ச்சி; மற்றபடி ரஜீத்குமாருக்கு இது இயல்பான பழகிய பேச்சுதான். முன்பு இதுபோல திருவனந்தபுரத்தில் பெண்கள் கல்லூரியில் தன் பரிசுத்த கலாசாரக் கருத்துக்களை எடுத்துக் கூற... அந்த இடமே மாணவிகளின் போராட்டத்தால் களேபரமானது!   


- ரோனி