பிச்சையெடுக்க விடுங்கள்!



மும்பையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் தியானேஸ்வர் அகிராவ் சின்சியராக வேலை பார்ப்பவர்தான். அதற்காக இரண்டு மாதங்கள் சம்பளம் வாங்காமலா பணியாற்ற முடியும்‘‘யூனிபார்மில் பிச்சை எடுக்க அனுமதிக்க வேண்டும்...’’ என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் தன் உயரதிகாரிகளுக்கு தியானேஸ்வர் கடிதம் எழுதியுள்ள செய்தி கசிந்து பலரையும் உச்சுக் கொட்ட வைத்துள்ளது.

கால் உடைந்து சிகிச்சை பெறும் மனைவியைப் பார்த்துக்கொள்ள மார்ச் 20 - 28 வரை லீவ் எடுத்தார். டூட்டி பற்றி ஆபீசில் சொல்லாததால் சம்பளத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ‘‘சம்பளத்தை நிறுத்தி வைத்ததால் மனைவியின் சிகிச்சை, பெற்றோர், குழந்தைகளுக்கான செலவுகளோடு கடன்களை எப்படி சமாளிப்பது எனத் தெரியவில்லை. அதனால்தான் முதல்வருக்கு கடிதம் எழுதினேன்!’’ என்கிறார் கான்ஸ்டபிள் தியானேஸ்வர்.        

- ரோனி