துர்கா பூஜைக்கு நிதியளிக்கும் சீனா!



மேற்குவங்கத்தின் புகழ்பெற்ற பண்டிகையான துர்கா பூஜைக்கு சீனா நிதியுதவி அளிக்கவிருக்கிறது. மாநிலத்துடன் நெருக்கமான கலாசாரம் மற்றும்  வணிக உறவு கொண்டுள்ள சீனா, சால்ட் லேக்கிலுள்ள தன் தூதரகம் மூலம் இப்பணியை செய்யப் போகிறது.

டோக்லம் பிரச்னை எழுந்தபோதும் பல்வேறு பூஜை நிகழ்வுகளில் சீனத் தூதரகம் பங்கேற்று காவல்துறையுடன் இணைந்து பரிசுகளை வழங்கியது.  மேலும் சீனக்கட்டுமானத்தைப் பயில கலைஞர்களைத் தேர்வு செய்து அனுப்பி பயிற்சியளித்தும் வருகிறது. கடந்தாண்டு சால்ட் லேக் ஏரியாவில்  ஸ்பெஷல் தீமில் நடந்த துர்கா பூஜையின் பட்ஜெட் நாற்பது லட்ச ரூபாய் என்பதை நினைவில் கொண்டு இச்செய்தியை மீண்டும் படியுங்கள்!

ரோனி