மாணிக்கம்!



ரீடர்ஸ் வாய்ஸ்

இயற்கைப் பேரிடர்களிலும் இலக்கு மாறாமல் செய்தியைக் கொண்டு வந்து சேர்க்கும் ஒடிஷா புறாக்கள் பற்றிய செய்தி புதுமை நியூஸ்.
- மனோகர்,கோவை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஜெயச்சந்திரபாபு, மடிப்பாக்கம்.

சென்னை - சேலத்துக்கு மூன்று பாதைகள் இருந்தும் பசுமை அழித்து அதிவேக சாலை தேவையா... என்ற எதார்த்த கேள்வியை எழுப்பியது பசுமை
வழிச்சாலை கட்டுரை.
- கோவிந்தராஜன், சென்னை; லக்‌ஷித், சென்னை; வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மனநலம் குலைந்த ஆன்மாக்களை பராமரிக்கும் ஈர நெஞ்சம் மகேந்திரன், மனிதருள் மாணிக்கம்தான்.
- மயிலை கோபி, திருவாரூர்; கதிர்வேல், கோவை; ஜெசி, சென்னை.

‘காட்டேரி’, ரத்தம் குடிக்கிற பேய் இல்லை என்று சொல்லிட்டு குட்டீஸுக்கான கதை என சீக்ரெட்டை சொல்லிட்டாரே இயக்குநர் டிகே!
- மயிலைகோபி, திருவாரூர்; பிரேமாபாபு, சென்னை.

சாலையோர சிறுவர், சிறுமிகள் வாய்ப்பு கிடைத்தால் தம் திறன்கள் மூலம் தேசத்தையே பெருமைப்படுத்துவார்கள் என்பதை உணர்ந்தோம்.
- லக்‌ஷித், சென்னை; சுரேஷ், கடலூர்.

தமிழர்களின் புகழை வெளிநாட்டினர் அறிய மியூசியம் தொடங்கி நடத்திவரும் பிரகாஷ் ஜெகதீசன் தம்பதியினர், அரிதிலும் அரிய மனிதர்கள்தான்.
- டி.எஸ்.தேவா, கதிர்வேடு; ரவி, சென்னை; சைமன்தேவா, விநாயகபுரம்; கோவிந்தராஜன், சென்னை; மதுபாக்யா, திருநெல்வேலி.

நேர்மையும் உண்மையான உழைப்பும் கொடுத்த வெற்றியைப் பகிர்ந்த விஷன்டைம் ராமமூர்த்தியின் ஸ்டோரி, செம இன்ஸ்பிரேஷன்.
- பிரேமாபாபு, சென்னை; சைமன் தேவா, விநாயகபுரம்.

நூற்றாண்டைக் கடந்த தண்ணீர் யுத்த வரலாற்றைப் படிக்கும்போது, நீரைப் பெறுவதில் இத்தனை சோதனைகளா என்று நினைத்து கலங்கிப்போனோம்.
- டி.ரவி, சென்னை.

பிர்தவ்ஸ்‌ ராஜகுமாரன் எழுதிய ‘நொய்யல் ஆறு’ சிறுகதையில் வறியவனின் ஒட்டிய வரி என்ற உவமை, இன்றைய ஆற்றின் நிலைமையை  கச்சிதமாகச் சொன்னது.
-மதுபாக்யா, திருநெல்வேலி; சந்திரமதி, சென்னை.

பெட்ரோல் விலையேற்றத்தைக் கூட இப்படி ஹாஸ்ய வழிகளில் நியாயப்படுத்த முடியுமா என ஆச்சரியப்படுத்தியது ராமனின் கட்டுரை.
- சந்திரமதி, சென்னை.

பஞ்சம் குறித்த ராஜாவின் படமும், பேராச்சி கண்ணனின் வரலாற்றுத் தகவல்களும் அக்காலக் கட்டத்தை நேரலையில் காணவைத்து பதற்றம்  ஏற்படுத்திவிட்டது.
- ஜெயச்சந்திரபாபு, சென்னை; கதிர்வேல், கோவை.

காடுகளுக்கும் வீட்டுத்தோட்டத்திற்குமுள்ள வேறுபாடுகளை கவனத்துடன் அலசியிருக்கிறது ஹோம் அக்ரி.
- பிரேமாபாபு, சென்னை.

கைதட்டி வாசிக்கும் உற்சாகத்தை அமுதனின் துளிர்க்கும் காதல் கவிதை வரிகள் தந்தன.
- மதுபாக்யா, திருநெல்வேலி.