பைக் படகு!ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் ஸ்வான்ஸ்காட் செய்த காரியம்தான் இன்று ஹாட் டாபிக்!சவுத்வேல்சிலுள்ள பெல்மான்ட் சாலையில் படகு ஒன்றை தனது ஸ்கூட்டரில் இணைத்து துறைமுகத்திற்கு ஓட்டிச் சென்றிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் உலகளவில் வைரலாகியுள்ளது.

சாலையில் படகை கொண்டு செல்ல, ஷேனின் லைசென்ஸ் காலாவதியானதுதான் இப்படி இவர் செய்யக் காரணம். இவரைப் பார்க்க கூட்டம் குவிந்து ட்ராஃபிக் சிக்கலாக... போலீஸ் இவரை கைது செய்தது. அபராதமாக எவ்வளவு வசூலிக்கலாம்
என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை!

பூசணி படகு!

ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு இங்கிலாந்தில் 619 கி.கி பூசணியில் படகைத் தயாரித்து அதில் டாம் பியர்சி என்பவர் துடுப்பு போட்டு ஸ்கெல்டர்கேட் பாலத்தை கடந்தது உலக சாதனையாகியுள்ளது. விரைவில் மக்கள் பார்வைக்கு பிரமாண்ட பூசணிப் படகை வைக்கப் போகிறார்கள்.

தொகுப்பு: ரோனி