குடை அதிபர்!அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியானாபோலிஸில் நடந்த பேரணியில் கலந்துகொண்டார். கிளம்பும்போது குடையைப் பயன்படுத்தியவர், விமானத்தில் ஏறும்போது அதனை எப்படி மடக்குவது என தெரியாமல் கீழே போட்டுவிட்டு சென்றது உலகெங்கும் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபருக்கு குடையை மடக்கத் தெரியவில்லை... என வீடியோ மீம் வடிவ கிண்டல், கேலிகளால் இணையம் அதிர்கிறது!

குட்டி ஹிட்லரை மன்னிச்சூ!

அமெரிக்காவின் கென்டக்கியைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் பிரான்ட் கோல்ட்பாச், ஹாலோவீன் திருவிழாவில் தன் தனித்துவத்தைக் காட்ட மகனுக்கு ஹிட்லர் கெட்அப் போட்டு, தானும் நாஜி வீரராக போட்டோவுக்கு போஸ் கொடுத்து அப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார்.

அவ்வளவுதான். ஹிட்லர் வேஷம் தப்பு என கமெண்டுகள் எகிறின. வேறுவழியின்றி பதிவை நீக்கிவிட்டு, ஹிட்லர் கெட்அப் தப்புதான் என மன்னிப்பு கேட்டுவிட்டார் பிரான்ட்.

தொகுப்பு: ரோனி