ராஜமவுலி மகனுக்கு திருமணம்!



அறிந்த செய்திதான். ‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் மகன் கார்த்திகேயாவும், தெலுங்கு நடிகரும், ‘லிங்கா’, ‘பைரவா’  படங்களின் வில்லனுமான ஜெகபதி பாபுவின் சகோதரர் ராம் பிரசாத்தின் மகளான பூஜாவும் காதலர்கள் என்பது.

கடந்த செப்டம்பர் மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் இரு வீட்டார் முன்னிலையில் நடந்தது.திருமணத்தை அப்படி  கமுக்கமாக நடத்த முடியாதே! அதனால் ஜெய்ப்பூரில் இருக்கும் 7 நட்சத்திர ஹோட்டலான ஃபேர்மாண்ட்டை புக் செய்திருக்கிறார்கள்.  அரண்மனை போலவே இருக்கும் இந்த ஹோட்டல் ஏராளமான இந்திப் படங்களில் செட் ப்ராபர்ட்டி ஆக இடம்பெற்றிருக்கிறது! டிசம்பர் 30 அன்று டும் டும் டும்!