தலைவர் வேற லெவல்! பேட்ட ஆச்சர்யங்கள்



சிறந்த பொழுதுபோக்குப் படங்களை மட்டுமே தரும் சன் பிக்சர்ஸின் லேட்டஸ்ட் தயாரிப்பு, ‘பேட்ட’. ஸ்டைலீஷ் ரஜினி நடிக்கும்  இப்படத்தின் பிரமாண்டமான இசைக் கொண்டாட்டத்தைப் பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து இண்டஸ்ட்ரியில் பேசுகிறார்கள். மரண மாஸ்  துள்ளும் ‘பேட்ட’  ஃபீவர் ஸ்டார்ட் ஆனதில் நெகிழ்ந்து மகிழ்வது ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல ;அதில் நடித்த மல்டி ஸ்டார்களும்தான்! அந்த  பிரபலங்கள் சிலரின் வாவ்... பொக்கேக்கள் இதோ...  

*‘‘கார்த்திக் என்னுடைய மிகப்பெரிய ரசிகர். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார். மொத்த டீமுமே என்  ரசிகர்களா அமைஞ்சது நான் செஞ்ச பாக்கியம்...’’ என சூப்பர் ஸ்டாரே பாராட்டியதில் நெகிழ்ந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

*‘பேட்ட’யின் ஜித்து விஜய்சேதுபதிதான். ‘‘ரஜினி சாரோட நடிக்கும்போது அவரை கவனிச்சேன். ஒரு ஆக்ட்டரா ஒவ்வொரு ஷாட்டுக்கும்  அவர் அவ்வளவு மெனக்கெடுறார்! ஆச்சரியமாகிடுச்சு. அதேபோல நவாசுதீன் சித்திக்கின் பெரிய ப்ளஸ், தன் இயல்பை அவர் நம்புறார்.  ஒவ்வொரு விஷயத்தையும் அவரோட ரியல் லைஃப்ல இருந்து எடுத்து பண்றார். ‘பேட்ட’ல நிறையவே கத்துக்கிட்டேன்!’’ என்கிறார்  பிரமிப்பு மாறாமல்!

*‘‘ரஜினி சார் கூட என் காம்பினேஷன்..! மறக்கவே முடியாதது. போஸ்டர் லுக் வந்த அன்னிக்கு அவ்ளோ பாராட்டுகள் கிடைச்சது.  ‘பேட்ட’யின் முழுக்கதையையும் என் கேரக்டரையும் முழுசா சொன்னார் கார்த்திக். அழகான ரோல் அது...’’ என கன்னத்து மச்சம் ஜொலிக்க  புன்னகைக்கிறார் சிம்ரன்.

* த்ரிஷாவின் கேரக்டர் பெயர் சரோ. ‘‘த ஒன் அண்ட் ஒன்லி ரஜினி சாரோட ஜோடியா நடிக்கணும்னு கனவு கண்டேன். அது  நனவாகியிருக்கு. It is with pride and happiness I present...’’ என தித்திக்கிறார் த்ரிஷ்.

* ஆடியோ நாயகன் அனிருத்தும் செம ஹேப்பி. ‘‘நான் இசையமைக்கும் 18வது படம் ‘பேட்ட’. அதிகாரபூர்வ அறிவிப்புக்கு சில நாட்களுக்கு  முன்னாடியே இசையமைக்கப்போறது நான்தான்னு தெரிஞ்சிடுச்சு. அந்த சந்தோஷத்தை டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்கிட்ட ஷேர்  பண்ணிக்கலாம்னு அவர்கிட்ட பேசினா, அவரும் அதே எக்ஸைட்டிங் மூடுல இருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரடியா விசிட் அடிச்சு, சில  சீன்கள் ஷூட் பண்றதை பார்க்கற வாய்ப்பு அமைஞ்சது. தலைவர் வேற லெவல்!ஒரு ட்ரீம் டீம் இதுல அமைஞ்சிருக்கு. எல்லாருமே  யங்ஸ்டர்ஸ். முதல்முறையா எஸ்பிபி சாரோட ஒர்க் பண்ணினது லவ்லி மொமன்ட். செம பாசிட்டிவ் எனர்ஜியை கொடுத்திருக்கார்  அவர்...’’ என புருவம் உயர்த்துகிறார் அனிருத்.

* ‘‘ரஜினி சாரை எல்லாம் நேர்ல சந்திச்சு பேசுவோமானு நினைப்பேன். ரொம்ப வருஷத்து ஆசை. இப்ப நண்பன் கார்த்திக்கால  நிறைவேறியிருக்கு. தலைவரோட நடிச்சிட்டேன். மேஜிக் மாதிரி இருக்கு...’’ கண்கள் படபடக்க பரவசமாகிறார் பாபிசிம்ஹா.

தொகுப்பு :மை.பாரதிராஜா