பட்டு துப்பட்டா



பட்டுப் புடவைகள், பட்டு சல்வார்கள், பட்டு தாவணிகள் மட்டும் வந்தால் போதுமா... பட்டு துப்பட்டாக்கள் வேண்டாமா..? இப்படிக் கேட்டது எந்த மகராசி என்று தெரியவில்லை. அவர் வாயில் கிலோ கணக்கில் சர்க்கரையைத் திணிக்க வேண்டும்!யெஸ். இதோ வந்தாச்சு பட்டு துப்பட்டாக்கள்! சென்ற ஆண்டு ஹன்சிகா முதல் ஐஸ்வர்யா ராய் வரை  பலரும் இதை அணிந்து போஸ் கொடுத்துவிட்டார்கள்; பெண்களை பெருமூச்சுவிட வைத்துவிட்டார்கள்; ஆண்களின் பிபியை எகிற வைத்துவிட்டார்கள்!

அச்சம் தவிர். பட்டு துப்பட்டா ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் எல்லாம் இல்லை! ஜஸ்ட் மிடில் க்ளாஸ் பட்ஜெட்தான் என்கிறார் டிசைனர் பிரியா ரெகன். ‘‘இதுல நிறைய ஸ்டைலிஷ் வெரைட்டி இருக்கு. கொஞ்சம் பெரிய கடைகள்ல ரெடிமேட் சல்வார்களாவே வாங்க முடியும். மெட்டீரியலா ரூ.1500ல ஆரம்பிச்சு சரிகையின் தரத்தைப் பொறுத்து ரூ.20 ஆயிரம் வரை ஆகும். ரெடிமேட் சல்வார் சூட்னா ரூ.2 ஆயிரத்துலயே தொடங்குது. தவிர துப்பட்டாவை மட்டும் ஆன்லைன்ல இல்லைனா பட்டுப் புடவை கடைகள்ல வாங்கலாம்...’’

என்று சொல்லும் பிரியா ரெகன், சில பெண்கள் தன்னிடம் சல்வாைர எடுத்துவிட்டு அதற்கு மேட்ச்சிங்காக சில்க் காட்டன் அல்லது பாகல்பூரி சில்க் அல்லது கான்ட்ராஸ்ட்டாக காட்டன் அல்லது ரேயான் காட்டன் சல்வாரை டிசைன் செய்து கொள்கிறார்கள் என்கிறார். ‘‘காட்டன், ரேயான் காட்டன்கள்ல சிம்பிள் சல்வாரை எடுக்கிறப்ப ரெண்டு மாதிரியா பயன்படுத்தலாம். ஒண்ணு அதே சல்வார் கூட கிராண்ட் பட்டு துப்பட்டா! இன்னொண்ணுமேட்ச்சிங்கா காட்டன் அல்லது பாலிஸ்டர் துப்பட்டாவாங்கி வைச்சுக்கிட்டு நிகழ்ச்சிக்கு ஏற்ப அணியலாம்!

பப்ளியான பெண்கள் சரியான ஃபிட்டிங்ல சல்வாரை டிசைன் செஞ்சு சில்க் துப்பட்டாவை ஒரு பக்கம் மடிப்பும், இன்னொரு பக்கம் சிங்கிளாவும் விட்டு பின் குத்திட்டா போதும். ரொம்ப குண்டா தெரியாது. ஒல்லியான பெண்கள் பின்பக்கம் நல்லா லோ நெக் பேட்டர்ன் சல்வார் கூட இந்த சில்க் துப்பாட்டாவை சிங்கிளா விட்டா பாலிவுட் ஸ்டைல் கிடைக்கும்!

35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அபீஸ் குர்தா மாதிரி காலர் நெக் லூஸ் ஃபிட் சல்வார் கூட பலாஸோ அல்லது ஸ்டிரைட் பேன்ட் கூட இந்த துப்பட்டாவை பயன்படுத்தலாம்.அதுவே 15 முதல் 25 வயதுள்ள பெண்கள்னா கிராண்ட் அனார்கலி, லெஹெங்கா... இப்படி எதுகூடவும் எப்படி வேணும்னாலும் பயன்படுத்தலாம்.

ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க. சல்வார் எப்படி இருந்தாலும் சில்க் துப்பட்டாவை மேல போட்டுக்கிட்டா அடுத்த நொடி கிராண்ட் லுக் கிடைச்சுடும்! இதனாலதான் செம டிமாண்ட்ல இருக்கு!பனாரஸி, பட்டோலா, காஞ்சிவரம், சந்தேரி, பிரிண்டட், எம்பிராய்டரி, சில்க் காட்டன், நெட்டட் சில்க்... இப்படி பல வகைகள்ல பட்டு துப்பட்டாக்கள் இருக்கு!

கிராண்ட் ஃபேன்ஸி சம்கி அல்லது டேங்லர் தோடுகளை இதுக்கு போட்டுக்கலாம். அல்லது டெம்பிள் கலெக்‌ஷன் மேட் ஃபினிஷிங் நகைகள் அணியலாம். இப்படி செஞ்சா இன்னும் கிராண்டா தெரியும்!

என்ன... பட்டு துப்பட்டா அணியறப்ப ஸ்லிப்பர், ஹேண்ட்பேக்குல கூடுதல் கவனம் செலுத்தணும். சாதாரண காலணி அணியாம கொஞ்சம் டிரெடிஷனல் லுக் சாண்டல் வகை ஸ்லிப்பர்ஸை தேர்வு செய்யணும்!’’ என்று சிரிக்கிறார் பிரியா ரெகன்.  

மாடல்: அக்‌ஷயா

மேக்கப்: Arupre makeup artist

ஷாலினி நியூட்டன்

தீபிகா முரளி