பளார்!



செலிபிரிட்டியாக இருப்பதன் சிரமத்தை அறிய வேண்டுமா..? ரகுல் ப்ரீத் சிங்கிடம் கேளுங்கள். பாவம் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கிறார். விஷயம் இதுதான். சென்ற வாரம் படப்பிடிப்புக்கு வந்தவர் காரில் இருந்து இறங்கியிருக்கிறார். அப்போது யாரோ அதை செல்போன் கேமராவில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் ஏற்றிவிட்டார். பிடித்தது சனி. எட்டு திசையில் இருந்தும் சரமாரியான கண்டனங்கள் ரகுலுக்கு குவிந்து வருகின்றன.

அதில் ஒரு சாம்பிள்தான் இங்கிருக்கும் ஸ்கிரீன் ஷாட்.விஷயம் இதுதான். காரில் இருந்து இறங்கியபோது எடுக்கப்பட்ட போட்டோவில் அவர் வெறும் சட்டை மட்டும் அணிந்திருப்பது போல் காணப்பட்டது. அதாவது ஷார்ட்ஸ் ரொம்ப ஷார்ட் ஆக அணிந்திருந்தார்.

அதுதான் இவ்வளவு கண்டனங்களுக்கும் காரணம்!      
                     

காம்ஸ் பாப்பா